என் மலர்
நீங்கள் தேடியது "செட்-டாப் பாக்ஸ்"
- ஒப்படைக்காத ஆபரேட்டர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
- முதல்கட்டமாக 17 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 659 அரசு கேபிள் டி.வி., ஆபரேட்டர்கள் உள்ளனர். மொத்தம் 83 ஆயிரம் இணைப்புகளுக்கான செட்டாப்பாக்ஸ் வழங்கப்பட்டிருந்தது. அரசு கேபிள் டி.வி. படிப்படியாக வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. அவ்வகையில், மாவட்டத்தில் 73 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் மட்டுமே இயக்கத்தில் உள்ளன.
தமிழ்நாடு அரசு கேள்பிள் டிவி நிறுவனம், பயன்படுத்தாத செட்பாப் பாக்ஸ்களை ஒப்படைக்க ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டது. ஒப்படைக்காத ஆபரேட்டர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் 183 ஆபரேட்டர்களிடம், செயல்படாத நிலையில் உள்ள 10 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்களை திரும்பப்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, முதல்கட்டமாக 17 ஆபரேட்டர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அரசு கேபிள் டி.வி., நிறுவன தனி தாசில்தார் ரவீந்திரன் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் 183 ஆபரேட்டர்களிடம், சராசரியாக 10 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் பயன்பாடற்ற நிலையில் உள்ளன. முதல்கட்டமாக 17 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்களிடமிருந்து 900 பாக்ஸ் திரும்ப பெறப்பட்டுள்ளன.
அடுத்தடுத்து மற்ற ஆபரேட்டர்கள் மீது புகார் அளிக்கப்படும். பாக்ஸ்களை ஒப்படைக்காத பட்சத்தில், ஒரு பாக்ஸ் 1,726 ரூபாய் கணக்கிட்டு வசூலிக்கப்படுகிறது. உரிய அவகாசத்துக்குள் பாக்ஸ்களை ஒப்படைக்காதபட்சத்தில், சட்டரீதியான நடவடிக்கை கடுமையாக்கப்படும். மாவட்டத்தில் 532 ஆபரேட்டர்கள் சந்தா தொகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






