search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puravi Teku Festival"

    • வல்லாளபட்டியில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
    • கொட்டும் மழையில் சேம குதிரை, நேர்த்திக்கடன் குதிரைகளுடன் பொதுமக்கள், பக்தர்கள், கிராம இளைஞர்கள், ஊர்வலமாக சென்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வவல்லாளப்பட்டியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் புரவி எடுப்பு விழா நடந்தது. 18 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 10-ந் தேதி திருவிழா தொடங்கியது. 11-ந் தேதி சாமி சிலைகளை தலையில் ஏந்தியபடி ஆற்றுக்காலில் அமைந்துள்ள வட முகத்து கருப்பு கோவிலுக்கு சென்று வழிபட்டனர். 4-வது நாளில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு களரி எடுத்துச் சென்றனர்.

    தொடர்ந்து வல்லாளப்பட்டி நடுவளவு மந்தையிலிருந்து அரிட்டாபட்டியில் உள்ள பெரியகுளத்து கண்மாய் கரையில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலுக்கு பெண்கள் பழைய பாரம்பரிய முறைப்படி பொங்கல் பானையை தலையில் சுமந்து சென்றனர். 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம், மாவிளக்கு எடுத்து நடுவளவு கோவிலில் இருந்து புறப்பட்டு அரிட்டாபட்டிக்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து காமாட்சியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து, சாமியாட்டம் நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் 5-வது நாளில் செகுட்டு அய்யனார் கோவிலுக்கு புரவி எடுப்பு விழா நடைபெற்றது. கொட்டும் மழையில் சேம குதிரை, நேர்த்திக்கடன் குதிரைகளுடன் பொதுமக்கள், பக்தர்கள், கிராம இளைஞர்கள், ஊர்வலமாக சென்றனர்.

    ×