ம.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழா

ம.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழா நடந்தது. வைகோ எம்.பி. நேரில் வாழ்த்தினார்.
மணமக்களை ம.தி.மு.க. ெபாதுச்செயலாளர் வைகோ வாழ்த்தியபோது எடுத்த படம்.
மணமக்களை ம.தி.மு.க. ெபாதுச்செயலாளர் வைகோ வாழ்த்தியபோது எடுத்த படம்.
Published on

மதுரை 

ம.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பாறைப்பட்டியை சேர்ந்த பால்ராஜ்-தீபா மகன் தினேஷ், கே.புளி யங்குளம் பூமிநாதன்- சுதா மகள் இந்துமதியின் திருமண விழா கருமாத்தூரில் உள்ள தனியார் மகாலில் நேற்று நடந்தது.

இந்த திருமணத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அவர் மணமக்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி வாழ்த்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-

உசிலம்பட்டி பகுதி எப்போதும் தாய்மாமனுக்கு மரியாதை செலுத்தும் பகுதி, இந்த திருமணத்திலும் தாய்மாமன்கள் மாலை களுடன் வந்து மணமக்க ளுக்கு மாலையிட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

முல்லை பெரியாறு அணையை இடிக்க விடாமல் தடுப்பதற்காக நடைபயணம் சென்று அணையை காப்பாற்றி லட்சக்கணக்கான விவசாய குடும்பங்களை பாதுகாத்து கொடுத்ததில் வைகோவுக்கு பங்கு உள்ளதைப்போல, இந்த பகுதி மக்களுக்கும் பங்கு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். இந்த திருமண விழாவில் புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன், முனிய சாமி, மார்நாடு, ராம கிருஷ்ணன், மாவட்ட அவைத்தலைவர் சக்திவேல், வழக்கறிஞர்கள் ஆசைத்தம்பி, உதயராஜ், மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சுப்பையா, தணிக்கை குழு உறுப்பினர் பாண்டி, மாநில தொண்டர் அணி அமைப்பாளர் பாஸ்கர சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com