என் மலர்
நாகப்பட்டினம்
- இந்தியா முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
- தேசியக்கொடி மற்றும் தேசியக்கொடியை பராமரிக்கும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் வீடு வீடாக தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வருகின்ற 13, 14, 15 ஆகிய 3 நாட்கள் இந்தியா முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளு க்கும் தேசியக்கொடிவழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா தலைமை தாங்கினார்.
பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 2562 வீடுகளுக்கு சென்று தேசியக்கொடி மற்றும் தேசியக்கொடியை பராமரிக்கும் துண்டு பிரசுர ங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
- பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி வளையல்களை காணிக்கையாக வழங்கினர்.
- 10 ஆயிரத்து 8 வளையல்கள் மாலையாக கோர்க்கப்பட்டு காளியம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள வடக்கு பொய்கைநல்லூர் எல்லை ரோடு பகுதியில் நந்தவன காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்தே தினமும் அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி வளையல்களை காணிக்கையாக வழங்கினர்.
இதில் 10 ஆயிரத்து 8 வளையல்கள் மாலையாக கோர்க்கப்பட்டு காளியம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பஞ்சமுக மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக 11 வகையான திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டுதரிசனம் செய்தனர்.
- ரூ.63 லட்சம் செலவில் கட்டி முடிக்கபட்ட வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
- நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் குத்துவிளக்கு ஏற்றி பணிகளை தொடக்கி வைத்தார்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் சாலையில் ரூ.63 லட்சம் செலவில் கட்டி முடிக்கபட்ட வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் கானொளி காட்சி மூலம் திறந்துவைத்தார். திறப்பு விழாவிற்கு பின் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் குத்துவிளக்கு ஏற்றி பணிகளை தொடக்கி வைத்தார்.
பின்பு அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் வேதாரண்யம்துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் இன்ஸ்பெ க்டர்கள் கன்னிகா, சுப்ரியா உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
- தொழிலாளியான இவர் குடித்துவிட்டு மனைவி, மகன்களுடன் தகராறு செய்துள்ளார்.
- ஆத்திரமடைந்த பரமசிவம் மற்றும் மனைவி பாக்கியவதி, மகன் மகாதேவன் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் நரசிம்மமூர்த்தியை வெட்டியுள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அடுத்த முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் நரசிங்கமூர்த்தி. கட்டிடத் தொழிலாளியான இவர் குடித்துவிட்டு மனைவி- மகன்களுடன் தகராறு செய்துள்ளார். இதனால் அருகில் உள்ள உறவினர் பரமசிவம் வீட்டில் சென்று அவரது மனைவி தனது மகன்களுடன் தங்கியிருந்தார்.
அப்போது அங்கு வந்த நரசிம்மமூர்த்திக்கும், பரமசிவத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பரமசிவம் மற்றும் மனைவி பாக்கியவதி, மகன் மகாதேவன் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் நரசிம்மமூர்த்தியை வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே நரசிம்மமூர்த்தி உயிரிழ ந்தார்.இது குறித்து தகவலறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முல்லைப்பெரியார் அணையை திறந்ததால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- மின்சாரத்துறையை தனியார் மயமாக்கினால் ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசியபோது கூறியதாவது,
தமிழக அரசு முல்லைப் பெரியார் அணையை திறந்ததால் இங்குள்ள விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அ.தி.மு.க சட்டமன்ற துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசி வருவதை கண்டிக்கிறோம். அரசியல் ஆதாயத்திற்காக எதை வேண்டுமனாலும் பேசிவருகின்றனர். இதை மையப்படுத்தி அ.தி.மு.க போராட்டம் நடத்தினால், அதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தென்மாவட்டங்களில் போட்டி போராட்டாம் நடத்தும். தமிழகம் மற்றும் கேரளா ஆகிய 2 மாநில மக்களையும் தூண்டிவிட்டு கலவர சூழ்நிலையை உருவாக்குவது அரசியல் பிழைப்பு. மின்சாரத்துறையை தனியார் மயமாக்கினால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதுடன், ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
- நகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கான கொடிகள் நகராட்சி, பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
- ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியினை ஏற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சியில் 75வது சுதந்திர தின விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் நகராட்சி, பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் கடைகளுகளிலும் வரும் ஆகஸ்ட் 13 தேதி முதல் 15 தேதி வரை இந்திய தேசியக்கொடி ஏற்றிட நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று நாட்களிலும் நகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளு க்கான கொடிகள் நகராட்சி, பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் விநியோகிக்க திட்டம் துவக்கபட்டது முதற்கட்டமாக ஆறு ஆயிரம் தேசிய கொடியினை வீடுகளுக்கு வழங்கும் திட்டத்தை வேதாரணியம் உப்பு சத்திய கிரக நினைவு கட்டிடத்தில் நகரமன்ற தலைவர் புகழேந்தி துவக்கிவைத்தார் நிகழ்ச்சியில் நகரமன்ற துணை தலைவர் மங்களநாயகி, நகராட்சி கமிஷனர் ஹேமலாதா பொறியளார் முகமது இப்ராஹிம், சுதந்திர போராட்ட வீரர் சர்தார் வேதாரத்தினம் பேரன் கேடிலியப்பன் ரோட்டரி சங்க தலைவர் செந்தில் நகரமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொ ண்டனர்
தேசியகொடியினை பெற்றுக்கொண்டு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் தேசியக்கொடியினை ஏற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும். தனியார் கட்டிட உரிமையா ளர்கள் மற்றும் வணிகர்கள் தங்களது கட்டிடங்களில் மேற்கண்ட நாட்களில் நமது நாட்டின் தேசிய கொடியினை ஏற்றி சுதந்திர போரட்ட நிகழ்வுகளில் முக்கிய பங்குவகித்த வேதாரண்யத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என நகரமன்ற தலைவர் புகழேந்தி கேட்டுக் கொண்டுள்ளர்.
- மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொடிகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- தனியார் கட்டிட உரிமையாளர்கள் தங்களது கட்டிடங்களில் தேசிய கொடியினை ஏற்றி பெருமை சேர்த்திட வேண்டும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டத்தில் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் வரும் ஆகஸ்ட் 13 தேதி முதல் 15 தேதி வரை தேசியக்கொடி ஏற்றிட மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
3 நாட்களிலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கான கொடிகள் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அக்கொடியினை பெற்றுக்கொண்டு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் தேசியக்கொடியினை ஏற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும்.
அதேபோல் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஒளிரும் தேசியக்கொடி அமைக்கப்படவுள்ளது. தனியார் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் தங்களது கட்டிடங்களில் மேற்கண்ட நாட்களில் நமது நாட்டின் தேசிய கொடியினை ஏற்றி பெருமை சேர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பின்னா தேசிய கொடியினை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
- விதை முளைப்பு திறன் மற்றும் பாரம்பரிய ரகங்களை விதைப்பண்ணையில் சாகுபடி செய்வது பற்றி வலியுறுத்தினர்.
- தரமான விதைகள் உற்பத்தி செய்யும் வரைமுறைகள் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்து கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகல் வட்டாரம் திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் 2022-23 வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தரமான விதை உற்பத்தி தொழில் நுட்ப பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கலைச்செல்வன் தலைமையில் நடைப்பெற்றது.
அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி பயிற்சியின் நோக்கம் மற்றும் விதைப்பண்ணையின் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார்.பயிற்சியில் சிறப்பு விருந்தினராக ஓன்றியக்குழு உறுப்பினர் சரவணன் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். திருச்செங்காட்ங்குடி ஒன்றியத்குழு உறுப்பினர் இளஞ்செழியன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கலியமூர்த்தி ஆகியோர் விதை முளைப்பு திறன் மற்றும் பாரம்பரிய ரகங்களை விதைப்பண்ணையில் சாகுபடி செய்வது பற்றி வலியுறுத்தினர்.
விதை சான்று அலுவலர் மாறன் விதைப்பண்ணையில் கடைபிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள் பற்றியும் மற்றும் தரமான விதைகள் உற்பத்தி செய்யும் வரைமுறைகள் பற்றியும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்து கூறினார். தோட்டக்கலை உதவி அலுவலர் செல்லபாண்டியன், தோட்டக்கலைத்துறை சார்பான திட்டங்கள் பற்றி விவசாயிகளிடம் விளக்கினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஜெயராமன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரபு ஆகியோர் செய்து இருந்தனர்.
- நிகழ்ச்சிக்கு வேளாண் இணை இயக்குனர் அகண்டராவ் தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
- நீர்முனை ஊராட்சியில் வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.38 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வேளாண்மை விரிவாக்க மையம் திறப்பு.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வாய்மேட்டில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள வேளாண்மை விரிவாக்க மையம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண் இணை இயக்குனர் அகண்ட ராவ் தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சிசுந்தரம், ஒன்றிய குழு உறுப்பினர் வேதாரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக வேளாண் அலுவலர் யோகேஷ் வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா, திமுக ஒன்றிய பொறுப்பாளர் உதயம் முருகையன், ஒன்றிய குழு உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலிங்கம் நன்றி கூறினார். இதே போல தலைஞாயிறு ஒன்றியம் நீர்முனை ஊராட்சியில் வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.38 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வேளாண்மை விரிவாக்கம் மையத்தை தமிழ்நாடு விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகா குமார் தலைமை தாங்கி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர் நவீன்குமார், வேளாண் உதவி இயக்குனர் கருப்பையா, வேளாண் உதவி அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- இந்த பேரூராட்சியில் 10 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
- 3-ம் தவணை தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்ற இலக்கோடும் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சியில் கடந்த சில மாதங்களாக அரசு மருத்துவமனை சுகாதார துறையினர் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை இந்த பேரூராட்சியில் 10 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கோடும், 3-ம் தவணை தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்ற இலக்கோடும் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், கிராம சுகாதார செவிலியர் மரகதம், கிராம நிர்வாக அலுவலர் குமரேசன் மற்றும் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். நடமாடும் மருத்துவ குழுவினர் புறப்பட்டு பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்துகின்றனர். நேற்று சுமார் 200 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன்மூலம் பேரூராட்சி பகுதியில் 80 சதவீத தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சொரூபங்களை வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் புனிதம் செய்து வைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய திருத்தேர்பவனி நடைபெற்றது.
வேளாங்கண்ணி பேராலய பொருளாளர் உலகநாதன் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல்சம்மனசு, அந்தோணியார், ஆரோக்கியமாதா உள்ளிட்ட சொரூபங்களை வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் புனிதம் செய்து வைத்தார் தேர் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- பஸ் நிலைய பகுதியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
- போலீசார் மனோஜ் பிரபாகரை கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சக்தி விநாயகர் கோவில் தெரு மாத்தாங்காடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் மகன் மனோஜ் பிரபாகர் (23). இவர் வேளாங்கண்ணி பேருந்து நிலையப் பகுதிகளில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து வேளாங்கண்ணி இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் மனோஜ் பிரபாகரை கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர்.






