என் மலர்tooltip icon

    மதுரை

    • கடை ஊழியர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
    • விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜினி கணேசனை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது51). இவர் சுவாமி சன்னதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து கடையில் முருகன்(45) என்பவர் வேலை பார்த்து வருகிறார். 2 பேருக்கும் முன் விரோதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று பிரச்சினை ஏற்பட ஆத்திரமடைந்த முருகன், மாரியப்பனை தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

    கான்பாளையம் முதல் தெருவை சேர்ந்தவர் வேங்கையன்(52). இவர் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிக்கு மேடை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் ரஜினி கணேசன்(30), சுகுமார் ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். சம்பவத்தன்று 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வேங்கையன் சமரசம் செய்ய முயன்றார். இதில் ஆத்திரமடைந்த ரஜினி கணேசன் அவரை சரமாரியாக தாக்கினார். இதுகுறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜினி கணேசனை கைது செய்தனர்.

    • மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தஞ்சமடைந்தார்.
    • அவரது மகன் சமரசம் செய்து அழைத்துச் சென்றார்.

    மதுரை

    மதுரை புதூர் கற்பகநகர் பகுதியில் வசித்து வருபவர் அன்னம்மாள். இவரது கணவர் குப்பன் கடந்த 2020-ம் ஆண்டு உயிரி ழந்தார். இவர்களுக்கு குற்றாலராஜா, சரவண பாண்டி என 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2-வது மகன்சரவண பாண்டி பெற்றோரின் சொத்துக்களான வீடுடன் கூடிய 2 சென்ட் இடத்தை பெற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து மூத்த மகன் குற்றால ராஜா தனக்கு மீதமுள்ள சொத்துக்களை தருமாறு தாய் அன்னம்மாளிடம் கேட்டு ெதாந்தரவு செய்துள்ளார்.

    இதனால் விரக்தியடைந்த அன்னம்மாள் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று தஞ்சமடைந்தார். சொத்துக் களை பெற்றுக்கொண்டு மகன்கள் ஏமாற்றிவிட்டதாக அவர் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் தாய் கலெக்டர் அலுவலகத்தில் இருப்பதை அறிந்த மகன் குற்றால ராஜா அங்கு வந்து அன்னம்மாளை சமரசம் செய்து அழைத்துச் சென்றார்.

    • தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் சிக்கினார்.
    • இதையடுத்து ஜெய்ஹிந்துபுரம் போலீசார் கைது செய்தனர்

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி(வயது 60). சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த குடிநீர் மின் மோட்டார் திருடு போனது. இதேபோல் ராமையா தெருவில் உள்ள ராஜேந்திரன், சுப்பிரமணியபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பிரபாகரன் என்பவரது வீட்டிலும் மின் மோட்டார், இன்வெட்டர் பேட்டரிகள் திருடு போனது. 3 கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 3 வீட்டிலும் திருடியது நேதாஜி தெரு, எம்.ஜி.ஆர். கிழக்கு தெருவை சேர்ந்த கண்ணன் மகன் ராஜபாண்டி(30) என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது39). இவர் எப்.எப்.ரோட்டில் நடந்து சென்றபோது 2 பேர் மது வாங்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். ஆனால் ஷாஜகான் பணம் தர மறுத்து விட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பிளேடால் கீறிவிட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், ஜெய்ஹிந்துபுரம் பகுதியை சேர்ந்த இளங்கோ, தெற்குவாசலை சேர்ந்த ராஜ்மோகன் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் ராஜ்மோகனை கைது செய்த போலீசார் இளங்கோவனை தேடி வருகின்றனர்.

    • பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால திட்டங்களால் இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது.
    • பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் பேட்டியின் போது கூறினார்.

    மதுரை

    மதுரை பா.ஜ.க. அலுவலகத்தில் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவு பெற்று 10-வது ஆண்டில் இருக்கிறோம்.

    பா.ஜ.க. அரசின் திட்டங்களால் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழக அரசு லேபிள் ஒட்டுகிறது. உதாரணமாக விருதுநகருக்கு மத்திய அரசு கொண்டுவந்த ரூ.2 ஆயிரம் கோடி ஜவுளி பூங்கா திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்ததாக தெரிவிக்கின்றனர்.

    பிரதமர் மோடியின் மந்திரி சபையில் யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. ரபேல் குற்றச்சாட்டுக்கு கூட ராகுல் காந்தி நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். சூடான் உள்ளிட்ட வெளிநாடுகளில் போர் நெருக்கடி ஏற்பட்ட போது அங்கிருந்து இந்தியர்களை மோடி மீட்டுக் கொண்டுவந்தார்.

    இப்போது உலக அரங்கில் இந்தியா பெருமை மிக்க நாடாக விளங்குகிறது. உலகிற்கு கொரோனா தந்த நாடாக சீனாவும், அந்த நோயை போக்கி மக்களை காக்கின்ற மருந்துகளை தந்த நாடாக இந்தியாவும் உள்ளன. கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் ஒரு பட்டினி சாவு கூட நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    உலக அரங்கில் கொரோனா மரணம் இந்தியாவில் தான் மிகக் குறைவு. உலகின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு 12 சதவீதம் உள்ளது.

    காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பத்ம பூஷன் பத்மஸ்ரீ போன்ற விருதுகள் வசதி படைத்தவர்களுக்கு தான் கிடைத்தது. தற்போது நாட்டுக்காக உழைக்க கூடிய சாமானியர்களுக்கும் கிடைக்கிறது.

    மதுரையில் எய்ம்ஸ் வரவில்லை என்று கூறி செங்கலை எடுத்துக் கொண்டு பிரச்சாரம் செய்த தி.மு.க. தலைவரும், தற்போதைய முதல்வருமான மு. க. ஸ்டாலின் ஜப்பான் சென்ற போது அங்குள்ள சிக்கா நிறுவனத்திற்கு சென்று விரைந்து எய்ம்ஸ் மருத்துவமனையை முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பேட்டியின் போது மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உள்பட பலர் இருந்தனர்.

    • வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகை-4 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அண்ணாநகர் கோமதிபுரம் செவ்வந்தி தெருவை சேர்ந்தவர் மலர்கொடி(வயது57). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 14 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம், 4 கிலோ வெள்ளிப்பொருட்கள் ஆகி யவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

    இந்த நிலையில் ஊர் திரும்பிய மலர்கொடி வீட்டின் கதவு உடைக்கப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை, பணம் கொள்ளை போயிருந்தது. இது குறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி கைரேகை, தடயங்களை சேகரித்தனர். கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • அனுமதியின்றி பேனர் வைத்ததாக 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • விளம்பரப் பேனரை போலீசார் உடனடியாக அகற்றினர்.

    மதுரை

    தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சுப, துக்க காரியங்கள் மற்றும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைத்து பிரபலப்படுத்துவது மிகப்பெரிய கலாசாரமாக மாறி வருகிறது.

    சிறிய அளவிலான பேனர் தொடங்கி பிரமாண்ட அளவில் பேனர் அமைப்பதும் பல தரப்பினர் மத்தியிலும் வழக்கமான கலா சாரமாக உரு வெடுத்துள்ளது.

    இதனால் பல்வேறு இடங்களில் பேனர்கள் விழுந்து அவ்வப்போது உயிர்பலிகளும் ஏற்படுகிறது. சமீபத்தில் கோவையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் சரிந்து விழுந்ததில் 3 தொழி லாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் பேனர்கள் அமைக்க கடும் கட்டுப்பாடு களை தமிழக அரசு விதித்துள்ளது.

    அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாமல் பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்றும், பேனர் வைப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் அதிகபட்ச அபராதமும் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை கணக்கெடுத்து அவற்றை உடனடியாக அகற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    மதுரை மாவட்டத்தில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளான உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் குறித்து போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அந்த வகையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக மதுரை மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்டோர் மீது போலீ சார் வழயக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அனுமதி இன்றியும், கால அவகாசம் முடிந்தும் அகற்றப்படாமல் இருக்கும் பேனர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பேனர்களை அகற்றாமல் இருக்கும் நபர்களிடம் ரூ.25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராதம் வசூலிப்ப துடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து மதுரை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன. மேலும் உரிய அனுமதி பெறாமல் இனிமேல் பேனர் வைப்ப வர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை காளவாசல் பகுதியில் நேற்று மாலை அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பரப் பேனரை போலீசார் உடனடியாக அகற்றினர்.

    மதுரை நகர் பகுதிகளில் திருமண மண்டபங்கள், தியேட்டர்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் விளம்பர பேனர்கள் அமைப்பதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், முக்கிய பிரமுகர்களின் நிகழ்ச்சிகள், மற்றும் அனைத்து விழாக்க ளுக்கும் உரிய அனுமதி பெற்று குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் மட்டும் விளம்பர பேனர்கள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனை மீறுபவர்கள் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    எனவே விளம்பர பேனர்கள் விஷயத்தில் தமிழக அரசு தற்போது கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பேனர் கலாசாரம் குறைய வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் வாசுதேவனை படுகொலை செய்தனர்.
    • வாசுதேவன் கொலை வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி தனுஷ், வீரா, சுதர்சன் ஆகிய 3 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கம்பளிப்பட்டியை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் வாசுதேவன் (வயது19). மேலூர் அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை 2-ம் ஆண்டு படித்து வந்த இவர் கடந்த மார்ச் மாதம் கோட்டைப்பட்டி விலக்கு அருகே தனது நண்பர் பாலகண்ணனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் வாசுதேவனை படுகொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில் பூதமங்கலம் கிராமத்தில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருந்த வந்த முன்விரோதத்தில் வாசுதேவன் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இந்த கொலை தொடர்பாக மேலூரை சேர்ந்த பிரேம்குமார்(25), வீரா(19), தனுஷ்(20), சுதர்சன்(20), சரவணபுகழ் (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வாசுதேவன் கொலை வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி தனுஷ், வீரா, சுதர்சன் ஆகிய 3 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் 3 பேரும் உளுந்தூர்பேட்டையில் தங்கி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தினமும் காலையும், மாலையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து, 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    கோர்ட்டு விதித்த நிபந்தனைகளை மீறும் பட்சத்தில், அவர்கள் மீது புதிய வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தனது உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.

    • ம.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழா நடந்தது.
    • வைகோ எம்.பி. நேரில் வாழ்த்தினார்.

    மதுரை 

    ம.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பாறைப்பட்டியை சேர்ந்த பால்ராஜ்-தீபா மகன் தினேஷ், கே.புளி யங்குளம் பூமிநாதன்- சுதா மகள் இந்துமதியின் திருமண விழா கருமாத்தூரில் உள்ள தனியார் மகாலில் நேற்று நடந்தது.

    இந்த திருமணத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அவர் மணமக்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி வாழ்த்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    உசிலம்பட்டி பகுதி எப்போதும் தாய்மாமனுக்கு மரியாதை செலுத்தும் பகுதி, இந்த திருமணத்திலும் தாய்மாமன்கள் மாலை களுடன் வந்து மணமக்க ளுக்கு மாலையிட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    முல்லை பெரியாறு அணையை இடிக்க விடாமல் தடுப்பதற்காக நடைபயணம் சென்று அணையை காப்பாற்றி லட்சக்கணக்கான விவசாய குடும்பங்களை பாதுகாத்து கொடுத்ததில் வைகோவுக்கு பங்கு உள்ளதைப்போல, இந்த பகுதி மக்களுக்கும் பங்கு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். இந்த திருமண விழாவில் புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன், முனிய சாமி, மார்நாடு, ராம கிருஷ்ணன், மாவட்ட அவைத்தலைவர் சக்திவேல், வழக்கறிஞர்கள் ஆசைத்தம்பி, உதயராஜ், மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சுப்பையா, தணிக்கை குழு உறுப்பினர் பாண்டி, மாநில தொண்டர் அணி அமைப்பாளர் பாஸ்கர சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாய நிலத்தை சட்டப்படி கையகப்படுத்தாமல் சாலை அமைத்தது ஏன்?
    • விருதுநகர் கலெக்டரிடம் மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர்கள் ரமேஷ், மும்மூர்த்தி, காராளம். இவர்கள் 3 பேருக்கும் அரசகுளம் கிராமத்தில் விவசாய பட்டா நிலங்கள் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவித அறிவிப்பு நோட்டீசும் வழங்காமல் விவசாய நிலத்தின் மீது மாவட்ட நிர்வாகம் சாலை அமைத்தது. இது தொடர்பாக 3 பேரும் மாவட்ட நிர்வா கத்திடம் முறையிட்டனர். ஆனால் எந்த பதிலும் இல்லை.

    இதையடுத்து அவர்கள் மதுரை ஐகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். அதில், எங்களது விவசாய நிலத்தில் மாவட்ட நிர்வாகம் எந்தவித முன்ன றிவிப்பும் செய்யாமல் சாலை அமைத்துள்ளது. இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தலா ரூ. 25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மாவட்ட கலெக்டர் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தர விட்டிருந்தனர்.

    அதன்படி நேற்று நீதிபதிகள் சுப்பிரமணியன் விக்டோரியா கௌரி ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    அப்போது நீதிபதிகள் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தை கையகப் படுத்தாமல் மாவட்ட நிர்வாகம் எப்படி சாலை அமைத்தது என கேள்வி எழுப்பினர். அதற்கு கலெக்டர் பொதுமக்களின் நலன் கருதி இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

    அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த நடவடிக்கை தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை வருகிற 20 -ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    • ஜெனகை மாரியம்மன் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது.
    • சோழவந்தான் பேரூராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான்ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் 17-வது நாளில் தீர்த்தவாரி திருவிழா நடந்தது. இதையொட்டி மாலை 4 மணியளவில் கொடி இறக்கப்பட்டு, மஞ்சள் நீராடுதல் நடந்தது. தொடர்ந்து கையில் வாளி, இடுப்பில் குடம், மற்றொரு கையில் ஊத்துபட்டை ஏந்திய அலங்காரத்தில் அம்மன் வைகை ஆற்றுக்கு சென்றனர். பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். அங்கிருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு 12 வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. வண்ண பூக்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தீர்த்தவாரி மேடையில் அம்மன் ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தீர்த்தவாரி மண்டகப்படி உபயதாரர் பால்பாண்டியன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அதிகாலையில் வைகை ஆற்றிலிருந்து ரிஷப வாகனத்தில் அம்மன் புறப்பட்டு கோவிலை வந்தடைந்தார். இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சோழவந்தான் பேரூராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    • முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • தாசில்தார் பார்த்திபன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அனாதைகள் நலஅறக்கட்டளை சார்பில் 31-வது ஆண்டாக ஏழை முதியோர், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தளபதி வீரப்பன் திடலில் நடந்தது. தாசில்தார் பார்த்திபன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவிற்கு டாக்டர் சீத்தாலட்சுமி, வக்கீல் சந்திரசேகர், கவுன்சிலர்கள் குருநாதன், கார்த்திகாராணி மோகன், மீனாஆறுமுக கடவுள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புலவர் குருசாமி வரவேற்றார்.

    இதில் முதியோர், மாற்றுதிறனாளிகளுக்கு போர்வை, வேட்டி சேலைகளும், மாணவ- மாணவிகளுக்கு நோட்டுபுத்தங்களும் என 600 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. விழாவில் முனியப்பன், கேசவன், முன்னாள் கவுன்சிலர் மகாசரவணன், முருகாண்டி, ரவிக்கண்ணன், சாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சரவணன் நன்றி கூறினார். இதன் ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனத்தலைவர் பிரிதிவிராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • அடையாளம் தெரியாத முதியவர் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகரில் உள்ள சோழவந்தான் சாலையில் நேற்று 72 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிக்கிடந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சுபாஷ் கொடுத்த புகாரின் பேரில் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×