என் மலர்
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே உள்ள ஏரி சின்னகவுண்டனஅள்ளியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 24). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நவீன்குமாரின் தாய் பென்னியம்மாள் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார். மாலை வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தார்.
அப்போது நவீன்குமார் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து அவரது தாய் ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
போச்சம்பள்ளி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
மத்தூர் அருகே உள்ள கொத்தகோட்டையை சேர்ந்தவர் வசந்தா (வயது 48). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் இருந்தார். அந்த நேரம் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 12 ஆயிரம் ரொக்கம், வெள்ளி, தங்க நகைகளை திருடி சென்றனர்.
அதேபோல அருகில் உள்ள ராணி என்பவரின் வீட்டில் இருந்த பித்தளை அண்டா உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றனர். மேலும் அந்த பகுதியைச சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் பணம் எதுவும் இல்லாததால் துணிகளை வீசி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் உத்தரவின்படி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இதில் வேப்பனப்பள்ளி அடுத்த தீர்த்தம் கிராமத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த திம்மராஜ் (வயது 36), தேவராஜ் (25), ஜெயம்மா (60), மாரக்கா (55) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் ஓசூர் டவுன் சாந்தி நகர் மனோஜ் (27), பேரிகை அடுத்த செம்பட்டி நாகராஜ் (27), மத்திகிரி காடிபாளையம் சையத் சாப்ஜான் (35), பாகலூர் சூடாபுரம் முத்து (24), கந்திகுப்பம் மேல்கொட்டாய் தேவேந்திரராவ் (64), போச்சம்பள்ளி கோணானூர் பாண்டியன் (36), தளி குலுசமனப்பள்ளி சந்தோஷ்குமார் (23), கெலமங்கலம் நரப்பனட்டி ராஜப்பா (45), சிங்காரப்பேட்டை வெள்ளக்குட்டை பழனி (45), மத்தூர் எம்.ஜி.அள்ளி மகேஷ் (45) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 500 மதிப்பிலான 10 கிலோ 350 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாகலூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் தாலுகா பாகலூர் அருகே நந்திமங்கலம் பக்கமுள்ளது அட்டூர். இந்த ஊரை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 43). கூலித்தொழிலாளி. இவர் அவரது நிலத்தில் இருந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். இதில் அவர் நீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூரில் நட்சத்திர ஓட்டலில் ஊழியர்களை மிரட்டிய 3 போலி நிருபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
கர்நாடக மாநிலம், பங்காருபேட்டை மாவட்டம், நீலகிரிபில்லி பகுதியை சேர்ந்தவர் பவானி (வயது 29). இவர் ஓசூர் அருகே உள்ள பத்தலப்பள்ளி சாரல் நகர் பகுதியில் தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் காலை ஓட்டலுக்கு வந்த 3 வாலிபர்கள், ஊழியர்கள் மற்றும் மேலாளர் பவானி ஆகியோரிடம் நிருபர்கள் என கூறி தகராறு செய்து மிரட்டினார்கள். இது தொடர்பாக, அட்கோ போலீசில் பவானி புகார் செய்தார்.
விசாரணையில், ஓசூர் தர்கா கோபி கார்டன் பகுதியை சேர்ந்த முகமது அலி (வயது 33), கிருஷ்ணா நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்த சானு (29), ஓசூர் தர்கா மாருதி நகரை சேர்ந்த தயானந்தன் (22) என தெரிய வந்தது. அத்துடன், முகமது அலி மற்றும் சானு ஆகியோர் போலி நிருபர்கள் மற்றும் தயானந்தன் போலி போட்டோகிராபர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அஞ்செட்டி அருகே கஞ்சா பயிரிட்ட 2 விவசாயிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், அஞ்செட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி மற்றும் போலீசார் அட்டப்பள்ளம் கிராமத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அங்கமுத்து (வயது 60), கோவிந்தன் (35) ஆகிய 2 பேரும் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் 2 பேரும் சோளம், ராகி பயிர்களுக்கு இடையே கஞ்சா ஊடுபயிராக பயிரிட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர். மேலும் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் கஞ்சா விற்ற தேன்கனிக்கோட்டை படேல் தெருவை சேர்ந்த மாரியப்பன் (51) என்பவரை போலீசார் கைது செய்தனர். தளி போலீசார் அகலக்கோட்டை பகுதியில் ரோந்து சென்றபோது கஞ்சா விற்ற அதே ஊரை சேர்ந்த சந்தோஷ்குமார் (33) என்பவரை கைது செய்தனர். ஊத்தங்கரை போலீசார், கஞ்சா விற்றதாக கதவணையை சேர்ந்த முத்து (24) என்பவரை கைது செய்தனர். இவர்கள் 3 பேரிடம் இருந்தும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கல்லாவி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கணவனே படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லாவி:
ஊத்தங்கரை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்த தையல் தொழிலாளி போலீசில் சரண் அடைந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அருகே உள்ள பள்ளசூளகரை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 36). தையல் தொழிலாளி. இவருடைய மனைவி ருக்குமணி (30). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. ருக்குமணி போச்சம்பள்ளி சிப்காட்டில் உள்ள தனியார் ஷூ தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த தங்கராஜ், அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தகராறு செய்து வந்தார். அதே போல், நேற்று முன்தினம் இரவும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் தூங்க சென்று விட்டனர்.
நேற்று அதிகாலை 4 மணிக்கு மதுபோதையில் தங்கராஜ், வீட்டில் தூங்கி கொண்டிருந்த ருக்குமணியின் தலையில் கல்லை போட்டுள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மனைவி இறந்து விட்டதை அறிந்த தங்கராஜ் கல்லாவி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
போலீசாரிடம், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கல்லாவி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ருக்குமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்கராஜை கைது செய்தனர்.
நாகரசம்பட்டி அருகே சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகரசம்பட்டி போலீசார், தளிஅள்ளி அருகே உள்ள வண்ணான்கொல்லை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஜெய்னூர் ரமேஷ் (வயது 33), குண்டலப்பட்டி விக்னேஷ்(29), முருகன்(34), நெடுங்கல் வெங்கடாஜலம்(34), தளிஅள்ளி தேவன்(24) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
நாகரசம்பட்டி அருகே அடுத்தடுத்த வீடுகளில் 15 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே உள்ள விளங்காமுடி கிராமத்தை சேர்ந்தவர் ராமேஸ்வரன். விவசாயி. சம்பவத்தன்று விவசாய பணிகளை மேற்கொள்ள அவர் வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றார். நேற்று முன்தினம் அவர் வீட்டுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.
இதேபோல், இவருடைய வீட்டின் அருகே வசித்து வந்த விவசாயி லிங்கேஸ்வரன் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகை திருடி சென்றனர். மேலும் அருகில் உள்ள 3 வீடுகளிலும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கு ஏதுவும் கிடைக்காததால் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர். அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணம் திருட்டு போன சம்பவம் குறித்து நாகரசம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓசூர் அருகே பூ வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி ஆனேக்கல் சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). பூ வியாபாரி. கடன் தொல்லை காரணமாக மனமுடைந்த அவர் ஓசூர் பிருந்தாவன் நகரில் தங்கி இருந்த அறையில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஷ்ணமூர்த்தி இறந்தார். பூ வியாபாரி தற்கொலை குறித்து அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் - பெங்களூரு இடையே விரைவில் மின்சார ரெயில் இயக்கப்படும் என்று தென்மேற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தெரிவித்தார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் பெங்களூரு வரையும், ஓசூர் - தர்மபுரி இடையே மின்சார ரெயில் இயக்குவதற்கு ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் 2017-18-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த மின்மயமாக்க பணிகள் தற்போது ஓசூர் வரை நிறைவு பெற்றுள்ளது.
இதில் ஓசூர் - பெங்களூரு மெஜஸ்டிக் இடையே 55 கிலோ மீட்டர் தூரம் உள்ள ரெயில் பாதையும் மற்றும் ஓசூர் - யஸ்வந்த்பூர் இடையே 60 கிலோ மீட்டர் தூரம் உள்ள ரெயில் பாதையும் மின் மயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் தர்மபுரி வழித்தடத்தில் ஓசூர் ரெயில் நிலையம் முதல் பெரியநாக துணை ரெயில் நிலையம் வரையும் ரெயில் பாதை மின்மயமாக்கப்படும் பணிகளும் நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில் பெங்களூரு - ஓசூர் இடையே மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதையை ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதற்காக பெங்களூரு நகரில் இருந்து ஓசூர் வரை ரெயில் இயக்கப்பட்டது. ஓசூர் ரெயில் நிலையம் வந்த இந்த ரெயிலில் தென்மேற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் மற்றும் குழுவினர் வருகை தந்து ஓசூர் ரெயில் நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் அதிகாரி ஏ.கே.ராய் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூரு - ஓசூர் இடையே ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளேன். இந்த ஆய்வு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த வழித்தடத்தில் மின்சார ரெயில் இயக்குவதற்கு தேவையான அனைத்து பணிகளும் நல்ல முறையில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு ரெயில்வே மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விரைவில் ஓசூர்-பெங்களூரு இடையே மின்சார ரெயில் இயக்கப்படும். தற்போது கொரோனா பிரச்சனையை கருத்தில் கொண்டு ரெயில்வே நிர்வாகம் சார்பில் மின்சார ரெயில் இயக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் பெங்களூரு வரையும், ஓசூர் - தர்மபுரி இடையே மின்சார ரெயில் இயக்குவதற்கு ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் 2017-18-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த மின்மயமாக்க பணிகள் தற்போது ஓசூர் வரை நிறைவு பெற்றுள்ளது.
இதில் ஓசூர் - பெங்களூரு மெஜஸ்டிக் இடையே 55 கிலோ மீட்டர் தூரம் உள்ள ரெயில் பாதையும் மற்றும் ஓசூர் - யஸ்வந்த்பூர் இடையே 60 கிலோ மீட்டர் தூரம் உள்ள ரெயில் பாதையும் மின் மயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் தர்மபுரி வழித்தடத்தில் ஓசூர் ரெயில் நிலையம் முதல் பெரியநாக துணை ரெயில் நிலையம் வரையும் ரெயில் பாதை மின்மயமாக்கப்படும் பணிகளும் நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில் பெங்களூரு - ஓசூர் இடையே மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதையை ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதற்காக பெங்களூரு நகரில் இருந்து ஓசூர் வரை ரெயில் இயக்கப்பட்டது. ஓசூர் ரெயில் நிலையம் வந்த இந்த ரெயிலில் தென்மேற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் மற்றும் குழுவினர் வருகை தந்து ஓசூர் ரெயில் நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் அதிகாரி ஏ.கே.ராய் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூரு - ஓசூர் இடையே ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளேன். இந்த ஆய்வு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த வழித்தடத்தில் மின்சார ரெயில் இயக்குவதற்கு தேவையான அனைத்து பணிகளும் நல்ல முறையில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு ரெயில்வே மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விரைவில் ஓசூர்-பெங்களூரு இடையே மின்சார ரெயில் இயக்கப்படும். தற்போது கொரோனா பிரச்சனையை கருத்தில் கொண்டு ரெயில்வே நிர்வாகம் சார்பில் மின்சார ரெயில் இயக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊத்தங்கரை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை போலீசார் சென்னப்பநாயக்கனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த காமராஜ் (வயது 50), பரமசிவன்(40), வேடியப்பன்(33) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.






