என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைப்பற்றப்பட்ட கஞ்சா மூட்டைகளை நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பார்வையிட்ட போது எடுத்த படம்.
  X
  கைப்பற்றப்பட்ட கஞ்சா மூட்டைகளை நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பார்வையிட்ட போது எடுத்த படம்.

  வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 147 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கைப்பற்றப்பட்ட கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டு 7 பேரிடமும் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
  வேதாரண்யம்:

  நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நெய்விளக்கில் போலீசார் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் 2 கார்களையும் சோதனையிட்டனர்.

  அப்போது கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 கார்களில் இருந்த 7 பேரையும் போலீசார் கைது செய்து வேதாரண்யம் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

  இதில் 7 பேரும் வேதராண்யம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், கஞ்சாவை பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்தி வந்து நள்ளிரவில் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

  இதில் ரூ.36 லட்சம் மதிப்புள்ள 147 கிலோ கஞ்சா மூட்டைகள் இருந்தது. மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கீட்டமைன் என்ற போதை பொருளும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா மூட்டைகள் மற்றும் 2 கார்களையும் போலீசார் கைப்பற்றினர்.

  இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கைப்பற்றப்பட்ட கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டு 7 பேரிடமும் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

  7 பேரும் எங்கிருந்து கஞ்சா மற்றும் போதை பொருளை எடுத்து வந்தனர். இதில் மேலும் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்றும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
  Next Story
  ×