முதல்-அமைச்சருக்கு, திருமங்கலம் நகராட்சி கூட்டத்தில் பாராட்டு

முதல்-அமைச்சருக்கு, திருமங்கலம் நகராட்சி கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதனை தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் வரவேற்ற–னர்.
திருமங்கலம் நகராட்சி கூட்டம் தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைைமயில் நடைபெற்றபோது எடுத்தபடம்.
திருமங்கலம் நகராட்சி கூட்டம் தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைைமயில் நடைபெற்றபோது எடுத்தபடம்.
Published on

திருமங்கலம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், துணைமேயர், தலைவர், துணைத்தலைவர், கவுன்சி–லர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கிய முதல்-அமைச்சருக்கு திரு–மங்கலம் நகராட்சி கூட்டத் தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருமங்கலம் நகராட்சி கூட்டம் தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத்தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

தலைவர் ரம்யா முத்துக் குமார் கொண்டு வந்த சிறப்பு தீர்மானத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப் புகளில் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கவேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் கவுன்சி–லர்களுக்கு மதிப்பூதியம் வழங்கிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அரசுக்கு நன்றி தெரிவிப்ப–தாக தெரிவித்தார். இதனை தி.மு.க. உள் ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் வரவேற்ற–னர். திருமங்கலம் நகராட்சி–யில் ரூ.204 லட்சம் மதிப்பீட் டில் 2.902 கி.மீ. நீளமுள்ள 25 மண்சாலையை தார் சாலையாக மாற்றுவது, நகராட்சியின் 27 வார்டுக–ளிலும் உள்ள 2076 தெரு–விளக்குகளை எல்இடி தெருவிளக்குகளாக மாற்றி அமைப்பது, குடிநீர் பிரச்சி–னைக்கு மினி போர்வெல் களை சரிசெய்வது உள் ளிட்ட பல்வேறு தீர்மா–னங் கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com