என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெறுவதை ஆய்வு செய்த கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா. அருகில் கலெக்டர்
மழைநீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க தடுப்பணை
டெல்டா மாவட்டங்களில் மழைநீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க தடுப்பணை அமைக்கும் திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.3 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் 330 கிலோமீட்டர் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் கிராமத்துமேடு, சோழவித்தியாபுரம், ஆய்மழை உள்ளிட்ட கிராமத்தில் நடைபெற்று வரும் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கூடுதல் தலைமைச் செயலரிடம் விளக்கி கூறினார்.
அப்போது விவசாயிகள் அனைத்து பாசனவாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் தூர்வார வேண்டும் எனவும், பழுதடைந்த சட்டர் மற்றும் தடுப்பனைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது கூடுதல் தலைமை செயலர் கூறும்போது:-
காவேரி டெல்டாவில் 10 மாவட்டங்களில் 80 கோடி மதிப்பீட்டில் 4,965 கிலோமீட்டர் நீளத்திற்கு ஆறுகள். கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை தங்கு தடையின்றி விரைவாக சென்றடைய பணிகள் விரைவுபடுத்தப்பட்டு மே மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் மழை நீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க தடுப்பணைகள் அமைக்கும் திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என்றார்.
Next Story






