என் மலர்
நாகப்பட்டினம்
- காதாரத்துறை, காவல்துறை, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட 3 குழுக்களாக அதிரடியாக திடீர் சோதனை நடத்தினர்.
- கைப்பற்றபட்ட கடைகளுக்கு ரூ.5000 வீதம் 20 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய, பழைய பேருந்து நிலையங்கள், பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறை, காவல்துறை, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட 3 குழுக்களாக அதிரடியாக திடீர் சோதனை நடத்தினர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ், பான்மசாலா, குட்கா மற்றும் காலாவதியான உணவுப பொருட்கள் உள்ளிட்ட 50 ஆயிரம் மதிப்பீலான பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றி பாதுகாப்பான முறையில் அழித்தனர். கைப்பற்றபட்ட கடைகளுக்கு ரூ.5000 வீதம் 20 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் எச்சரித்தனர்.
- மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி எற்பாட்டினை காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
- கும்பகோணத்தை சேர்ந்த சிவாச்சாரியார் ரமேஷ், தமிழ் முறைப்படி வேள்வி செய்தார்.
நாகப்பட்டினம்:
நாகூர் குயவர் மேட்டு தெருவில் உள்ள காங்கேயர் மடத்தில் உள்ள காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் ஆடி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. தமிழ் புலவர் காங்கேய சித்தருக்கு கும்பகோணத்தை சேர்ந்த சிவாச்சாரியார் ரமேஷ் தமிழ் முறைப்படி வேள்விசெய்தார்.
தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. உபயத்தை பெருங்கடம்பனூரை சேர்ந்த நித்தியானந்தம், ஜெயகுமார் குடும்பத்தினர் செய்தனர்.
மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி எற்பாட்டினை காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
- நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் மூவர்ண தேசியக்கொடி ஊர்வலத்தை பார்வையிட்டு மாணவ- மாணவிகளுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை கூறினார்.
- மழலைகள் சுமந்து சென்ற மூவர்ண தேசிய கொடியின் ஊர்வலத்தை வழி நெடுகளிலும் நின்றிருந்த பொதுமக்கள் கண்டு வியந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசியல் கட்சி சார்பில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அங்கு களைகட்டி வருகின்றன. இதைப்போல் நேற்று நாகப்பட்டினம் பால்பண்ணைசேரி இ.ஜி.எஸ் பிள்ளை சர்வதேச பள்ளி சார்பில் சுதந்திர தின விழாவின் மகத்துவத்தை மக்கள் அறிந்திடும் வகையில் 75 அடி நீளம் கொண்ட தேசியக்கொடி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாகப்பட்டினம் அவுரித்திடலில் துவங்கிய கொடி ஊர்வல பேரணி தொடங்கி தொடர்ந்து பள்ளி மழலைகள் 75 அடி நீளம் கொண்ட மூவர்ண தேசிய கொடியை கைகளில் ஏந்தியவாறு சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பால் பண்ணைச்சேரியில் அமைந்துள்ள இஜிஎஸ் பிள்ளை சர்வதேச பள்ளி வரை பேரணியாக சென்றனர்.
அப்போது மழலைகள் சுமந்து சென்ற மூவர்ண தேசிய கொடியின் ஊர்வலத்தை வழி நெடுகளிலும் நின்றிருந்த பொதுமக்கள் கண்டு வியந்தனர். பின்னர் நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் மூவர்ண தேசியக்கொடி ஊர்வலத்தை பார்வையிட்டு மாணவ- மாணவிகளுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை கூறினார்.
- அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்குபோதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுக்க ஆணையிடப்பட்டது.
- திருமருகல் அரசுமேல்நிலை ப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
நாகப்பட்டினம் :
நாகை மாவட்டம் திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியில்போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையின் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் தாம்பரம் எம்.எல்.ஏ ராஜா, குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏக்கள் பூந்தமல்லி கிருஷ்ணசாமி, திருப்போரூர் பாலாஜி, கீழ்வேளுர் நாகைமாலி, பெருந்துறை ஜெயகுமார் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன் எடுத்துக்கொண்டனர்.
முதலமைச்சர் அறிவிப்பின்படி ஒருவார காலத்திற்கு போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் தொடக்க மாக அனைத்து பள்ளி களிலும் மாணவ ர்களுக்குபோதை ப்பொருள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுக்க ஆணையிடப்பட்டது.
இதை தொடர்ந்து திருமருகல் அரசுமேல்நிலை ப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை, அனைவரும் எடுத்து க்கொண்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தி னையும் தொடங்கி வைத்தனர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மைதானத்தில் நாகை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
- குப்பைகள் நிறைந்து நெருக்கடியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை காடம்பாடி பகுதி யில் பழைய ஆயுதப்படை மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் நாகை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் குப்பைகள் நிறைந்து நெருக்கடியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வானுயர பறந்த கரும்புகை மண்டலத்தை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து விரைந்து வந்த 10-க்கும் மேற்பட்ட நாகை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஒரு கார் கருகி நாசமானது. தீ விபத்து குறித்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 9 நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறைப்படுத்தி உள்ளனர்.
- இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடராமல் மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதவது,
கடந்த 10ம்தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 9 நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறைப்படுத்தி உள்ளனர்.
இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இலங்கையின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியில் அவர்களுக்கு உதவியாக இந்தியா பல்வேறு நிதி உதவிகள், பெட்ரோலிய பொருட்கள், மருந்து பொருட்களை வழங்கி உதவிகரமாக உள்ளது.
இப்படிப்பட்ட சூழலிலும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் தொடர்கிறது. இது தொடர்பாக எந்த அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது. தமிழக முதல்-அமைச்சர் இது சம்பந்தமாக மத்திய அரசை வலியுறுத்தி அந்த மீனவர்களையும், படகுகள், மீன்பிடி வலைகளையும் மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடராமல் மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இலங்கையின் தற்போதைய சூழலை வைத்து கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நுகர்வோர் பயன்பாட்டிற்கு பூமிக்கு அடியில் கொண்டு செல்ல ப்பட்ட புதைவட மின்கம்பி பாதை திட்டம் மற்றும் தமிழகத்தில் முதல்மு றையாக சமையலறைக்கு கொண்டு செல்லப்பட்ட எரிவாயு குழாய் இணைப்பு பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு செய்தனர்.
- இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாகை மற்றும் வேளாங்கண்ணியில் தமிழக அரசு 62 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் பூமிக்கு அடியில் புதைவட மின்கம்பி அமைக்கும் பணியை துவங்கின.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நுகர்வோர் பயன்பாட்டிற்கு பூமிக்கு அடியில் கொண்டு செல்ல ப்பட்ட புதைவட மின்கம்பி பாதை திட்டம் மற்றும் தமிழகத்தில் முதல்மு றையாக சமையலறைக்கு கொண்டு செல்லப்பட்ட எரிவாயு குழாய் இணைப்பு பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு செய்தனர்.
நாகை மாவட்டத்தில் அவ்வப்போது ஏற்படும் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களால் பல்வேறு சமயங்களில் மின் தடை ஏற்படுகிறது. இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாகை மற்றும் வேளாங்கண்ணியில் தமிழக அரசு 62 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் பூமிக்கு அடியில் புதைவட மின்கம்பி அமைக்கும் பணியை துவங்கின. இப்பணிகள் யாவும் முடிவுற்ற நிலையில் 11, ஆயிரம் நுகர்வோர்கள் பயன்பாட்டிற்குகொண்டு வரப்பட்ட புதைவட மின்கம்பி பாதைதிட்ட பணிகளை வேளாங்க ண்ணியில் சட்டமன்ற பேரவை பொது நிறுவ னங்கள் குழுவினர் பார்வை யிட்டனர்.
தாம்பரம் எம்.எல்.ஏ ராஜா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணசாமி, நாகை மாலி, எஸ்.எஸ்.பாலாஜி, ஜெயக்குமார் உள்ளிட்ட குழுவினர் பணிகள் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து நாகை மாவட்டம் சீயாத்தமங்கையில் பூமிக்கு அடியில் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ள எரிவாயு இணைப்பு நிலையத்தினையும் ஆய்வு செய்தனர்.
கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு பைப் லைன் மூலமாக சமையலறைக்கு எரிவாயு கொண்டு சென்ற திட்டத்தினை, டோரண்டோ கேஸ் நிறுவனத்தினர் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினருக்கு எடுத்துரைத்தனர். சமையலறைக்கு எடுத்துச் செல்லப்படும் எரிவாயு இணைப்பு திட்டத்தின் விவரங்களை கேட்டறிந்த தமிழக சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு, டோரண்டோ கேஸ் நிறுவனத்தின் பணிகளையும் பாராட்டினர்.
- தமிழ்நாட்டில்போதைப் பொருளை ஒழிப்பதற்கு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை களை எடுத்து வருகிறார்.
- போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ளும்படிசட்டமன்ற உறுப்பினர்களுக்கு கைப்பட கடிதம் எழுதினார்.
நாகப்பட்டினம்:
தமிழ்நாட்டில் போதைப் பொருளை ஒழிப்பதற்கு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை களை எடுத்து வருகிறார்.அந்த வகையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ளும்படிசட்டமன்ற உறுப்பினர்களுக்கு கைப்பட கடிதம் எழுதினார்.
மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை அழைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.அதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற, போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ பங்கேற்று உரையாற்றினார்.
போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்ததோடு, கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.இதல் நாகப்ப ட்டினம் நகர்மன்றதலைவர் இரா.மாரிமுத்துஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- தீயணைப்பு படையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
- 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார் தீயில் எரிந்து நாசமாகின.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஏராளமான வாகனங்கள் நாகை ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்று அந்த பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வாகனங்கள் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கின. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கார் தீயில் எரிந்து நாசமாகின. தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
- தனது சொந்த செலவில் வேதாரண்யம் பகுதியில் தேசியக் கொடிகள் வழங்கினார்.
- பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு 3000 தேசியக் கொடிகள் வழங்கினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகானந்தம். இவர் தனது சொந்த செலவில் வேதாரண்யம் பகுதியில் உள்ள கடினல்வயல் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி, கருப்பம் புலம் தெற்கு காடு நடுநிலைப்பள்ளி, ஆதனூர் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு 3000 தேசியக் கொடிகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கலந்துகொண்டனர்.
- அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக துவங்கியது.
- ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 475 மாணவ- மாணவிகள் கல்லூரிக்கு வந்து நேரிடையாக நடைபெற்ற காலந்தாய்வில் கலந்துகொண்டனர்.
வேதாரண்யம்;
வேதாரண்யம் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக துவங்கியது இதில் ஆன்லைன் மூலம் விண்ணபித்த 475 மாணவ- மாணவிகள் கல்லூரிக்கு வந்து நேரிடையாக நடைபெற்ற காலந்தாய்வில் கலந்துகொண்டு தங்ளுக்கு விருப்பான பாடப்பிரிவுகளை தேர்வு செய்து கல்லூரியில் சேர்ந்தனர்.
கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் முருகன்சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரசிரியர்கள் அறிவுச் செல்வம், பிரபாகரன் மாரிமுத்து,ராஜா பங்கேற்றனர்.
- காலமாக உள்ளதால் அனைத்து ஊராட்சியியிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாகின்றனர்.
- நேரத்தில் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவது மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வண்டுவாஞ்சேரியில் இருந்து அண்ணா பேட்டை, வாய்மேடு, தகட்டூர், மருதூர், ஆயக்காரன்புலம் வழியாக வேதாரண்யம் செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் மருதூர் கடைத்தெருவில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆயிரக்கணக்கான லிட்டர் செல்லக்கேன் ஆற்றில் வீணாக செல்கிறது.
தற்போது கோடை காலமாக உள்ளதால் அனைத்து ஊராட்சியியிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாகின்றனர். இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவது மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகிறது.
இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்கள் மூலமாகவும், போன் மூலம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை குடிநீர் வடிகால் வாரியத்தினர்சரி செய்ய வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






