என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • அதன்படி நிகழாண்டிற்கான ஆண்டு திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருப்பூண்டி அடுத்த சோழவித்யாபுரத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தின் உபகோவிலான புனித சந்தனமாதா ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நிகழாண்டிற்கான ஆண்டு திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர்பவனி நடைபெற்றது. இதனையொட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல் சம்மனசு, அந்தோணியார், சூசையப்பர், சுவக்கின், சந்தனமாதா ஆகியோர் எழுந்தருளினர். முன்னதாக, வேளாங்கண்ணி தியான இல்லத்தின் இயக்குனர் செபஸ்தியான் தலைமையில் நவநாள், ஜெபம் உள்ளிட்ட சிறப்புத்திருப்பலி நடைபெற்றது.

    பின்னர், புனிதம் செய்ததை தொடர்ந்து சப்பரம் ஆலய வளாகத்திலிருந்து தொடங்கியது.முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இதனால் பொதுமக்கள் தரமற்ற அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் அப்பகுதி பரபரப்பு நிலவியது.

    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சி 14 வார்டுக்கு உட்பட்ட காடம்பாடி சவேரியார் கோவில் தெரு பகுதியில் சுமார் 1000 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள 5-ம் எண் அரசு நியாய விலைக்கடையில் வழங்கபடும் அரிசி தரமற்று உணவிற்கு பயன்படுத்த முடியாத நிலையில் வழங்கபடுவதாக கூறப்படுகிறது.

    மேலும் பழுத்த சிவப்பு நிற கலர்களில் வண்டுகள் மொய்த்து துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் சமைத்து உண்ணும் போதும் துர்நாற்றம் வீசுவதாகவும் தங்கள் குழந்தைகள் உணவை சாப்பிட முடியவில்லை என்றும் இந்தஅரிசியை வாங்க வேண்டும் என ஊழியர்கள் பொதுமக்களை நிர்பந்தி பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இதனால் பொதுமக்கள் தரமற்ற அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பு நிலவியது.

    எனவே தங்கள் பகுதிக்கு தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்நிலையில் கடந்த 20 நாட்களாகவெயில் தாக்கத்தால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது.
    • இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவக்கத்தில் இருந்து தற்போதுவரைவிட்டு விட்டு மழை பெய்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்புஉற்பத்தி நடைபெறுகிறது. இதில் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் 3 ஆயிரம் ஏக்கரிலும் இரண்டு தனியார் நிறுவனங்கள் 6 ஆயிரம் ஏக்கரிலும் உப்பு உற்பத்தி செய்கின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம்செப்டம்பர் மாதம் வரை உப்பு உற்பத்தி நடைபெறும்வழக்கமாக இந்த ஒன்பது மாதகாலத்தில் 6.50 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யபடும் இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்டபல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவக்கத்தில் இருந்து தற்போதுவரைவிட்டு விட்டு மழை பெய்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 20 நாட்களாகவெயில் தாக்கத்தால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வேதாரண்யம் பகுதியில் மழை பெய்தது. குறிப்பாக உப்பள பகுதியான கோடிக்காடு, அகஸ்தியன் பள்ளி, கடிநெல்வயல் பகுதியில் சற்று கூடுதலாக மழை பெய்ததுஇதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் எப்போதும் பரபரப்பாக வேலை செய்துவரும் உப்பள பகுதி வெறிச்சோடி காணப்பட்டன

    இதனால் உப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாத்திகளில் உள்ள உப்பை சேகரித்து தார்பாய்களை மற்றும் பனைமட்டைகளை கொண்டு மூடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மீண்டும் உற்பத்தி தொடங்குவதற்கு ஒரு வார காலம் ஆகும் எனவும்அடிக்கடி மழை பெய்தால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி இலக்கைஎட்ட முடியாது எனவும் இதனால் உப்பு விலை ஏறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    • தினமும் இரவு வேதநாயகி அம்மன் பூதவாகனம், வெள்ளி ரிஷப வாகனம் ஆகியவற்றில் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.
    • வேதநாயகி அம்மனுக்கு பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதார ண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், தினமும் இரவு வேதநாயகி அம்மன் காமதேனு வாகனம், அன்ன வாகனம், இந்திரா விமானம், பூதவாகனம், வெள்ளி ரிஷப வாகனம் ஆகியவற்றில் வீதியுலா வரும் காட்சி நடைபெறும். அதன்படி, நேற்று இரவு அம்மன் மகாரதோற்சவக்காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.

    நேற்று அரசு போக்கு வரத்து தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வேதநாயகி அம்மனுக்கு பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர். பின்னர், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெ ற்றது. இரவு தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சார்பாக புஷ்ப பல்லக்கில்அம்மன் வீதியுலா காட்சி நடைபெ ற்றது. விழாவில் யா ழ்ப்பாணம் பவரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி மற்றும் உபயதாரர்கள் ஓதுவார் மூர்த்திகள்கோவில் அலுவலர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கள்ளிமேடு கேசவன் குழுவி னரின் நாதஸ்வர இன்னிசை கச்சேரியும், அன்னதானமும் நடைபெற்றது.

    • 26-வது தமிழ்நாடு மாநில அளவிலான கைப்பந்து போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
    • போட்டியில் செங்கல்பட்டு, பொள்ளாச்சி, ஈரோடு, சென்னை, திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 கல்லூரி அணிகள் பங்கேற்றன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நாகை மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் மன்சூர் கைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் 26-வது தமிழ்நாடு மாநில அளவிலான கைப்பந்து போட்டி தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாராணி தலைமை தாங்கினார். நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் போட்டியை தொடக்கி வைத்து விளையாட்டு வீரர்களை வாழ்த்தினார். இப்போட்டியில் செங்கல்பட்டு, பொள்ளாச்சி, ஈரோடு, சென்னை, திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 கல்லூரி அணிகள் பங்கேற்றன.

    இந்நிகழ்ச்சியில் திட்டச்சேரி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அப்துல் ரஷீத், கலைமகள் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் குடியரசு, திட்டச்சேரி நிர்வாக சபை தலைவர் அப்துல் நாசர், நாகை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மயிலாடுதுறை கைப்பந்து சங்க தலைவர் ராஜ்கமல், மயிலாடுதுறை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் பாபு, தலைவர் செந்தில்குமார், சர்வதேச கைப்பந்து வீரர் முகமது ரியாசுதீன் மற்றும் கைப்பந்து பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தார்.
    • முடிவில் ஆசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    வேதாரண்யம் :

    வேதாரண்யம் அருகே தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைவர் நிஷாந்தி தலைமையில் பெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நடப்பு ஆண்டிற்குரிய கல்வி திட்டம் குறித்தும் பள்ளி வளர்ச்சி பணிகளின் செயல்பாடுகள் குறித்து தலைமையாசிரியர் தெட்சணாமூர்த்திஉட்பட கல்வி குழுவாளர்கள் பேசினர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஐடி கார்டு, பெல்ட், ஷூ உட்பட உபகரணங்கள் வழங்குவது, அரசிடம் விதிகள் படி பள்ளிக்கு தேவையான உதவிகள் பெறுவது என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஆசிரியர் முருகானந்தம் நன்றிகூறினார்.

    • இது குறித்து முருகானந்தம் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார்.
    • இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

    இந்நிலையில் தனது மனைவி சூரியா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கொடைக்கானல் சுற்றுலா சென்று இருந்தார். இன்று காலை திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை, 3000 அமெரிக்கா டாலர், ஈராக் நாட்டு ரியால் 3000 ரொக்கம் 400 ஆயிரம்,பாஸ்போர்ட் உள்ளிட்டவை திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    அப்போது வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இது குறித்து முருகானந்தம் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    • வீட்டில் கட்டி வைத்திருந்த ஆடு ஒன்றை மர்ம நபர்கள் திருடி செல்வதை பக்கத்து வீட்டு பெண் ஒருவர் பார்த்துள்ளார்.
    • போலீசார் ஆடு திருடி சென்ற லோடு ஆட்டோவை விரட்டி கங்களாஞ்சேரியில் மடக்கி பிடித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் விற்குடி ஊராட்சி வீரபோகம் மேலத்தெருவை சேர்ந்தவர்(வயது 61) விவசாயி.இவர் தனது வீட்டில் ஆடு வளர்த்து வருகிறார். சம்பவதன்று நள்ளிரவில் ராமலிங்கம் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் வீட்டில் கட்டி வைத்திருந்த ஆடு ஒன்றை மர்ம நபர்கள் திருடி செல்வதை பக்கத்து வீட்டு பெண் ஒருவர் பார்த்துள்ளார்.அதனை உடனடியாக ராமலிங்கத்திடம் கூறியுள்ளார்.

    இது குறித்து ராமலிங்கம் திருக்கண்ணபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் ஆடு திருடி சென்ற லோடு ஆட்டோவை விரட்டி கங்களாஞ்சேரியில் மடக்கி பிடித்தனர்.அப்போது லோடு ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் 3 பேர் தப்பி சென்றனர்.லோடு ஆட்டோவை ஓட்டிவந்த டிரைவர் கீழ்வேளூர் ஒன்றியம் கூத்தூர் வண்ணான்குளம் தெற்கு தெருவை சேர்ந்த மோகன் விஸ்வா (22)என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் விஸ்வா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து ஆடு திருடியது தெரியவந்தது.

    இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விஸ்வாவை கைது செய்தனர்.மேலும் தப்பிச்சென்ற கூத்தூர் பகுதி சேர்ந்த ராஜேஷ், ஆழியூர் ஸ்ரீநாத் உள்பட பேரை தேடி வருகின்றனர்.

    • தார்ப்பாலின் ஜிப்சம் சிங்சல்பேட் வரப்பு உளுந்து விதைகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
    • வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பதிவு செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடுபொருட்கள் வழங்கப்படும்.

    வேதாரண்யம்:

    வேதாரணயம் ஒன்றியத்தில்கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட செயல்படுத்தப்படும் ஊராட்சிகளான வாய்மேடு, பஞ்சநதிகுளம்கிழக்கு, பிராந்தியங்கரை, தகடூர் ,தேத்தாக்குடிதெற்கு ஆகிய கிராமங்களில் வேளாண்மை இடுபொருள்கள் சிறப்பு திட்டங்களாக வேளாண் கருவிகள் தொகுப்பு தார்ப்பாலின் ஜிப்சம் சிங்சல்பேட் வரப்பு உளுந்து விதைகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தத் திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகவும் பதிவு செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடுபொருட்கள் வழங்கப்படும். மேற்கண்ட தகவலை வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்தார். உடன் வேளாண்மை அலுவலர்கள் அனிஷ், நவீன்குமார் இருந்தனர்.

    • நாள் ஒன்றுக்கு 9 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்குவதற்கான தொகை வழங்கப்படுவதாகும்.
    • மீட்டரின் அளவு படியே எதிர்காலத்தில் பேரூராட்சி கட்டணம் செலுத்தப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் தலைமையில் குடிநீர் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

    இதில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. , தாசில்தார் ரவிச்சந்திரன், தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், ராஜு, பேரூராட்சி அலுவலர் குமார், பேருராட்சிமன்ற தலைவர் செந்தமிழ்செல்வி, பிச்சையன், துணைத் தலைவர் கதிரவன், அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் அவ்வை பாலசுப்ரமணியன், சௌரிராஜன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    கூட்டத்தில் தலைஞாயிறு பேரூராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். திருத்துறைப்பூண்டி நகராட்சி தொகுதிக்கு மக்கள் தொகை கணக்கின்படி குடிநீர் வழங்குவதில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலையில் பற்றாக்குறை அளவை சுமூக கணக்கிட்டு குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.

    நாள் ஒன்றுக்கு 9 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்குவதற்கான தொகை வழங்கப்படுவதாகும். ஆனால் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுவதால் உடனடியாக தண்ணீர் ஏற்றும் இடத்தில் அளவீடு கருவி பொருத்துவது எனவும் மீட்டரின் அளவு படியே எதிர்காலத்தில் பேரூராட்சி கட்டணம் செலுத்தப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி குடிநீர்வடிகால் வாரிய நீர் ஏற்று மையத்தில் திருத்துறைப்பூண்டி மற்றும் தலைஞாயிறு தண்ணீர் ஏற்றும் நேரத்தை தனித்தனியாக குறிப்பிட்டு போர்டுவைக்க வேண்டும்.

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கஜா புயல் காலம் வரை நீர் ஏற்றும் மின் நிலையத்திற்கு 24 மணி நேரமும்மின்சாரம் வழங்கப்பட்டது போல் தற்போது வழங்க வேண்டும் .ஒரு நாள் விட்டு ஒரு நாள் 12 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கவேண்டுமென கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

    • இலங்கைக்கு காரில் கஞ்சா கடத்தி வரும் போது வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு பகுதியில் பிடிப்பட்டனர்.
    • 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கோவில்பத்து மேலக்காட்டை சேர்ந்தவர்சரபோஜி ராஜன் (வயது 52), வெளிப்பாளையத்தை சேர்ந்தவர்இளமாறன் (46) .

    இவர்கள் சிலருடன் சேர்ந்து இலங்கைக்கு காரில் கஞ்சா கடத்தி வரும் போது வேதாரண்யம் அடுத்தநெய்விளக்கு பகுதியில் பிடிப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு சொகுசு கார், சுமார் 147கிலோ கஞ்சா பிடிபட்டது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரபோஜிராஜன், இளமாறன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்பேரில், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பரிந்துரையின்படி சரபோஜிராஜன் ,இளமாறன் ஆகிய 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • வாஞ்சூர் ரவுண்டானா பனங்குடி இடையே உள்ள மின்கம்பம் ஒன்று சிமெண்ட் காரைகள் முழுவதும் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
    • சாலை வழியே செல்லும் பொதுமக்கள் எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படுமா? என்ற அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாகூரில் இருந்து மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு பனங்குடி ஊராட்சி பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட பகுதியில் சேர்ந்த மக்கள் அன்றாடம் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர நாகூர்-நன்னிலம் சாலையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

    இந்த நிலையில் வாஞ்சூர் ரவுண்டானா பனங்குடி இடையே உள்ள மின்கம்பம் ஒன்று சிமெண்ட் காரைகள் முழுவதும் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அதேபோல் எதிரே புதுமனை தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்து மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் சாலை வழியே செல்லும் பொதுமக்கள் எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படுமா? என்ற அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன்னர் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.

    ×