துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டிடம் திறப்பு விழா

ரூ.63 லட்சம் செலவில் கட்டி முடிக்கபட்ட வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் குத்துவிளக்கு ஏற்றி பணிகளை தொடக்கி வைத்தார்.
புதிய கட்டிடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் குத்துவிளக்கு ஏற்றினார்.
புதிய கட்டிடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் குத்துவிளக்கு ஏற்றினார்.
Published on

வேதாரண்யம்:

நாகப்பட்டினம் சாலையில் ரூ.63 லட்சம் செலவில் கட்டி முடிக்கபட்ட வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் கானொளி காட்சி மூலம் திறந்துவைத்தார். திறப்பு விழாவிற்கு பின் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் குத்துவிளக்கு ஏற்றி பணிகளை தொடக்கி வைத்தார்.

பின்பு அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் வேதாரண்யம்துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் இன்ஸ்பெ க்டர்கள் கன்னிகா, சுப்ரியா உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com