என் மலர்
நாகப்பட்டினம்
- நுகர்வோர் பயன்பாட்டிற்கு பூமிக்கு அடியில் கொண்டு செல்ல ப்பட்ட புதைவட மின்கம்பி பாதை திட்டம் மற்றும் தமிழகத்தில் முதல்மு றையாக சமையலறைக்கு கொண்டு செல்லப்பட்ட எரிவாயு குழாய் இணைப்பு பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு செய்தனர்.
- இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாகை மற்றும் வேளாங்கண்ணியில் தமிழக அரசு 62 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் பூமிக்கு அடியில் புதைவட மின்கம்பி அமைக்கும் பணியை துவங்கின.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நுகர்வோர் பயன்பாட்டிற்கு பூமிக்கு அடியில் கொண்டு செல்ல ப்பட்ட புதைவட மின்கம்பி பாதை திட்டம் மற்றும் தமிழகத்தில் முதல்மு றையாக சமையலறைக்கு கொண்டு செல்லப்பட்ட எரிவாயு குழாய் இணைப்பு பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு செய்தனர்.
நாகை மாவட்டத்தில் அவ்வப்போது ஏற்படும் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களால் பல்வேறு சமயங்களில் மின் தடை ஏற்படுகிறது. இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாகை மற்றும் வேளாங்கண்ணியில் தமிழக அரசு 62 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் பூமிக்கு அடியில் புதைவட மின்கம்பி அமைக்கும் பணியை துவங்கின. இப்பணிகள் யாவும் முடிவுற்ற நிலையில் 11, ஆயிரம் நுகர்வோர்கள் பயன்பாட்டிற்குகொண்டு வரப்பட்ட புதைவட மின்கம்பி பாதைதிட்ட பணிகளை வேளாங்க ண்ணியில் சட்டமன்ற பேரவை பொது நிறுவ னங்கள் குழுவினர் பார்வை யிட்டனர்.
தாம்பரம் எம்.எல்.ஏ ராஜா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணசாமி, நாகை மாலி, எஸ்.எஸ்.பாலாஜி, ஜெயக்குமார் உள்ளிட்ட குழுவினர் பணிகள் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து நாகை மாவட்டம் சீயாத்தமங்கையில் பூமிக்கு அடியில் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ள எரிவாயு இணைப்பு நிலையத்தினையும் ஆய்வு செய்தனர்.
கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு பைப் லைன் மூலமாக சமையலறைக்கு எரிவாயு கொண்டு சென்ற திட்டத்தினை, டோரண்டோ கேஸ் நிறுவனத்தினர் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினருக்கு எடுத்துரைத்தனர். சமையலறைக்கு எடுத்துச் செல்லப்படும் எரிவாயு இணைப்பு திட்டத்தின் விவரங்களை கேட்டறிந்த தமிழக சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு, டோரண்டோ கேஸ் நிறுவனத்தின் பணிகளையும் பாராட்டினர்.
- தமிழ்நாட்டில்போதைப் பொருளை ஒழிப்பதற்கு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை களை எடுத்து வருகிறார்.
- போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ளும்படிசட்டமன்ற உறுப்பினர்களுக்கு கைப்பட கடிதம் எழுதினார்.
நாகப்பட்டினம்:
தமிழ்நாட்டில் போதைப் பொருளை ஒழிப்பதற்கு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை களை எடுத்து வருகிறார்.அந்த வகையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ளும்படிசட்டமன்ற உறுப்பினர்களுக்கு கைப்பட கடிதம் எழுதினார்.
மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை அழைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.அதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற, போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ பங்கேற்று உரையாற்றினார்.
போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்ததோடு, கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.இதல் நாகப்ப ட்டினம் நகர்மன்றதலைவர் இரா.மாரிமுத்துஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- தீயணைப்பு படையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
- 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார் தீயில் எரிந்து நாசமாகின.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஏராளமான வாகனங்கள் நாகை ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்று அந்த பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வாகனங்கள் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கின. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கார் தீயில் எரிந்து நாசமாகின. தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
- தனது சொந்த செலவில் வேதாரண்யம் பகுதியில் தேசியக் கொடிகள் வழங்கினார்.
- பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு 3000 தேசியக் கொடிகள் வழங்கினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகானந்தம். இவர் தனது சொந்த செலவில் வேதாரண்யம் பகுதியில் உள்ள கடினல்வயல் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி, கருப்பம் புலம் தெற்கு காடு நடுநிலைப்பள்ளி, ஆதனூர் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு 3000 தேசியக் கொடிகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கலந்துகொண்டனர்.
- அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக துவங்கியது.
- ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 475 மாணவ- மாணவிகள் கல்லூரிக்கு வந்து நேரிடையாக நடைபெற்ற காலந்தாய்வில் கலந்துகொண்டனர்.
வேதாரண்யம்;
வேதாரண்யம் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக துவங்கியது இதில் ஆன்லைன் மூலம் விண்ணபித்த 475 மாணவ- மாணவிகள் கல்லூரிக்கு வந்து நேரிடையாக நடைபெற்ற காலந்தாய்வில் கலந்துகொண்டு தங்ளுக்கு விருப்பான பாடப்பிரிவுகளை தேர்வு செய்து கல்லூரியில் சேர்ந்தனர்.
கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் முருகன்சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரசிரியர்கள் அறிவுச் செல்வம், பிரபாகரன் மாரிமுத்து,ராஜா பங்கேற்றனர்.
- காலமாக உள்ளதால் அனைத்து ஊராட்சியியிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாகின்றனர்.
- நேரத்தில் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவது மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வண்டுவாஞ்சேரியில் இருந்து அண்ணா பேட்டை, வாய்மேடு, தகட்டூர், மருதூர், ஆயக்காரன்புலம் வழியாக வேதாரண்யம் செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் மருதூர் கடைத்தெருவில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆயிரக்கணக்கான லிட்டர் செல்லக்கேன் ஆற்றில் வீணாக செல்கிறது.
தற்போது கோடை காலமாக உள்ளதால் அனைத்து ஊராட்சியியிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாகின்றனர். இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவது மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகிறது.
இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்கள் மூலமாகவும், போன் மூலம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை குடிநீர் வடிகால் வாரியத்தினர்சரி செய்ய வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்கள் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
நாகப்பட்டினம் :
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் உஷா தலைமை தாங்கினார். ஒன்றிய இணை செயலாளர் கவிதா வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர் தமிழரசன், மாவட்ட இணை செயலாளர் சௌடையா ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்கள் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் ஒன்றிய பொருளாளர் மாலா நன்றி கூறினார்.
- மக்கள் தொடர்பு முகாமில் 54 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
- முகாமில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை நகல் தொடர்பான மனுக்கள் அளிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் தண்ணிலப்பாடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 54 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்சங்கர் தலைமையில் நடை பெற்ற முகாமில் வருவாய்த்துறை சார்பில் 31 பயனாளிகளுக்கும், வேளாண்மை துறை சார்பில் 18 பயனாளிகளுக்கும், தோட்டக்கலை துறை சார்பில் 5 பயனாளிகள் என மொத்தம் 54 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.முகாமில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை நகல் தொடர்பான மனுக்கள் அளிக்கப்பட்டது.
முகாமில் நாகை மாலி எம்.எல்.ஏ, வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குலா அகண்டராவ், வருவாய் வட்டாட்சியர் ரமேஷ் குமார், வருவாய் ஆய்வாளர் தேவேந்திரன், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்பாலசுப்பி ரமணியன், துணை வேளா ண்மைஅலுவலர் ரெங்கநாதன், தண்ணி லப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் செல்வேந்திரன் உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர்.
- மீனவர்களை கைது செய்ததுடன் அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
- மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 35). இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 6-ந் தேதி மீனவர்கள் 9 பேர் நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை அக்கரைப்பேட்டை திடீர்குப்பத்தை சேர்ந்த காமராஜ் (40), பூவரசன் (22), அன்பு (32), அக்கரைப்பேட்டையை சேர்ந்த செல்லையன் (52), பாலு (55), செல்லதுரை (35), முருகானந்தம் (42), ஆரிய நாட்டு தெருவை சேர்ந்த ஸ்டீபன் (25), முருகன் (24) ஆகிய 9 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.
மீனவர்களை கைது செய்ததுடன் அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து திரிகோணமலை துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாகை கீச்சாங்குப்பம் மற்றும் அக்கரைப்பேட்டை மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 9 பேரையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இன்று காலை அவ்வழியே சென்ற கிராம மக்கள் கோவிலின் முகப்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துதனர்.
- அம்மனின் கழுத்தில் இருந்த 4 கிராம் தாலி திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள மேலவாழக்கரை ஊராட்சி காளியம்மன் கோவில் தெருவில் வீரமாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் தினமும் மதியம் 1 மணி அளவிலேயே தினசரி கால பூஜை நடைபெறும். இந்நிலையில் இன்று காலை அவ்வழியே சென்ற கிராம மக்கள் கோவிலின் முகப்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துதனர்.
இதுகுறித்து அவர்கள் திருக்குவளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் கோவிலுக்கு விரைந்து வந்த போலீசார் கோவிலின் உள்ளே சென்று பார்த்ததில் 2 கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.
மேலும் அம்மனின் கழுத்தில் இருந்த 4 கிராம் தாலி திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
மேலும் கோவிலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணமும் திருடப்பட்டுள்ளதாக கிராம மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
மேலும் கோவில் சார்பில் வசூல் செய்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.54 ஆயிரம் பணம் திருடப்பட்டிருப்பதும விசாரணையில் தெரியவ ந்துள்ளது. இது தொடர்பாக திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொ ண்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
- பேராலயத்தின் ஆண்டு திருவிழா வரும் 29-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்குகிறது.
- சி.சி.டி.வி கேமரா அமைத்தல், உயர்கோபுரம் அமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நடைபெற்று வருகிறது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம்மாவட்டம் வேளாங்கண்ணியில் கீழ்திசை நாடுகளின் லூர்துநகரம் என அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.
பேராலயத்தின் ஆண்டு திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி பேராலய ஆலய முகப்பில் புதுப்பிக்கும்பணி, வர்ணம் பூசுதல், வெள்ளை அடித்தல், அலங்கார மின் விளக்குகள் அமைத்தல், அருகில் உள்ள கட்டிடங்களை புதுப்பித்தல் மற்றும் சாரம் அமைத்தல் பணிகள், குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு சிசிடிவி கேமரா அமைத்தல், உயர்கோபுரம் அமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்க்கு, பேராலய நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
- 6 மாணவர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரத்து 600 வீதம் ரூ. 21 ஆயிரத்து 600 ஐ உதவி தொகையாக வழங்கினார்.
- ஆசிரியர் ஆதவன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி படித்து வரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் எழிலரசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்ஆசிரியர்கள் இளஞ்செழியன், தியாகராஜன், நாகராஜன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ராஜாஜிகாட்டை சேர்ந்த கோவிந்தராஜ் உயர்கல்வி பயின்று வரும் 6 மாணவர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரத்து 600 வீதம் ரூ. 21 ஆயிரத்து 600 ஐ உதவித் தொகையாக வழங்கினார். மாணவர்களின் சார்பில் சீகரன் ஏற்புரை வழங்கினார். ஆசிரியர் ஆதவன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார், அரங்க சுப்பிரமணியன் நன்றி கூறினார்.






