search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பூமிக்கு அடியில் புதைவிட மின்கம்பி பாதை திட்டம்
    X

    சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு நடந்தது.

    பூமிக்கு அடியில் புதைவிட மின்கம்பி பாதை திட்டம்

    • நுகர்வோர் பயன்பாட்டிற்கு பூமிக்கு அடியில் கொண்டு செல்ல ப்பட்ட புதைவட மின்கம்பி பாதை திட்டம் மற்றும் தமிழகத்தில் முதல்மு றையாக சமையலறைக்கு கொண்டு செல்லப்பட்ட எரிவாயு குழாய் இணைப்பு பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு செய்தனர்.
    • இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாகை மற்றும் வேளாங்கண்ணியில் தமிழக அரசு 62 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் பூமிக்கு அடியில் புதைவட மின்கம்பி அமைக்கும் பணியை துவங்கின.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நுகர்வோர் பயன்பாட்டிற்கு பூமிக்கு அடியில் கொண்டு செல்ல ப்பட்ட புதைவட மின்கம்பி பாதை திட்டம் மற்றும் தமிழகத்தில் முதல்மு றையாக சமையலறைக்கு கொண்டு செல்லப்பட்ட எரிவாயு குழாய் இணைப்பு பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு செய்தனர்.

    நாகை மாவட்டத்தில் அவ்வப்போது ஏற்படும் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களால் பல்வேறு சமயங்களில் மின் தடை ஏற்படுகிறது. இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாகை மற்றும் வேளாங்கண்ணியில் தமிழக அரசு 62 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் பூமிக்கு அடியில் புதைவட மின்கம்பி அமைக்கும் பணியை துவங்கின. இப்பணிகள் யாவும் முடிவுற்ற நிலையில் 11, ஆயிரம் நுகர்வோர்கள் பயன்பாட்டிற்குகொண்டு வரப்பட்ட புதைவட மின்கம்பி பாதைதிட்ட பணிகளை வேளாங்க ண்ணியில் சட்டமன்ற பேரவை பொது நிறுவ னங்கள் குழுவினர் பார்வை யிட்டனர்.

    தாம்பரம் எம்.எல்.ஏ ராஜா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணசாமி, நாகை மாலி, எஸ்.எஸ்.பாலாஜி, ஜெயக்குமார் உள்ளிட்ட குழுவினர் பணிகள் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து நாகை மாவட்டம் சீயாத்தமங்கையில் பூமிக்கு அடியில் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ள எரிவாயு இணைப்பு நிலையத்தினையும் ஆய்வு செய்தனர்.

    கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு பைப் லைன் மூலமாக சமையலறைக்கு எரிவாயு கொண்டு சென்ற திட்டத்தினை, டோரண்டோ கேஸ் நிறுவனத்தினர் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினருக்கு எடுத்துரைத்தனர். சமையலறைக்கு எடுத்துச் செல்லப்படும் எரிவாயு இணைப்பு திட்டத்தின் விவரங்களை கேட்டறிந்த தமிழக சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு, டோரண்டோ கேஸ் நிறுவனத்தின் பணிகளையும் பாராட்டினர்.

    Next Story
    ×