என் மலர்
மயிலாடுதுறை
- தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வள்ளுவர் குல சமுதாயத்தை மாற்ற வேண்டும் என வலியுறுத்தல்.
- ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் நாகை வள்ளுவர் குல சங்கம், மயிலாடுதுறை மற்றும் வள்ளுவர் குல பண்பாட்டு விழிப்புணர்வு பேரியக்கம் இணைந்து பட்டியல் இன வெளியேற்ற விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள திருவள்ளுவர் குல மக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய வள்ளுவர் குல நிர்வாகிகள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வள்ளுவர் குல சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்கள்.
பிறவி ஞானமும், கல்வி அறிவியலில் சிறந்து விளங்கும் திருவள்ளுவர் சமுதாய மக்களை பட்டியலில் இருந்து வெளியேற்றி அவர்களின் தனி சிறப்பை போற்றுகிற வகையில் ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வள்ளுவர் குலத்தின் வரலாற்று பெருமைகளையும் பண்பாட்டு வாழ்வியலிலும் நமது சமுதாய வரலாற்று ஆதாரங்களை உலகறிய செய்திட புலனறிதல் குழுவும் வலைக்காட்சி மற்றும் இணையதளம் பரப்புரையினை செய்திட தீர்மானிக்கப்பட்டது.
- பள்ளியில் படித்த வகுப்பில் மீண்டும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தி தங்களுடைய ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
- மேம்பாட்டுக்கான பணிகளை செய்வது என உறுதிமொழி ஏற்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூரில் பழமை வாய்ந்த அரசு உதவி பெறும் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.
இப்பள்ளியில் 1974-75 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுமார் 48 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினரோடு சந்தித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
பள்ளியில் தங்கள் அமர்ந்து படித்த வகுப்பில் மீண்டும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தி தங்களுடைய தற்போதைய சூழ்நிலைகள் குறித்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து தங்கள் படித்த பள்ளியின் மேம்பாட்டிற்காக ஏதேனும் செய்ய வேண்டுமென முடிவு செய்து அதன்படி தனி வாட்ஸ் அப் குழு அமைத்து அதன் மூலம் முன்னாள் மாணவர்களையும் ஒன்றிணைத்து பள்ளி மேம்பாட்டுக்கான பணிகளை செய்வது என உறுதிமொழி ஏற்றனர்.
இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போதைய தலைமை ஆசிரியருமான நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் நாகராஜன் நன்றி தெரிவித்தார்.
- சொக்கன்குளம் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டார்.
- குழந்தைகளுக்கு வழங்குவதற்காக சமைத்து வைக்கப்பட்டுள்ள உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
சீர்காழி:
சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகணி ஊராட்சியில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார் ஊராட்சியில் நடைபெற்று வரும் பாரதப்பிரதமர் வீடு கட்டத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளிகளின் விவரங்களை சரிபார்த்தார்.
தொடர்ந்து தென்னங்குடி குளம் சீரமைக்கும் பணி சொக்கன்குளம் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளையும் கலெக்டர் லலிதா பார்வையிட்டார்.
தொடர்ந்து நிம்மேலி ஊராட்சியில் அரசு கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டார்.
பின்னர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக சமைத்து வைக்கப்பட்டுள்ள உணவின் தரம் மற்றும் சுவை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலு வலர் இளங்கோ வன், ஒன்றிய பொறியா ளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, அகணிஊராட்சி மன்ற தலைவர் மதியழகன், நிம்மேலி ஊராட்சி மன்ற தலைவர் வசந்திகிருபாநிதி, ஒப்பந்தக்காரர் ராஜதுரை, மற்றும் ஊராட்சி செயலர்கள், உறுப்பினர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
- கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக், நெகிழி, கண்ணாடி பொருட்கள் உள்ளிட்டவைகளை வீசி செல்கின்றனர்.
- கரை ஒதுங்கிய கழிவு பொருட்கள் உள்ளிட்ட குப்பைகளை சேகரித்து தூய்மை பணியாளர்கள் உதவியுடன் அகற்றினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் தூய்மை கடற்கரை பாதுகாப்பான கடல் என்ற கடற்கரை தூய்மை பணி நடைபெற்றது.
மத்திய புவி அறிவியல் அமைச்சகம், தேசிய பெருங்கடல் தொழில்நுட்பக் கழகம், மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஆகிய சார்பில் நடைபெற்ற இந்த தூய்மை கடற்கரை தூய்மை பணியில் பூம்புகார் கலைக்கல்லூரி விலங்கியல் துறை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
கடற்கரை பகுதியில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களால் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக், நெகிழி, கண்ணாடி பொருட்கள், செருப்புகள் மற்றும் கடலில் அடித்து வரப்படு கரை ஒதுங்கிய கழிவு பொருட்கள் உள்ளிட்ட குப்பைகளை சேகரித்து தூய்மை பணியாளர்கள் உதவியுடன் அகற்றினர்.
இதில் இந்திய விலங்கியல் ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குனர் சிவபெருமான், விஞ்ஞான பிரசாத் புதுநிலை விஞ்ஞானி வெங்கடேஷ்வரன், அறிவியல் பலகை மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுமார், பூம்புகார் கலை க்கல்லூரி விலங்கி யல்துறை கோகுலகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
பூம்புகார் காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினர்.
- கரிக்குளம் தூர்வாரி தடுப்பு சுவர் நடைபாதை மின்விளக்குகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
- அவென்யூ பகுதிகளில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான காந்தி பூங்காவில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் செலவில் கரிக்குளம் தூர்வாரி தடுப்பு சுவர் நடைபாதை மின்விளக்குகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுபோல் ரயிலடி தோப்பு தெரு நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த சமைய லறை ரூ.23 லட்சம் செலவில் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. காமராஜர் அவென்யூ பகுதியில் ரூ.52 லட்சம் செலவில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை மயிலாடுதுறை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சீர்காழி நகர மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகர், நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், நகராட்சி ஆணையர் ராஜகோபாலன், மேலாளர் காதர்கான், நகரமைப்பு ஆய்வாளர் நாகராஜன் சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை, சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், கணக்கர் ராஜ கணேஷ், கவுன்சிலர்கள் பாஸ்கரன், வேல்முருகன், முபாரக்அலி, பாலமுருகன், நாகரத்தினம் செந்தில் உடன் இருந்தனர்.
- ஒரே அத்திமரத்தில் 14 அடி உயரத்தில் சங்கு சக்ர கதா அபய கஸ்தத்துடன் பிப்பல மகரிஷிக்கு காட்சி.
- புனிதநீர் கடத்தில் எடுத்து யானை மீது வைத்து ஒட்டகம், குதிரை ஊர்வலத்துடன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே சோழன்பேட்டை கோழிகுத்தி கிராமத்தில் தயாலட்சுமி சமேத வானமுட்டி பெருமாள் என்கிற சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது.
ஒரே அத்திமரத்தில் 14 அடி உயரத்தில் சங்கு சக்ர கதா அபய கஸ்தத்துடன் பிப்பல மகரிஷிக்கு காட்சி தந்த வண்ணம் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.
இக்கோவிலில் பிதுர்தோஷம், ஹத்திதோ ஷம், சனிதோஷமும் சர்வ வியாதி நிர்வத்தி செய்வதோடு கோடி பாபங்களையும் விமோச னமாக்கும் கோடி ஹத்தி பாபவிமோசனபுரம் என்ற கோழிகுத்தி கிராமத்தில் வைகானச பகவத் சாஸ்திர முறையில் பூஜித்து வருபவரான வானமுட்டி பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இக்கோவல் திருப்பணி வேலைகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனையொட்டி 5ம் தேதி காலை காவிரிக்கரையில் இருந்து யாகசாலைக்காக புனிதநீர் கடத்தில் எடுத்து யானை மீது வைத்து ஒட்டகம், குதிரை ஊர்வலத்துடன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு பூர்வாங்க பூஜைகளுடன் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
6ம் காலயாக சாலை பூஜையின்போது திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டு மற்றும் பிரசாதங்கள் யாகசாலையில் பெருமா ளுக்கு சாற்றப்பட்டு பூர்ணா ஹுதி செய்யப்ப ட்டது.
நேற்றுகாலை 8ம் காலயாகசாலை பூஜைகள் தொடங்கி பூர்ணாஹுதி ஆகி யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து விமானத்தில் உள்ள கலசத்தில் ஊற்றி மகாகும்பாபிஷேகம் செய்தனர்.
பின்னர் மூலவர் மகாசம்ரோஷணம், திருவாராதனம், சாற்று முறை, இரவு பெருமாள் வீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை தொழி லதிபர் விஜயகுமார் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.
- நள்ளிரவில் மின்கசிவு ஏற்பட்டு குடிசைவீடு தீப்பிடித்து எரிந்தது.
- தீ மளமளவென கூரை முழுவதும் பரவியதால் வீட்டில் வைத்திருந்த பணம், துணிகள் பொருள்கள் எரிந்து சாம்பலானது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே அகர கீரங்குடி ஊராட்சி உடையார் தெருவைச் சேர்ந்தவர் கிருபாகரன் என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு நள்ளிரவில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.
தூங்கிக்கொண்டிருந்த கிருபாகரன் குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
அக்கம்பக்கத்தில் உள்ள வர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
தீ மளமளவென எரிந்து கூரை முழுவதும் எரிந்ததால் உயிர்சேதம் தவிர்த்து, வீட்டில் வைத்திருந்த பணம், துணிகள் பொருள்கள் எரிந்து சாம்பலானது.
இத்தகவலை அறிந்த மயிலாடுதுறை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.
மயிலாடுதுறை வருவாய் ஆய்வாளர் முத்துசாமி, தாசில்தார் சார்பாக அரசு வழங்கும் முதல் கட்ட நிவாரணமாக ரூ. 5 ஆயிரமும் அரிசி, பாய், போர்வை, மண்ணை வழங்கினர். ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழி சரவணன் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு வீட்டுப் பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.
- 7 மாவட்டங்களில் 1,900 குளியலறைகளுடன் கூடிய கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
- 2023-ம் ஆண்டுக்குள் 5 ஆயிரம் கழிவறைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நிம்மேலி கிராமத்தில் விவேகானந்தா கிராமப்புற மேம்பாடு அமைப்பின் சார்பாக ஓராசிரியர் பயிற்சி பள்ளி துவக்க விழா நடைபெற்றது.
அதனை முன்னிட்டு நிம்மேலி கிராமத்தில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 60 வீடுகளுக்கு குளியல் அறையுடன் கூடிய கழி ப்பறை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு பணிகள் நிறைவடைந்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஓராசிரியர் பள்ளிகளின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் விவேகானந்தா கிராமபுற மேம்பாடு திட்ட குழுவின் கவுரவத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி வரவேற்றார்.
இந்த திட்ட த்தின் 7 மாவட்டங்களில் ஆயிரத்து 900 குளியல் அறைகளுடன் கூடிய கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் வரும் 2023ம் ஆண்டுக்குள் 5 ஆயிரம் கழிவறைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஏ.வி.சி கல்லூரியின் முன்னாள் செயலர் செந்தில்குமார் இத்திட்டத்தின் நன்மைகள் பற்றியும் பயனாளிகள் எவ்வாறு அதனை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும்விளக்கினார்.
தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு பணியாணை வழங்க ப்பட்டது.
நிக ழ்ச்சியில் ஊராட்சி தலைவர் துரைராஜ், விவேகானந்தா கிராமப்புற மேம்பாட்டு அமைப்பின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஓராசிரியர் பள்ளி செயற்குழு உறுப்பினர் டெக்கான் மூர்த்தி நன்றி கூறினார்.
- பதிவுதாரர்களின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
- பதிவுதாரர்கள் அலுவலக வேலை நாட்களில் தங்களது சான்றிதழ்களுடன் நேரில் வருகை புரிந்து பதிவினை சரிபார்த்துக் கொள்ளலாம்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறைமாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாகப்பட்டினம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் பிரிக்கப்பட்டு புதியதாக 25.1.22ம் தேதி முதல் 2வது குறுக்குத் தெரு,பாலாஜி நகர் பூம்புகார் சாலை, மயிலாடுதுறை-1 என்றமுகவரியில் செயல்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக எல்லைக்குட்பட்ட மயிலா டுதுறை, குத்தாலம், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களைச் சார்ந்த நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்களி ன்வேலை வாய்ப்பு பதிவு விவரங்கள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
எனவே மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த பதிவுதாரர்கள் தங்கள்வே லைவாய்ப்பு அலுவலக பதிவுமாற்றம் செய்யப்பட்டுள்ளதை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளத்தில் சரிபா ர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வருகைப் புரிந்து பதிவு சரிபார்த்தவர்களை தவிர்த்து ஏனைய பதிவுதாரர்கள் அலுவலக வேலை நாட்களில் தங்களது அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், சாதிசான்றிதழ், ஆதார் அட்டை மற்றும்குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரில் வருகை புரிந்து தங்களது பதிவினை சரிபார்த்துக் கொள்ளலாம்.
மேலும் அவ்வாறு சரிபார்த்துக் கொள்ளவரும்பட்சத்தில் பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.
மேலும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள்வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களுக்கான முன்னுரிமைகளை பதிவு செய்துகொள்ளதமிழக அரசின் மனிதவள மேலாண்மைதுறை அரசாணையில்கு றிப்பிட்டுள்ள 20 வகையான முன்னுரி மைகளை பதிவு செய்துகொள்ள விருப்பமுள்ளவர்கள்உ ரிய சான்றுகளைப் பெற்று வந்துபதிவு செய்துகொள்ளலாம்.
மேலும் சந்தேகங்களுக்கு 04364299790 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
- வானத்தில் கருடன் வட்டமிட கடத்தில் இருந்த புனிதநீரை கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
- வட மேற்கில் நாகராஜாவும், வட கிழக்கில் ஆஞ்சநேயரும், தென்மேற்கில் விநாயகரும் அமைந்துள்ள தனிச்சிறப்பாகும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறைமஹா தான தெருவில்உள்ள ருக்குமணி சத்தியாபாமா உடனாகிய வேணுகோபால சாமி கோவிலில் கும்பாபி ஷேகம் நடைபெற்றது.
விழாவிற்கு அம்பாபாய் டிரஸ்ட் மற்றும் விழாக்குழு தலைவர் பிரபாகர் தலைமையில் நாகராஜா ஆச்சாரியார் முன்னிலையில் தண்தரசா ரெந்தம் மத்வாச்சாரியா முறைப்படி ஐந்து காலயாகசாலை பூஜைகளுடன் வேத மந்திரங்கள் ஓத கடம் புறப்பாடு நடைபெற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் கிருஷ்ணா.. கிருஷ்ணா.. என கோஷம் எழுப்பினர்.
பின்னர், வானத்தில் கருடன் வட்டமிட கடத்தில் இருந்த புனிதநீரை கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
பின்னர் கருவறையில் உள்ள கிருஷ்ணன் சிலைக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
கோவில் உள் வளாகத்தின் மையத்தில் கருடன், துளசி மாடம், வட மேற்கில் நாகராஜாவும், வட கிழக்கில் ஆஞ்சநேயரும், தென்மேற்கில் விநாய கரும் அமைந்துள்ள தனிச்சிறப்பாகும்.
விழாவில் ஆர்.எஸ்.கே. பாண்டுரெங்கன், நகர மன்ற துணைத்தலைவர் எஸ்.எஸ்.குமார், நகர மன்ற உறுப்பினர் காந்திமதி தனபால், கலியமூர்த்தி, கவி மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- காவிரி ஆற்றின் குறுக்கே ஒவ்வொரு 10 கி.மீ. தூரத்திற்கு இடையே தடுப்பணை கட்டவேண்டும்.
- தமிழகத்தில்தான் அதிகம் பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்.
கொள்முதல் நிலையத்தில் ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரியான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் 240 டிஎம்சி காவிரிநீர் வீணாக கடலில் கலந்துள்ளது.
காவிரி நீர் வீணாவதைத் தடுக்க காவிரி ஆற்றின் குறுக்கே ஒவ்வொரு 10 கி.மீ. தூரத்திற்கு இடையே தடுப்பணை கட்டவேண்டும்.
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மதுரவாயல் பகுதியில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டது வேதனை அறிக்கிறது.
மாணவர்களின் தற்கொலைக்கு பெற்றோர்களும் ஒரு காரணம். பெற்றோர்களின் அழுத்தத்தால்தான் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
பெற்றோர் தங்களது விருப்பத்தை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள். மத்திய அரசு உடனடியாக நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகம் பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
அதேசமயம் தமிழகத்தில்தான் நீட் தேர்வால் அதிக அளவில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய அரசு உடனடியாக அவசர சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றார்.
அப்போது, பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் குத்தாலம் கணேசன் மற்றும் விமல், காமராஜ், லண்டன் அன்பழகன் உட்பட மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
- மாணவர்களுக்கு படிப்பு மட்டுமின்றி தோட்டக்கலை, கைவினை பொருட்கள் போன்ற பயிற்சிகளையும் அளித்து வருகிறார்.
- உயரிய விருதான நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை வழங்கி கவுரவித்துள்ளது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவ ட்டம் குத்தாலம் அருகே ஸ்ரீகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஆர்.ஜி.கலைமதி.
இவர் கடந்த 32 ஆண்டு களாக ஆசிரியையாக சேவையாற்றி வருவதோடு, 20 ஆண்டுகளாக பாரத சாரண, சாரணியர் இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பல்வேறு மாநிலங்களில் நடந்த பயிற்சியில் தமிழகத்தின் பிரதிநிதியாகக் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
மேலும், இவர் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தின் மாவட்ட சாரணிய பயிற்சி ஆணை யராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து பல மாணவிகள் ஆளுநர் மற்றும் ஜனாதிபதி விருதுபெற உறுதுணையாக இருந்துள்ளார்.
இவர் மாணவர்களுக்கு படிப்பு மட்டுமின்றி தோட்டக்க லை, கைவினைப் பொருட்கள் செய்தல் போன்ற பயிற்சிகளையும் அளித்து வருகிறார்.
இவரின் சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறையின் உயரிய விருதான நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.
விருது பெற்ற ஆசிரியை கலைமதிக்கு பள்ளித் தலைமையாசிரியர் மதிவாணன், ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா ராஜ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முகமது இக்பால், துணைத் தலைவர் ராமதாஸ், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.






