search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்த முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன்.
    X
    கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்த முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன்.

    மது, கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

    கீழ்வேளூர் கடைவீதியில் பசுமைப்படை வேன் மூலம் மது, கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கல்வித்துறை தேசிய பசுமைப்படை வேன் மூலம் மது, கள்ளச்சாராயம் பிளாஸ்டிக் இவற்றிற்கு எதிரான பிரச்சாரம் மேற்கொண்டனர். கீழ்வேளூர் கடைவீதியில் இந்த

    பிரச்சாரத்தை முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் துவக்கி வைத்தார்.மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், சிவக்குமார் ஓய்வு பெற்

     தலைமையாசிரியர் மணிமாறன், கீழ்வேளூர் அரசு உயர்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை ஆசிரியர் ரஞ்சித் மற்றும் நாகலூர் பசுமைப்படை ஆசிரியர் அருள் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் நெல்மணி கலைக்குழுவினரின் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் அனைவருக்கும் மஞ்சப்பை

    வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் செய்திருந்தார்.

    Next Story
    ×