என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது எடுத்த படம்.

    சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்கள் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    நாகப்பட்டினம் :

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் உஷா தலைமை தாங்கினார். ஒன்றிய இணை செயலாளர் கவிதா வரவேற்றார்.

    ஒன்றிய செயலாளர் தமிழரசன், மாவட்ட இணை செயலாளர் சௌடையா ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்கள் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் ஒன்றிய பொருளாளர் மாலா நன்றி கூறினார்.

    Next Story
    ×