search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    75 அடி நீளம் கொண்ட பிரமாண்ட தேசியக் கொடியை சுமந்து வந்த பள்ளி மழலைகள்
    X

    நாகையில் 75 அடி நீள தேசிய கொடியை மழலைகள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்

    75 அடி நீளம் கொண்ட பிரமாண்ட தேசியக் கொடியை சுமந்து வந்த பள்ளி மழலைகள்

    • நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் மூவர்ண தேசியக்கொடி ஊர்வலத்தை பார்வையிட்டு மாணவ- மாணவிகளுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை கூறினார்.
    • மழலைகள் சுமந்து சென்ற மூவர்ண தேசிய கொடியின் ஊர்வலத்தை வழி நெடுகளிலும் நின்றிருந்த பொதுமக்கள் கண்டு வியந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசியல் கட்சி சார்பில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அங்கு களைகட்டி வருகின்றன. இதைப்போல் நேற்று நாகப்பட்டினம் பால்பண்ணைசேரி இ.ஜி.எஸ் பிள்ளை சர்வதேச பள்ளி சார்பில் சுதந்திர தின விழாவின் மகத்துவத்தை மக்கள் அறிந்திடும் வகையில் 75 அடி நீளம் கொண்ட தேசியக்கொடி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நாகப்பட்டினம் அவுரித்திடலில் துவங்கிய கொடி ஊர்வல பேரணி தொடங்கி தொடர்ந்து பள்ளி மழலைகள் 75 அடி நீளம் கொண்ட மூவர்ண தேசிய கொடியை கைகளில் ஏந்தியவாறு சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பால் பண்ணைச்சேரியில் அமைந்துள்ள இஜிஎஸ் பிள்ளை சர்வதேச பள்ளி வரை பேரணியாக சென்றனர்.

    அப்போது மழலைகள் சுமந்து சென்ற மூவர்ண தேசிய கொடியின் ஊர்வலத்தை வழி நெடுகளிலும் நின்றிருந்த பொதுமக்கள் கண்டு வியந்தனர். பின்னர் நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் மூவர்ண தேசியக்கொடி ஊர்வலத்தை பார்வையிட்டு மாணவ- மாணவிகளுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை கூறினார்.

    Next Story
    ×