என் மலர்tooltip icon

    மதுரை

    • தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாகவும் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை.
    • கடந்த இரண்டு ஆண்டுகளில் அடிக்கடி தீ விபத்து நடந்து வருவது வாடிக்கையாகிவிட்டது.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தெற்கு மாசி வீதி மறவர் சாவடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை மற்றும் அதனை சார்ந்த குடோன் ஒன்றும் உள்ளது.

    இதனை கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஜகிஸ் என்பவர் நடத்தி வருகிறார். இந்த கடை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் இயங்கி வருகிறது.

    இந்நிலையில் கடையின் மேல் பரப்பில் உள்ள குடோனில் இருந்து இன்று காலை 8.15 மணி அளவில் திடீரென்று கரும்புகை வெளியேறியது. இதைப் பார்த்த அப்பகுதியினர் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த கடைக்கு அருகாமையில் வணிக நிறுவனங்கள் நடத்தி வந்தவர்கள் தங்களது கடைகளை பூட்டிவிட்டு வெளியே வந்தனர்.

    இதற்கிடையே ஒரு சில விநாடிகளில் கரும்புகை வெளியேறிய குடோனில் தீ பற்றியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மதுரை அனுப்பானடி, தல்லாகுளம், திடீர் நகர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் மின்னல் வேகத்தில் விபத்து நடந்த பகுதிக்கு வந்தன.

    அதில் வந்த வீரர்கள் அதிரடியாக செயல்பட்டு தண்ணீரை பீய்ச்சி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாகவும் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. மேலும் 2 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. நெரிசல் மிக்க பகுதி என்பதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

    பின்னர் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் அந்த பகுதிக்கு தடுப்பு ஏற்படுத்திய போலீசார் பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் மாணவ, மாணவிகளை அனுமதிக்கவில்லை. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு வாகனங்களுக்கு தேவையான தண்ணீர் மாநகராட்சி லாரிகள் மூலம் வழங்கப் பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பழமையான கட்டிடங்கள் மற்றும் சில இடங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அடிக்கடி தீ விபத்து நடந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. தீயணைப்பு துறையினர் மாநகராட்சி சார்பாக பழமையான கட்டிடங்களை கண்டறிந்து ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த தீ விபத்தால் இப்பகுதி மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. தீ அணைக் கப்பட்ட நிலையில் மீண்டும் அந்த குடோனில் தீப்பிடிக்க தொடங்கியது. இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் இருந்து கூடுதல் திறன் கொண்ட தீயணைப்பு வாகனம் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

    • இந்த ஆண்டில் ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது.
    • 9-ந்தேதி ஆடிக் கார்த்திகை கொண்டாடப்படுகிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் அம்மனுக்கு உகந்தஆடி மாதத்தில் மட்டும் 5 விழாக்கள் நடைபெறுவது தனி சிறப்பாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை தினத்தன்று தங்க மயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் ஆடி மாத கார்த்திகை விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஆடி கார்த்திகைக்கு என்று சன்னதி தெருவில் தனி மண்டபமே உள்ளது., ஆண்டுதோறும் ஆடி கார்த்திகை அன்று இந்த மண்டபத்தில்தான் காலை முதல் இரவு வரை தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்கி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். பின்னர் வழக்கம் போல தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி நகர் உலா வருவார். இந்த ஆண்டு ஆடிக்கார்த்திகை அடுத்த மாதம் ஆகஸ்டு (ஆடி 24-ந் தேதி) 9-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்தகோவிலை பொறுத்தவரை அம்மனுக்கு உகந்த ஆடிப்பூரம், ஐப்பசி பூரம் என்று ஆண்டுக்கு 2 முறை பூர விழா நடைபெற்று வருகிறது. ஐப்பசி பூரத்தில் தெய்வானை அம்பாளும், ஆடிப்பூரத்தில் கோவர்த்தனாம்பிகையும் எழுந்தருளுவார். இந்த ஆண்டிற்கான ஆடிப்பூரம் வருகின்ற 21-ந்தேதி முதல் நடக்கிறது. மாதந்தோறும் பவுர்ணமி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது.

    இதேசமயம் ஆடி மாதத்தில் காவல் தெய்வமான கருப்பண்ணசுவாமிக்கு சந்தனம் சாத்திப்படியும், வண்ணமலர்களால் பந்தல்அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜை நடைபெறும். இந்த நாளில் பக்தர்கள் கிரிவலம் வந்து தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டிற்கான ஆடி பவுர்ணமி பூஜை வருகின்ற 1-ந்தேதி நடக்கிறது.

    ஆடி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று உலக நலனுக்காக 1008 திருவிளக்கு பூஜை நடைபெறுவதும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 1008 திருவிளக்கு பூஜை வருகின்ற 11-ந்தேதி நடக்கிறது. எனவே ஆடி மாதத்தில் வருகின்ற 21-ந்தேதி ஆடிப்பூரம், 1-ந் தேதி ஆடி பவுர்ணமி, 9-ந்தேதி ஆடிக் கார்த்திகை, 11-ந்தேதி ஆடிவெள்ளி 1008 திருவிளக்குபூஜை, 16-ந்தேதி ஆடி அமாவாசை என்று 5 விழாக்கள் நடக்கிறது.

    தமிழ் மாத கணக்கின்படி மாதத்திற்கு ஒரு அமாவாசை வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது. அதாவது ஆடி மாதத்தின் முதல் நாளான வருகின்ற 17-ந்தேதி முதல்அமாவாசையும், ஆடி மாதத்திலேயே (ஆகஸ்டு16-ந்தேதி) 2-வது அமாவாசையும் வருகிறது. ஆங்கில மாதத்தை பொறுத்தவரை வெவ்வேறு மாதமாக இருப்பினும் தமிழ் மாதத்தை ஒப்பிடும் போதுஒரே மாதமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்பரங்குன்றம் முருகன்கோவிலை பொறுத்தவரை ஆகஸ்டு 16-ந் தேதி அமாவாசையை விழா கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • போலீசார் வேடனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் தாக்கியதால் தான் வேடன் இறந்ததாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த எழுமலை அருகே உள்ள பீலநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேடன். கட்டிட தொழிலாளியான இவர் நேற்று இரவு எம்.கல்லுப்பட்டி அருகே உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார்.

    பின்னர் படம் முடிந்ததும் அவர் தனியாக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். வழியில் அவரை மறித்த போலீசார் எங்கு சென்று வருகிறாய் என்று கூறி விசாரணை நடத்தினர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சோதனை நடத்தி உள்ளனர்.

    இதையடுத்து இன்று அதிகாலை அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வீடு திரும்பிய அவர் காலை நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை. அவரது பெற்றோர் எழுப்பியபோது அவர் இறந்த நிலையில் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறி அழுதனர்.

    பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் வேடனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் தாக்கியதால் தான் வேடன் இறந்ததாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டது.
    • கலெக்டர் சங்கீதா தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 88-வது வார்டு அனுப்பானடி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை கலெக்டர் சங்கீதா தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் வணிக வரி மற்றும் பத்திரப்பதி வுத்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, பூமிநாதன் எம்.எல்.ஏ., துணை மேயர் நாக ராஜன், மண்டல தலை வர்கள் வாசுகி சசிகுமார், முகேஷ் சர்மா, கவுன்சி லர்கள் சோலை ராஜா, பிரேமா, முத்துமாரி ஜெயக்குமார், செல்வம், தி.மு.க. பகுதி செயலாளர் சசிகுமார், 88-வது வார்டு வட்ட செயலாளர் தாமோதரன், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்வியும், சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
    • கல்விப் புரட்சியை ஏற்படுத்தியது தி.மு.க.–வோட ஆட்சி என்றார்.

    மதுரை

    மதுரை புதுநத்தம் சாலை–யில் ரூ.216 கோடி மதிப்பீட் டீல் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூல–கத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திறந்துவைத் தார். அப்போது அவர் பேசி–யதாவது:-

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண் கள் என நான் அடிக்கடி சொல்வது, கல்வியும் சுகா–தாரமும்தான். அதனால் தான், கலைஞர் நூற்றாண்டு தொடக்கமான கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி அன்று கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவம–னையை சென்னை, சைதாப்பேட்டை, கிண்டியில் திறந்து வைத் தேன்.

    ஒரு மாதம் கழித்து ஜூலை 15 ஆம் நாளான இன்றைக்கு (நேற்று) கலை–ஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைத்தி–ருக்கின்றேன். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததை–யும் செய்வான் இந்த ஸ்டா–லின் என்பதற்கு எடுத்துக் காட்டுதான் சென்னையில் மருத்துவமனையும், மதுரை–யில் இந்த நூலகமும். இவை இரண்டும் திராவிட முன் னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்காத வாக்குறுதிகள்.

    தமிழ்நாட்டினுடைய தலைநகர் சென்னை என் றால், இந்த மதுரை, தமிழ் நாட்டினுடைய கலைநகர். தலைநகரில், தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணாவின் நூற்றாண்டில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்துத் தந்தார் கலை–ஞர்.

    இன்று அந்த தலைவர் கலைஞரின் நூற்றாண்டில், இந்தக் கலைநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் எனும் தென் தமிழ்நாட்டின் அறி–வாலயத்தை நான் அமைத் திருக்கிறேன். இந்த நூல–கத்தை திறந்து வைக்கக்கூடிய பெரும் வாய்ப்பும், பெருமை–யும் எனக்கு கிடைத்திருப் பதை எண்ணி எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

    சங் கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த மாமதுரையில் சங்ககால இலக்கியங்களை சாமானியருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சங்கத் தமிழ் இயற்றிய மாமதுரை–யில் நூலகம் வைக்காமல் வேறு எங்கு வைக்க முடியும்.

    கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பொறுத்தவரைக் கும், குழந்தைகள் –மாண–வர்கள் போட்டித் தேர்வர் கள் – மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் பயன்பெ–றக்கூடிய வகையில் ஆறு தளங்கள் மூன்று லட்சம் புத்தகங்களைப் பெற்றிருக் கக்கூடிய இந்த நூலகத்திற்கு அறிவுத் தேடலுடன் நீங்கள் வரும்போது உங்களை அன்போடு வரவேற்க தலை–வர் கலைஞரே சிலை வடி–வமாக இங்கே காட்சிய–ளித் துக் கொண்டிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தான் என்பதை யாரும் மறந்திடக்கூடாது. அதற்கு திராவிட இயக்கமும், தி.மு.க.வும்தான் காரணம். உங்களைப் போலவே, பள்ளியில் படிக்கின்றபோது தமிழ்ப் பற்று இருந்த–தால்தான் எழுத்தாற்றல் பெற்று, போராட்டக் குணத்தின் காரணமாக மிகப்பெரிய தலைவரானார் கலைஞர்.

    பள்ளியில் நன்றாகப் படி என்று அண்ணா சொன்னா–லும், கலைஞர் படித்தது என்னவோ, அண்ணாவின் கொள்கைப் பள்ளியிலும், பெரியாரின் போராட்ட கல்லூரியிலும்தான். அன் றை அரசியல் சூழலும் கலை–ஞருக்குள்ளே இருந்த போராளியும், அவர் விரும் பிய பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போன–தற்கு காரணம். ஆனால், கலைஞருக்குள்ளே இருந்த அந்தப் போராளிதான் இன்றைக்கு பலரும் படிக்க காரணம்.

    படிப்பை நாம் எல்லோ–ரும் அடையவேண்டும் என்ற தலைவர் கலை–ஞர் உருவாக்கியதுதான் இன் றைய நவீன தமிழ்நாடு. இன்றைக்கு தமிழ்நாட்டில் நீங்கள் பார்க்கின்ற பெரும் பாலானவை கலைஞரால் உருவாக்கப்பட்டவை. நவீன கலைஞரால் உருவாக்கப்பட் டது. ஒரு இனத்தின் வளர்ச் சிக்கு முதலில் தேவை கல்வி. அதை முத–லில் கொடுத்தது, திராவிட இயக் கத்தின் தாய்க்கட்சி–யான நீதிக்கட்சி. கல்விப் புரட் சியை ஏற்படுத்தியது தி.மு.க.–வோட ஆட்சி.

    தரமான கல்வி வழங்கு–வதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முத–லிடத்துக்கு முன்னேற வேண்டும் என்பதற்கான அனைத்து பணிகளையும் செய்து கொண்டு இருக்கி–றோம். இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், 'எண்ணும் எழுத்தும்' இயக் கம், பசியோடு பள்ளிக்கு வரக்கூடிய மாண–வர்களின் பசியை போக்க 'முதலமைச் சரின் காலை உணவுத்திட்டம்' என பல்வேறு திட்டங்கள பள்ளிக்கல்வித் துறை சார் பில் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

    அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் உயர்கல்வி படிக்க வேண்டுமென்று சொன்னால், அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற "புது–மைப்பெண் திட்டம்". வரு–கிற செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்த–நாளில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கப் போகிறோம்.

    தகுதியுடைய குடும்பத் தலை–விகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கப் போகிறது. உங்கள் குடும்பத்தில் உங்கள் அம்மாவே இதனை பெறு–வார்கள். இத்தனை ஆயிரம் கோடி மதிப்பிலான பெரிய சமூகநலத் திட்டம் இதுவரை இல்லை என்று சொல்கின்ற மாதிரி மாபெரும் திட்டமாக அந்தத் திட்டம் உருவாக்கப் பட இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    விழாவில் எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார், தலைவர் ரோஷினி நாடார், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன், மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன்,

    மாநில தீர்மானக்குழு செயலாளர் அக்ரி கணேசன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் முத்து–ராமன், மேலக்குயில்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபிரபு, அவைத் தலை–வர் பாலசுப்ரமணியன், பொருளாளர் சோமசுந்தர–பாண்டியன், மாவட்ட பிரதி–நிதி அழகு பாண்டி, இளை–ஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, பகுதி செயலாளர்கள் சசி–குமார், மருதுபாண்டி, ஒன்றிய சேர்மன் வீரரா–கவன், கிழக்கு மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இளங்கோ, வைகை மருது, மாநகர் மாவட்ட இளை–ஞரணி அமைப்பாளர் சௌந்தர், 92-வது வார்டு கவுன்சிலர் கருப்புசாமி, அரசு வக்கீல் ஸ்ரீதர், நியாய விலை கடை தொழிலாளர் சங்க தனுஷ்கோடி, பால–முருகன், மதுரை மாநகர் மாவட்ட 52-வது வார்டு தி.மு.க. விஜி என்ற விஜயகுமார்,

    ஒன்றிய சேர்மன் வேட்டையன், மதுரை மாநகர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் முத்துக்குமார், மதுரை மாநகர் மாவட்ட விளையாட் மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மணிகண் டன், இளைஞரணி துணை அமைப்பாளர் ராம பிரசாத், மாநில பொதுக்குழு உறுப்பி–னர் வைகை பரமன், ஊராட்சி தலைவர்கள் கவிப்பிரியா கணபதி, ஆனந்த், சரண்யா ராஜவேல், வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, துணைத்தலைவர் கார்த்திக், அலங்காநல்லூர் பேரூ–ராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, சோழவந் தான் பேரூராட்சி தலைவர் ஜெய–ராமன், துணைத்தலை–வர் லதா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மீனாட்சி அம்மன் கோவில் யானை நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • ரங்கராமன் நரசிம்மனுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்தார்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான யானை பார்வதி கோவில் வளாகத்தில் வைத்து பரா–மரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த யானைக்கு பார்வை குறைபாடு இருப் பது கண்டுபிடிக்கப்பட் டது. அதற்கு உரிய பல்வேறு சிகிச்சைகளும் கால்நடைத் துறை சார்பில் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே யானை–யின் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு குறித்து நமது கோவில், நமது பெருமை, நமது உரிமைகள் அறக்கட்ட–ளையின் நிறுவனர் ரங்கரா–ஜன் நரசிம்மன் டுவிட் ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் யானைக்கு அளிக்கப் படும் சிகிச்சை மற்றும் பராமரிப்பு முறைகள் குறித் தும், குறைகள் இருப்பதா–கவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கு பதில் அளித் துள்ள தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரும், மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வுமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பதாவது:-

    யானை பார்வதிக்கு ஏற்பட்டுள்ள கண் நிலை குணப்படுத்த முடியாதது என்ற நிலை இருந்தபோ–திலும், அந்த குறைபாடு தெரியாத அளவுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக வெளி–நாட்டில் இருந்து கால்நடை டாக்டர்களை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படு–கிறது.

    பார்வதியை கவனிக்க கூடுதலாக நிரந்தர உதவியா–ளர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அன்னை மீனாட்சி அம்மன் மீது உண்மையான அன்பையும், நம்பிக்கையை–யும் வெளிப்படுத்த யானை பார்வதிக்கு கண்புரை நோய் சிகிச்சை உரிய முறை–யில் வழங்கப்படுகிறது. இதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பார்வதியின் கண் பிரச்சி–னைக்கு சிகிச்சை அளித்து வருவதாக அமைச்சர் தெரி–வித்துள்ளார்.

    இதற்கெல்லாம் மேலாக கடந்த ஆண்டு, தாய்லாந்தில் இருந்து கால்நடை மருத்து–வர்கள் குழு ஒன்று தாய் லாந்து தூதரக துணையுடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் யானையின் கண்களை சோதனை செய்தனர். யானையின் கண் நிலை குணப்படுத்த முடியாதது என்றும், ஆனால் மோசம–டைவதற்கான சாத்தியக்கூ–றுகளைக் குறைக்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் தெரிவித்ததாக அமைச்சர் கூறியுள்ளார்.

    அதேபோல் ரூ.23.5 லட்சம் செலவில் யானை குளித்து மகி ழ குளம் கட்டப்பட்டது. 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு யானையின் வாழ்வாதாரத்தை மேம்ப–டுத்தும் முயற்சியின் ஒரு பகுதி இது என்றார்.

    நான் யானை பார்வதிக்கு உணவளிக்கிறேன் (எனது நலனுக்காக, விளம்பரத்திற்கு மாறாக) மற்றும் நான் வழக்கமாக கோவிலுக்குச் செல்லும் போது அவளு–டைய நிலையை பார்த்தும், கேட்டும் தெரிந்துகொள் கிறேன். அவளது பொது உடல்நலம் குறித்த வழக்க–மான அறிவிப்புகளையும் நான் அறிகிறேன்.

    எனவே ரங்கராஜன் நரசிம்மன் உண்மைகளை சரிபார்த்து, யானையின் மீது கவனம் அல்லது கவ–னிப்பு இல்லை என்று குற்றம் சாட்டுவதற்கு முன்பு கடந்த கால முயற்சிகளைப் படிக்கும்படி தெரிவித்துள் ளார்.

    • வல்லாளபட்டியில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
    • கொட்டும் மழையில் சேம குதிரை, நேர்த்திக்கடன் குதிரைகளுடன் பொதுமக்கள், பக்தர்கள், கிராம இளைஞர்கள், ஊர்வலமாக சென்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வவல்லாளப்பட்டியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் புரவி எடுப்பு விழா நடந்தது. 18 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 10-ந் தேதி திருவிழா தொடங்கியது. 11-ந் தேதி சாமி சிலைகளை தலையில் ஏந்தியபடி ஆற்றுக்காலில் அமைந்துள்ள வட முகத்து கருப்பு கோவிலுக்கு சென்று வழிபட்டனர். 4-வது நாளில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு களரி எடுத்துச் சென்றனர்.

    தொடர்ந்து வல்லாளப்பட்டி நடுவளவு மந்தையிலிருந்து அரிட்டாபட்டியில் உள்ள பெரியகுளத்து கண்மாய் கரையில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலுக்கு பெண்கள் பழைய பாரம்பரிய முறைப்படி பொங்கல் பானையை தலையில் சுமந்து சென்றனர். 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம், மாவிளக்கு எடுத்து நடுவளவு கோவிலில் இருந்து புறப்பட்டு அரிட்டாபட்டிக்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து காமாட்சியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து, சாமியாட்டம் நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் 5-வது நாளில் செகுட்டு அய்யனார் கோவிலுக்கு புரவி எடுப்பு விழா நடைபெற்றது. கொட்டும் மழையில் சேம குதிரை, நேர்த்திக்கடன் குதிரைகளுடன் பொதுமக்கள், பக்தர்கள், கிராம இளைஞர்கள், ஊர்வலமாக சென்றனர்.

    • சுற்றுலா செல்வது போல் குடும்பம், குடும்பமாக நூலகத்திற்கு வரத்தொடங்கினர்.
    • முன்னதாக நூலகத்தை பார்வையிட வருகை தரும் வாசகர்களை கவரும் வகையில் இனிப்பு மற்றும் மலர் கொடுத்து வரவேற்றனர்.

    மதுரை:

    மதுரையில் புதுநத்தம் சாலையில் ரூ.216 கோடி மதிப்பீட்டில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 334 சதுர அடி கட்டப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நேற்று தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த மாமதுரையில் சங்ககால இலக்கியங்களை சாமானியருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சங்கத் தமிழ் இயற்றிய மாமதுரையில் நூலகம் வைக்காமல் வேறு எங்கு வைக்க முடியும்.

    கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பொறுத்தவரை குழந்தைகள், மாணவர்கள், போட்டித் தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பயன்பெறக் கூடிய வகையில் ஆறு தளங்கள் மூன்று லட்சம் புத்தகங்களைப் பெற்றிருக்கக்கூடிய இந்த நூலகத்திற்கு அறிவுத் தேடலுடன் நீங்கள் வரும்போது உங்களை அன்போடு வரவேற்க தலைவர் கலைஞரே சிலை வடிவமாக இங்கே காட்சியளித்துக் கொண்டிருக்கிறார் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து நூலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. மதுரையில் பொழுது போக்கு இடங்கள் என ஏராளம் இருந்தபோதிலும், விடுமுறை தினமான இன்று அதிக கூட்டம் திரண்டது கலைஞர் நூலகத்திற்குத் தான். சுற்றுலா செல்வது போல் குடும்பம், குடும்பமாக நூலகத்திற்கு வரத்தொடங்கினர். ஆறு தளங்களை கொண்ட நூலகத்தை பொது மக்கள், மாணவ, மாணவிகள் பலரும் ஆர்வத்துடன் வந்து கூட்டம் கூட்டமாக வந்து பார்வையிட்டு வருகின்றனர்

    முன்னதாக நூலகத்தை பார்வையிட வருகை தரும் வாசகர்களை கவரும் வகையில் இனிப்பு மற்றும் மலர் கொடுத்து வரவேற்றனர். "காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது" என்ற வாசகம் வரவேற்பு அறையில் பொறிக்கப்பட் டுள்ளது. தரைத்தளத்தில் உள்ள கலைக்கூடத்தில் மதுரையில் பண்டைய கால வரலாற்றை நினைவுபடுத் தும் வகையில் திருமலை நாயக்கர் மஹால், விளக்குத் தூண், மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு நுழைவு வாயில், வைகை ஆற்றின் தரைப்பாலம், யானைமலை, அமெரிக்கன் கல்லூரி, காந்தி மியூசியம், 1930 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கழுகுப் பார்வை படம், தெப்பக்குளம், யானைக்கல், மதுரை தினசரி சந்தை, தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், பரதநாட்டியம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் ஒயிலாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து, புலியாட்டம், உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்களின் தொகுப்பு கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பண்டைய கால கல்வெட்டுக்கள் தமிழ் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் கீழடி, பொருநை அகழ்வாராய்ச்சிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    முதல் தளத்தில் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் தனிப்பரிவு செயல்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நூல்களை பார்வையிட வசதியாக சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளது.

    முதல் தளத்தில் குழந்தைகள் பிரிவு உள்ளது. குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய விளையாட்டு பொருட்கள், புத்தகங்கள் ஆகியவை அடுக்கி வைக்கப்பட்டுள் ளது. தற்போது பார்வையிட மட்டுமே அனுமதி வழங்கப் பட்டுள்ளது. புத்தகங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்ட பின்னர் பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவர்.

    நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் செயல்படுகிறது. தினசரி, வார, மாத, நாளிதழ்கள் கட்சிக்கு வைக்கப்பட்டுளது. முதல் தளத்தில் கலைஞர் பிரிவு செயல்படுகிறது. இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவும், மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவும் செயல்படுகிறது. இதில் பல்லாயிரக்கணக் கான நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நூலகத்தை பார்வையிட வந்த பார்வையாளர் கூறியதாவது:-

    தமிழகத்தை பொறுத்தவரை சென்னை அண்ணா நூலகத்திற்கு அடுத்தபடியாக மதுரையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மாநகராட்சி வளாகம் மற்றும் காந்தி மியூசியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வெளியில் அமர்ந்து படித்து வந்தனர்.

    தற்போது கலைஞர் நூலகத்தில் அமைதியான சூழ்நிலையையும், தோட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதால் கலைஞர் நூலகத்தை பயன்படுத்தி ஏராளமானோர் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பதவிகளில் இடம் பிடிப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.

    நூலகத்திற்கு வந்த இளம்பெண் ஒருவர் கூறுகையில், எத்தனையோ பழமையான நூலகங்களுக்கு சென்றிருக்கிறோம். ஆனால் இப்படி ஒரு பிரமாண்டமான நூலகத்தை வாழ்நாளில் பார்த்ததில்லை. இது ஒரு நூலகம் போல் தெரிவதைவிட, ஒரு சர்வதேச அரங்கிற்குள் நுழைவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

    தொலைக்காட்சிகளிலும், சினிமாக்களிலும் மட்டுமே பார்த்து வியந்த ஒரு கல்வி களஞ்சியமாக திகழும் நூலகத்தில் எங்கள் காலத்தில் நேரில் பார்த்து, பயன் அடைந்தது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என்றார்.

    காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நூலகம் திறந்து இருக்கும். பொங்கல் பண்டிகை, குடியரசு தினம், தமிழ் புத்தாண்டு, ரம்ஜான், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகை தினங்களில் நூலகம் செயல் படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அறிவுக்களஞ்சியமாக திகழும் இந்த நூலகம் வருங்காலத்தில் நிச்சயம் புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 

    • படிப்பு மட்டும் தான் யாராலும் திருட முடியாத ஒரே சொத்து.
    • ஒரு இனத்தின் முன்னேற்றத்திற்கு கல்வி தான் முக்கியம்.

    மதுரை புது நத்தம் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னதாக நூலக வளாகத்தில் கருணாநிதியின் சிலையையும் திறந்து வைத்தார்.

    விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தி, டி.ஆர்.பாலு எம்.பி., உள்ளிட்டோர் பங்றே்றுள்ளனர்.

    கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என நான் அடிக்கடி சொல்வது கல்வியும், சுகாதாரமும் தான்.

    சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வோம் என்பதற்கு சென்னை மருத்துவமனையும், மதுரை நூலகமும் சான்று.

    சென்னை தமிழகத்தின் தலைநகர் என்றால், மதுரை தமிழகத்தின் கலை நகர். கண்ணகி எரித்த மதுரையில் அறிவு தீ பரவ போகிறது.

    திமுக என்பது அரசியல் இயக்கம் மட்டுமல்ல, அறிவு இயக்கமும் ஆகும். கலைஞர் நூலகத்திற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்.

    எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார், அரசு பள்ளியில் படித்தவர்தான்.

    குழந்தைகள், மாணவர்கள், போட்டித் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் நூலகம் அமைந்துள்ளது. அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

    மாணவர் பருவத்திலேயே தமிழ் சமூகத்திற்காக போராடியவர் கருணாநிதி. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியே ஒரு நூலகம் தான்.

    தமிழ் இன்றும் தனித்து இயங்க காரணம், மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம்.

    படிப்பு ஒன்றே மாணவர்களுக்கு நோக்கமாக இருக்க வேண்டும். படிப்பு மட்டும் தான் யாராலும் திருட முடியாத ஒரே சொத்து. ஒரு இனத்தின் முன்னேற்றத்திற்கு கல்வி தான் முக்கியம்.

    காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கருணாநிதி.

    தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது.

    மற்ற மாநிலங்கள் நம்மை பின்பற்றும் வகையில் மகத்தான திட்டங்களை வழங்கி வருகிறோம். இந்தியாவின் முதன்மை மாநில தமிழகத்தை உருவாக்குவதே எங்களின் நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூலக வளாகத்தில் கருணாநிதியின் சிலையையும் திறந்து வைத்தார்.
    • விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு.

    மதுரை புது நத்தம் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    முன்னதாக நூலக வளாகத்தில் கருணாநிதியின் சிலையையும் திறந்து வைத்தார்.

    தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சர்வதேச தரத்தில் நூலகம் கட்டப்பட்டுள்ளது.

    நூலகத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. நாளிதழ் சேமிப்பு இடம், நூல் கட்டும் இடம் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    நூலகம் 6 தளங்கள் கொண்டு கட்டப்பட்டு இருப்பதால் லிப்ட் வசதியும் உள்ளது.

    தரைதளத்தில் அழகிய கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்கு ஏற்றவாறு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.

    கூட்ட அரங்கம், முக்கிய பிரமுகர்களின் அறை, சொந்த நூல்களை எடுத்து வந்து படிக்கும் பிரிவு உள்ளது.

    முதல் தளத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய நூல்கள் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

    2ம் தளம் முழுவதும் தமிழ் நூல்கள் இடம் பெற்றுள்ளன.

    3ம் தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவும், ஆராய்ச்சி இதழ்கள் பிரிவும் உள்ளன.

    4ம் தளத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

    5ம் தளத்தில் மின் நூலகம், பல்லூடக பிரிவு நூல் பாதுகாப்பு பிரிவு, ஒளிப்பதிவு கூடம் உள்ளன.

    6வது தளத்தில் நூல் பகுப்பாய்வு, நிர்வாகப் பிரிவு, பணியாளர்கள் உணவு அருந்தும் இடம் அமைந்துள்ளன.

    விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தி, டி.ஆர்.பாலு எம்.பி., உள்ளிட்டோர் பங்றே்றுள்ளனர்.

    • மதுரையில் இளம்பெண்-சிறுவன் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பெத்தானியா புரம் திலீபன் குறுக்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சங்கீதா (வயது 23). இவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கரிமேடு போலீஸ் நிலையத்தில் சங்கீதாவின் தந்தை முருகன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காளவாசல் பாண்டியன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் கலையரசன் (17). இவர் கடந்த சில மாதங்களாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிறுவனின் தந்தை முனியாண்டி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்லூர் ஜான்சிராணி புரம் முதல் தெருவை சேர்ந்தவர் தவமுருகன் (52), கூலித் தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தவமுருகனின் மனைவி நல்லம்மாள் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகரில் நடைபெறும் காமராஜர் விழாவில் பங்கேற்பதற்காக கே.எஸ்.அழகிரி மதுரை வந்தார்.
    • மணிப்பூர் கலவரத்திற்கு மத்திய அரசே காரணம் என நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    மதுரை

    விருதுநகரில் நடைபெறும் காமராஜர் விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    மணிப்பூர் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையே 35 லட்சம் தான். சிறிய அளவில் மக்கள் தொகை உள்ள ஒரு மாநிலத்தில் சட்ட ஒழுங்கை காப்பாற்ற முடியாமல் போனது மிக பெரிய தவறாகும். காங்கிரஸ் கட்சி சார்பில் அந்த மக்களுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறோம்.

    இந்த கலவரத்திற்கு காரணமே மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தான். அங்கே இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என்று பிரித்து கலவரத்தை தூண்டும் வேலைகளை செய்கின்றனர். தென்காசியில் மறு வாக்கு எண்ணிக்கை செய்ததில் தவறில்லை. கர்நாடகா மேகதாது அணை பிரச்சனையில் தமிழகத்தின் உரிமை ஒருபோதும் விலை போகாது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழக அரசிற்கு ஆதரவாக உள்ளன. ஆனால் தமிழகத்தில் உள்ள பா.ஜ.க. மட்டும் கர்நாடகாவிற்கு ஆதரவாக இருக்கிறது.கர்நாடகா பா.ஜ.க. தலைவர் பொம்மை. கர்நாடகத்துக்கு ஆதரவாக இருக்கிறார். ஆனால் தமிழகத்தில் இருக்கும் பா.ஜ.க. தலைவர் தமிழக அரசுக்கு ஆதரவாக இல்லாமல் கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு பின்பு இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி மாபெரும் வளர்ச்சி பெற்று வருகிறது.

    சோனியா காந்தி அழைப்புக்கு பின்பு காங்கிரஸ் கட்சியை ஏற்க மறுத்தவர்கள் கூட தற்போது ஆதரவு தெரி வித்து வரவேற்கிறார்கள். பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்பதை பின்னர் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின் போது மதுரை மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் சையது பாபு, சிலுவை, கவுன்சிலர்கள் ஜெய்ஹிந்த்பு ரம் முருகன், ராஜ் பிரதாபன், தல்லாகுளம் முருகன், சுந்தரமகாலிங்கம், மலர் பாண்டியன், வாஞ்சிநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×