search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
    X

    கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் சட்டபேரவை உறுப்பினர்கள் பங்கேற்ற போதை பொருள் ஒழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

    • அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்குபோதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுக்க ஆணையிடப்பட்டது.
    • திருமருகல் அரசுமேல்நிலை ப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

    நாகப்பட்டினம் :

    நாகை மாவட்டம் திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியில்போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையின் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் தாம்பரம் எம்.எல்.ஏ ராஜா, குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏக்கள் பூந்தமல்லி கிருஷ்ணசாமி, திருப்போரூர் பாலாஜி, கீழ்வேளுர் நாகைமாலி, பெருந்துறை ஜெயகுமார் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன் எடுத்துக்கொண்டனர்.

    முதலமைச்சர் அறிவிப்பின்படி ஒருவார காலத்திற்கு போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் தொடக்க மாக அனைத்து பள்ளி களிலும் மாணவ ர்களுக்குபோதை ப்பொருள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுக்க ஆணையிடப்பட்டது.

    இதை தொடர்ந்து திருமருகல் அரசுமேல்நிலை ப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை, அனைவரும் எடுத்து க்கொண்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தி னையும் தொடங்கி வைத்தனர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×