என் மலர்
நீங்கள் தேடியது "Operators"
- ஒப்படைக்காத ஆபரேட்டர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
- முதல்கட்டமாக 17 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 659 அரசு கேபிள் டி.வி., ஆபரேட்டர்கள் உள்ளனர். மொத்தம் 83 ஆயிரம் இணைப்புகளுக்கான செட்டாப்பாக்ஸ் வழங்கப்பட்டிருந்தது. அரசு கேபிள் டி.வி. படிப்படியாக வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. அவ்வகையில், மாவட்டத்தில் 73 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் மட்டுமே இயக்கத்தில் உள்ளன.
தமிழ்நாடு அரசு கேள்பிள் டிவி நிறுவனம், பயன்படுத்தாத செட்பாப் பாக்ஸ்களை ஒப்படைக்க ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டது. ஒப்படைக்காத ஆபரேட்டர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் 183 ஆபரேட்டர்களிடம், செயல்படாத நிலையில் உள்ள 10 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்களை திரும்பப்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, முதல்கட்டமாக 17 ஆபரேட்டர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அரசு கேபிள் டி.வி., நிறுவன தனி தாசில்தார் ரவீந்திரன் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் 183 ஆபரேட்டர்களிடம், சராசரியாக 10 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் பயன்பாடற்ற நிலையில் உள்ளன. முதல்கட்டமாக 17 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்களிடமிருந்து 900 பாக்ஸ் திரும்ப பெறப்பட்டுள்ளன.
அடுத்தடுத்து மற்ற ஆபரேட்டர்கள் மீது புகார் அளிக்கப்படும். பாக்ஸ்களை ஒப்படைக்காத பட்சத்தில், ஒரு பாக்ஸ் 1,726 ரூபாய் கணக்கிட்டு வசூலிக்கப்படுகிறது. உரிய அவகாசத்துக்குள் பாக்ஸ்களை ஒப்படைக்காதபட்சத்தில், சட்டரீதியான நடவடிக்கை கடுமையாக்கப்படும். மாவட்டத்தில் 532 ஆபரேட்டர்கள் சந்தா தொகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் முருகேசன் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் ஆபரேட்டர்களுக்கு தடையற்ற சிக்னலும், உபகரணங்களும் வழங்காமல் அவர்களின் மேல் சுமத்தப்பட்டுள்ள நிலுவை தொகையை ரத்து செய்ய வேண்டும்.
நாமக்கல்:
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் முருகேசன் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கேபிள் டிவி நிலுவை தொகை என்ற பெயரில் காவல்துறை மற்றும் வருவாய் துறையை பயன்படுத்தி, கேபிள் டிவி ஆபரேட்டர்களை குற்றவாளிகள் போல் சித்தரிப்பதை நிறுத்த வேண்டும். அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் ஆபரேட்டர்களுக்கு தடையற்ற சிக்னலும், உபகரணங்களும் வழங்காமல் அவர்களின் மேல் சுமத்தப்பட்டுள்ள நிலுவை தொகையை ரத்து செய்ய வேண்டும். முதல்- அமைச்சர் இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு நல வாரியம் அமைத்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.






