என் மலர்tooltip icon

    மதுரை

    • முதல்-அமைச்சருக்கு, திருமங்கலம் நகராட்சி கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • இதனை தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் வரவேற்ற–னர்.

    திருமங்கலம்

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், துணைமேயர், தலைவர், துணைத்தலைவர், கவுன்சி–லர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கிய முதல்-அமைச்சருக்கு திரு–மங்கலம் நகராட்சி கூட்டத் தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    திருமங்கலம் நகராட்சி கூட்டம் தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத்தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    தலைவர் ரம்யா முத்துக் குமார் கொண்டு வந்த சிறப்பு தீர்மானத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப் புகளில் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கவேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் கவுன்சி–லர்களுக்கு மதிப்பூதியம் வழங்கிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அரசுக்கு நன்றி தெரிவிப்ப–தாக தெரிவித்தார். இதனை தி.மு.க. உள் ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் வரவேற்ற–னர். திருமங்கலம் நகராட்சி–யில் ரூ.204 லட்சம் மதிப்பீட் டில் 2.902 கி.மீ. நீளமுள்ள 25 மண்சாலையை தார் சாலையாக மாற்றுவது, நகராட்சியின் 27 வார்டுக–ளிலும் உள்ள 2076 தெரு–விளக்குகளை எல்இடி தெருவிளக்குகளாக மாற்றி அமைப்பது, குடிநீர் பிரச்சி–னைக்கு மினி போர்வெல் களை சரிசெய்வது உள் ளிட்ட பல்வேறு தீர்மா–னங் கள் நிறைவேற்றப்பட்டன.

    • வாடிப்பட்டி அருகே ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது.
    • இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப் பட்டி அருகே நீரேத் தானில் பழமையும் பெரு மையும் வாய்ந்த விஜயநகர பேரரசுகாலத்தில் கட்டப் பட்ட குகை வடி வத்தில் கைகளில் வெண்ணெய் ஏந்தி கோலத்தில் அருள் பாலிக்கும் நவநீதப்பெரு மாள் கோவில் உள்ளது.

    இங்கு ஆண்டாள் திருக்கல்யாணம் விமரிசை யாக நடந்தது. காலை 6 மணிக்கு விஸ்வ ரூப தரிசனம் கோ பூஜையுடன் தொடங்கியது. 7 மணியிலிருந்து 9மணிவரை மண மகன், மணமகள் அழைப்பு, முளைப்பாலிகை, காப்புகட்டுதல் நடந்தது. 10.30 மணிமுதல் 11.30 மணிக்குள் பாலாஜிபட்டர் ஹோமம் வளர்க்க நவநீத பெருமாள் - ஆண்டாள் திருமாங்கல்யதாரணம் திருக்கல்யாணம் நடந்தது.

    11.30மணிமுதல் 1 மணிவரை கச்சைகட்டி யதி ராஜர், காக்கூர்கண்ணன், சுந்தரராமானுஜர் கோஷ்டியினரின் நாச்சியார் திருமொழிபாடப்பட்டது. மாலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டு நீலபட்டாடைஉடுத்தி ஆண்டாள்- நவநீத பெரு மாளுக்கு ஊஞ்சலாட்டும் லாலிபாட்டுடன் பஜன் பாடப்பட்டது. இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதன் ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள், அர்ச்சகர்கள், கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.

    • பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி விளம்பர லோகோவை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
    • இந்திய அளவில் யாரும் மாநாட்டிற்காக இதுபோன்ற பந்தல் அமைத்ததில்லை.

    மதுரை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு பொதுமக்களை பங்கேற்கச் செய்யும் வகையில், ஜெயலலிதா பேரவை சார்பில் உசிலம்பட்டியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், விளம்பர லோகோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி விளம்பர லோகோவை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், கே.தமிழரசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் பொன்விழா எழுச்சி மாநாடு 65 ஏக்கர் பரப்பளவில் நடைபெறுகிறது. இதில் 35 ஏக்கரில் உணவு கூடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 25 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் சிறப்பான வகையில் ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. இந்த மாநாட்டின் அனைத்து நகர்வுகளும் நாள்தோறும் எடப்பாடியாரின் தகுந்த வழிகாட்டுதலில் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை முதல் இரவு வரை சுடச்சுட உணவு வழங்கப்பட்டுகிறது. இந்த மாநாட்டுக்காக மூன்று லட்சம் சதுர அடியில் பந்தல் போடப்பட்டது. இதனை தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொண்டர்கள் வெயிலில் வாடக்கூடாது என்று எடப்பாடியார் ஆணையின் படி கூடுதலாக வலது புறமும், இடதுபுறமும் தலா ஒரு லட்சம் சதுரடியில் பந்தல் போடப்பட்டு வருகிறது. ஏறத்தாழ ஐந்து லட்சம் சதுரடியில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் யாரும் மாநாட்டிற்காக இதுபோன்ற பந்தல் அமைத்ததில்லை.

    இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சேலம், நாமக்கல், கோவை, கிருஷ்ணகிரி, வேலூர், கரூர், கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தேனி உள்ளிட்ட 40 மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் கப்பலூர் டோல்கேட் வழியாகவும்,

    சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 30 மாவட்டங்கள் விரகனூர் பைபாஸ் வழியாகவும்,

    தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வரும் வாகனங்கள் வளையங்குளம் ரிங்ரோடு வழியாகவும் வருகின்றன. இந்த வாகனங்களை நிறுத்தும் வகையில் 13 இடங்களில், 300 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்பட்டுள்ளது. உலக அதிசயம் ஏழாக இருந்தாலும் எடப்பாடியார் உரையாற்றும் போது, இந்த மாநாடு 8-வது உலக அதிசயமாக திகழும்.

    பாராளுமன்ற கூட்டத்தில் பாரதப் பிரதமர் கட்சத் தீவை தாரை வார்த்தது தி.மு.க. தான் என்று தி.மு.க.வின் துரோகத்தை அம்பலப்படுத்திவிட்டார். அதனைத் தொடர்ந்து மணிப்பூர் சம்பவம் குறித்து கனிமொழி பேசிய போது, அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 1989-ம் ஆண்டு சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை சேலையை பிடித்து அவமானப்படுத்திய சம்பவத்தை நினைவு கூர்ந்து, அவருக்கு நடந்த கொடுமையை, அவமானத்தை எடுத்துரைத்தார்.

    புரட்சித்தலைவி அம்மா அப்போது நான் மீண்டும் சட்டசபைக்கு முதலமைச்சராக வருவேன் என்று சபதம் போட்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக தான் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.

    தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை டெல்லியில் தோலுரித்துக் காட்டினார். பெண்கள் மீது பாசம் உள்ளது போல தி.மு.க. நாடகம் போடுகிறது. அம்மாவின் தைரியத்தை டெல்லியில் பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தைரியமாக எடுத்துரைத்தார்.

    எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலரும் வகையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான கால்கோள் விழாவாக மதுரை மாநாடு அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊராட்சி நிதியை முறைகேடு செய்ததற்கு தகுந்த ஆதாரங்களோடு கடந்த ஆண்டு ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனரிடம் மனு அளித்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டது.
    • வழக்கு குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த பெரியதுரை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவலப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவரும், ஊராட்சி மன்ற துணைத்தலைவரும் பல்வேறு பணிகளை செய்யாமலே செய்ததாக கணக்கு காட்டி பல லட்ச ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

    ஊராட்சி நிதியை முறைகேடு செய்ததற்கு தகுந்த ஆதாரங்களோடு கடந்த ஆண்டு ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனரிடம் மனு அளித்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பணத்தை முறைகேடு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    எனவே, பொதுமக்களின் வரிப்பணத்தையும், ஊராட்சி நிதியையும் கையாடல் செய்து தொடர் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் இருவரையும் தகுதிநீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.

    • வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து இருந்தது.
    • போலி டாக்டரின் ஆஸ்பத்திரிக்கு நிதி உதவி செய்ததாக மனுதாரர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் தொண்டியில் போலி பெண் டாக்டர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அந்த பெண்ணுக்கு நான் உதவியதாக கூறி, அப்போதைய தொண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி, என்னை சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்தார்.

    மேலும் அந்த போலி டாக்டரை பாலியல் ரீதியாக நான் துன்புறுத்தியதாகவும் பொய் புகார் பெற்று வழக்குபதிவு செய்தார். என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். போலீஸ் அதிகாரி புகழேந்தி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண் டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து இருந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், போலி டாக்டரின் ஆஸ்பத்திரிக்கு நிதி உதவி செய்ததாக மனுதாரர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    ஆனால் அதற்கான எந்த ஆதாரங்களையும் போலீசார் கோர்ட்டில் சமர்ப்பிக்கவில்லை, நிரூபிக்கவும் இல்லை. அதுமட்டுமல்லாமல் மனுதாரருக்கு எதிராக பதிவான முதல் தகவல் அறிக்கையிலும் வலுவான குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை. எனவே மனுதாரர் மீது போலீசார் பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

    • அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்க வெற்றிலை பாக்கு வைத்து செல்லூர் ராஜூ அழைப்பிதழ் கொடுத்தார்.
    • தொண்டர்களுக்கு வேட்டி, சேலை வழங்கி மாநாட்டில் உற்சாகமாக பங்கேற்க அழைப்பி தழ்களை வழங்கி வருகிறார்.

    மதுரை

    மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு வருகிற 20-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான தொண்டர்களை மாநாட்டில் பங்கேற்க செய்யும் வகையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் தீவிர களப்பணியாற்றி வருகி றார்கள்.

    மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் அ.தி.மு.க. தொண்டர்களை மாநாட்டில் திரளாக பங்கேற்க செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாநாட்டுக்கான அழைப்பிதழ்களை சர்வ சமய பிரார்த்தனைகள் செய்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்.

    இன்று காமராஜர் சாலை பகுதியில் உள்ள கோவிலில் அழைப்பிதழ்களை வைத்து சாமி கும்பிட்ட செல்லூர் ராஜூ, அந்த பகுதியில் வீதி வீதியாக சென்று பொது மக்களுக்கு மாநாட்டு அழைப்பிதழ்களை வழங்கி னார். அப்போது வியாபா ரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு வெற்றி லை பாக்குடன் அழைப்பி தழை வைத்து கொடுத்து மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

    அ.தி.மு.க. நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம். எஸ்.பாண்டியன், அண்ணாதுரை, குமார், சோலை ராஜா, கலைச் செல்வம், சண்முகவள்ளி மற்றும் முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் மாநாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார். பொது மக்களுக்கு மரக்கன்று களை வழங்கி மாநாட்டில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்து வரும் ஆர்.பி. உதயகுமார் மதுரை புறநகர் மாவட்டத்தில் இருந்து சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை மாநாட்டிற்கு அழைத்துவர திட்டமிட்டு தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் நல உதவிகளை வழங்கி மாநாட்டில் பங்கேற்க செய்யும் வகையில் அவர் அழைப்பு விடுத்து வருகிறார். மேலும் இருசக்கர வாகனங்கள், கார்களில் அ.தி.மு.க. மாநாட்டின் லோகோவை ஒட்டியும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கிழக்கு மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேட்டி, சேலை வழங்கி மாநாட்டில் உற்சாகமாக பங்கேற்க அழைப்பி தழ்களை வழங்கி வருகிறார்.

    மதுரை மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான தொண்டர்களை பங்கேற்க செய்யும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தீவிரப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மாநாட்டிற்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் தலைமைகழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் தமிழக முழுவதும் கட்சி தொண்டர்களை சந்தித்து மாநாட்டில் பங்கேற்க அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார்கள்.

    • மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
    • பயிற்சி பட்டறை மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு திட்ட பயிற்சி இந்த தொழில் நிறுவனத்தில் அளிக்கப்படும்.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி (சுயநிதி பிரிவு) மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை மற்றும் ஐ.பி.சி.எஸ். குளோபல் சொல்யூசன் தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தத்தில் மாண–வர்களுக்கு ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் சார்ந்த கருத்தரங்குகள், பயிற்சி பட்டறை மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு திட்ட பயிற்சி இந்த தொழில் நிறுவனத்தில் அளிக்கப்ப–டும்.

    இதன் மூலம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள் வேலை–வாய்ப்பு மற்றும் துறை சார்ந்த தொழில் தொடங்கு–வதற்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புரிந்துணர்வு ஒப்பந் தம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி செயலா–ளர் எம்.விஜயராகவன்,

    கல்லூரி முதல்வர் முனை–வர் அ.ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குநர் ச.பிரபு, துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஐ.பி.சி.எஸ். குளோ–பல் சொல்யூசன் தனியார் நிறுவனத்தின் சார்பில் கிளை இயக்குநர் கே.கார்த்தி, கிளை மேலாளர் கே.சரவணன் ஆகியோர் முன்னிலையில் கையொப்பம் இடப்பட்டது.

    • ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஜெய்சாய் சைவ உணவகம் நாளை திறக்கப்படுகிறது.
    • சமுத்திரம், தாமரை செல்வி மற்றும் ஓட்டல் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை கீழ சித்திரை வீதியில் ஸ்ரீமீனாட்சி சுந்த–ரேஸ்வரர் ஜெய்சாய் புதிய சைவ உணவகம் பிரமாண் டமாக அமைக்கப்பட்டுள் ளது. இதன் திறப்பு விழா நாளை (11-ந்தேதி, வெள் ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகி–றது.

    இதனை மதுரை ராஜஸ் தான் மெட்டல்ஸ் அதிபர் அரவிந்த் குமார் ஜெயின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைக்கிறார். உயர்தர சைவ உணவமாக உருவெடுக்கும் இந்த புதிய ஓட்டலில் டீ, காபி, ஸ்நாக்ஸ் வகைகளும் வழங்கப்படுகிறது.

    வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப தரமான மற்றும் சுகாதார முறையில் சுவைக்கு புதிய அத்தியாயம் வகுக்கும் வகையில் உணவு–களை தயாரித்து வழங்க ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஜெய்சாய் சைவ உணவகத் தினர் தயாராகி வருகி–றார்கள்.

    திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை சமுத்திரம், தாமரை செல்வி மற்றும் ஓட்டல் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    • வெவ்வேறு இடங்களில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் வளைத்து பிடித்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    மதுரை

    மதுரை கரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ரத்தினவேலு மற்றும் போலீசார் புட்டுத்தோப்பு, வைகை ஆற்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த 5 பேரை பிடித்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

    பிடிபட்டவர்களிடம் சோதனை செய்தபோது வாள், கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தன. மேலும் விசாரணையில் அவர்கள் யோகநாதசாமி, தெற்கு மடத்தை சேர்ந்த முத்துமாணிக்கம் (25), கிராஸ் ரோடு அருள்மணி (26), யோகேசுவரன் (24), மகேஸ்வரன்(31), பொன்னகரம் ராஜா (25), மேலமடை விஜய் (25) என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். தப்பியோடிய முத்து மாணிக்கம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தெற்குவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்தப்பகுதியில் 11 பேர் பதுங்கி இருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் ஓடினர்.

    அதில் 8 பேரை போலீசார் வளைத்து பிடித்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.விசாரணையில் அவர்கள் சோலையழகுபுரம் வினோத்குமார் (19), குமார் (24), பிரகாஷ் (19), சதீஷ், மதன்குமார் (19), வினோத், பிரகாஷ்(19) என்பது தெரியவந்தது.

    மேலும் 3 பேர் 17 வயது சிறுவர்கள். போலீசார் அவர்களை கைது செய்தனர். தப்பி ஓடிய சிவா, சபரி, ஆறுமுகம் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • கத்தியை காட்டி மிரட்டி ஓட்டல் அதிபர்- வாலிபரிடம் பணம் பறிக்கப்பட்டது.
    • ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை செல்லூர் மீனாம் பாள்புரம் பாரதிதாசன் ரோட்டை சேர்ந்தவர் மகுதுரபீக்ஒலி(வயது43). இவர் பி.பி.குளம் முல்லை நகரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு வந்த 6 பேர் அவரை கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.5ஆயிரத்தை பறித்துச் சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து ஓட்டல் உரிமையாளர் மகுதுரபீக்ஒலி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பி.பி.குளம் யோகராஜ் (31), கார்த்திகேயன் என்ற வெள்ளையன் கார்த்திக் (31), கோகுல் விஜய் (29), அனிபாண்டி ராஜா (46), கிருஷ்ணன் என்ற ஜப்பான் ராஜா (31), சுரேஷ் (31) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் உசிலம் பட்டியை சேர்ந்தவர் ஒச்சு காளை (30). இவர் ஜெய் ஹிந்துபுரம் 2-வது மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவரை 3 வாலிபர்கள் வழிமறித்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஒச்சுக்காளையிடம் இருந்து பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து ஒச்சுக்காளை ஜெய்ஹிந்து புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த சஞ்சய் (23), ஜாகிர் உசேன் (22), சூர்யா என்ற ஆட்டோ பாஸ்கர் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • அன்னை பாத்திமா கல்லூரியில் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் கல்லூரி பேரா–சிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். சார்பில் மாநில என்.எஸ்.எஸ். திட்ட இயக் குநர் செந்தில்குமார் மற்றும் மதுரை காமராஜர் பல்க–லைக்கழக என்எஸ்எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி வழிகாட்டுதலோடு மலேசிய சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகமும் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி–யும் இணைந்து நடத்திய கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சி கல்லூஞ நடைபெற் றது.

    அன்னை பாத்திமா கல்வி குழுமத்தின் தலைவர் எம்.எஸ். ஷா,பொருளாளர் சகிலா ஷா ஆகியார் வாழ்த்துக்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

    என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் முனியாண்டி வரவேற்றார் கல்லூரி முதல்வர் அப்துல் காதர் தலைமை தாங்கி பேசுகை–யில் பயணங்கள் மூலமாக கலாச்சாரங்கள் ஒரு நாட்டை விட்டு மற்றொரு நாட்டிற்கு பரவி உள்ளது. கலாச்சாரம் மட்டுமின்றி வேளாண்மை தொழிலிலும் பரவலாக்கப்படுகிறது. சீனப் பயணி யுவான் சுவாங் தனது பயணத்தை அடிப்ப–டையாக கொண்டு கலாச் சார நூல்கள் பல எழுதி–யுள்ளார் என்று கூறினார்.

    மலேசிய சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்க–ழக பேராசிரியர் மனோன் மணி தேவி பேசுகையில், கல்லூரி மாணவர்கள் பய–ணங்கள் மூலமாக வாழ்வி–யலை கற்றுக் கொள்வதோடு எந்த சூழ்நிலையிலும் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

    மலேசியா சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக் கழக மாணவர் தலைவர் வெண்ணிலவன் பரந்தாமன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி மாணவ, மாணவி–கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடு–களை உணவு மேலாண்மை துறை பேராசிரியர் விக் னேஸ்வர சீமாட்டி செய்தி–ருந்தார். மலேசிய சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்க–லைக்க–ழக மாணவர்களும் தங்கள் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி–னர். முடிவில் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ராமுத் தாய் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேரா–சிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

    விழா ஏற்பாடுகளை கல் லூரி தமிழ்த்துறை தலைவர் மற்றும் என்எஸ்எஸ் திட்ட அலுவலர் முனியாண்டி மற்றும் தமிழ் துறை பேராசி–ரியர்கள் செய்திருந்த–னர்.

    • இலவச நல உதவிகள்-காலை சிற்றுண்டி திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
    • இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

    மதுரை

    மதுரை மங்கலபுரம் பகு–தியில் உள்ள கேப்ரன் ஹால் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 188-வது விளை–யாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பி–னரும், கிறிஸ்தவ நல் லெண்ண இயக்க தலைவ–ருமான இனிகோ இருதய–ராஜ் எம்.எம்.எல்.ஏ., தென்னிந்திய திருச்சபை பொதுச் செயலாளர் மற்றும் ஜெனிவா உலக திருச்சபை மாமன்ற உறுப்பினர் வழக்க–றிஞர் பெர்னாண்டஸ் ரத் தினராஜா மற்றும் மதுரை ராமநாதபுரம் திருமண்டில பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்த–னர்.

    இதில் சிறப்பு விருந்தின–ராக கலந்து கொண்ட தென்னிந்திய திருச்சபை பொதுச் செயலாளர் பெர்னாண்டஸ் ரத்தின–ராஜா பேசுகையில், தமிழகத் தில் முதலமைச்சர் மு.க.–ஸ்டாலின் சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக செயல்பட்டு வருகிறார்.

    அரசு பள்ளிகளில் பயி–லும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் வழங்கப்படும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாண–வர்களுக்கும் வழங்க வேண் டும்.

    அதுபோல அரசு பள்ளி–களில் பயிலும் மாணவர்க–ளுக்கு வழங்கப்படும் இல–வச நலத்திட்டங்கள், காலை சிற்றுண்டி ஆகியவையும் அரசு உதவி பெறும் சிறு–பான்மை பள்ளிகளான கிறிஸ்தவ பள்ளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து விரை–வில் இதனை செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

    இதையடுத்து தலைமை உரையாற்றிய இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக முதலமைச்சர் மு.க.ஸ்டா–லின், சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். கடந்த சட்டமன்ற கூட்டத்தின் போது, நான் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும். இலவச நலத்திட்டங்கள் மற்றும் காலை சிற்றுண்டி ஆகிய திட்டங்களை சிறுபான்மை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பேசி இருக்கிறேன். எனவே முதலமைச்சர் மு.க.–ஸ்டாலின் இந்த கோரிக்கை–களை விரைவில் நிறை–வேற்றி அதற்கான அறி–விப்பை வெளியிடுவார் என்று உறுதியாக நம்புகி–றேன்.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    இதைத்தொடர்ந்து பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் ஜெபம் செய்து ஆசிர்வாதம் வழங்கினார். விழாவில் பல்வேறு போட்டி–களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை பார்ச் சூன் பொன்மலர் ராணி வரவேற்று பேசினார்.

    முடிவில் பள்ளி தாளா–ளர் அருள் தாஸ் நன்றி கூறினார். இந்த விழாவில் மதுரை ராமநாதபுரம் திரு–மண்டல முதன்மை பணியா–ளர்கள் மற்றும் போதகர்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×