என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண்மை விரிவாக்க மையம் திறப்பு
    X

    வேளாண்மை விரிவாக்க மையத்தை வேளாண்மை இணை இயக்குனர் அகண்டராவ் திறந்து வைத்தார்.

    வேளாண்மை விரிவாக்க மையம் திறப்பு

    • நிகழ்ச்சிக்கு வேளாண் இணை இயக்குனர் அகண்டராவ் தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
    • நீர்முனை ஊராட்சியில் வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.38 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வேளாண்மை விரிவாக்க மையம் திறப்பு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வாய்மேட்டில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள வேளாண்மை விரிவாக்க மையம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண் இணை இயக்குனர் அகண்ட ராவ் தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சிசுந்தரம், ஒன்றிய குழு உறுப்பினர் வேதாரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக வேளாண் அலுவலர் யோகேஷ் வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா, திமுக ஒன்றிய பொறுப்பாளர் உதயம் முருகையன், ஒன்றிய குழு உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலிங்கம் நன்றி கூறினார். இதே போல தலைஞாயிறு ஒன்றியம் நீர்முனை ஊராட்சியில் வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.38 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வேளாண்மை விரிவாக்கம் மையத்தை தமிழ்நாடு விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகா குமார் தலைமை தாங்கி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர் நவீன்குமார், வேளாண் உதவி இயக்குனர் கருப்பையா, வேளாண் உதவி அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×