என் மலர்tooltip icon

    கரூர்

    • வேளாண் கூடத்தில் நிலக்கடலை ரூ.4 லட்சத்துக்கு விற்பனையானது.
    • 177 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது

    கரூர்,

    வேளாண் கூடத்தில் நிலக்கடலை ரூ.4 லட்சத்துக்கு விற்பனையானது. கரூர் நொய்யல் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர், க.பரமத்தி ஒன்றியம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை 56.27½ குவிண்டால் எடை கொண்ட 177 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.73.09-க்கும், சராசரி விலையாக ரூ.79.30-க்கும் என ரூ.4 லட்சத்து 3 ஆயிரத்து 762-க்கு விற்பனையானது.

    • கடைக்கு சென்ற இளம்பெண் மாயம்
    • தான்தோன்றி போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்

    கரூர்,

    கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி மகள் வசந்தி (வயது 21). இவர், காந்தி கிராமத்தில் உள்ள பழக்கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று பழக்கடைக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற வசந்தி, இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தாய் அமுதா கொடுத்த புகாரின்படி, தான்தோன்றிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நங்காச்சி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலியானார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்

    கரூர்,

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஆலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மாயவன் (வயது 18). இவர் அரவக்குறிச்சி அருகே எல்லப்பட்டி நங்காஞ்சி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மாயவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்குவாரி அமைக்க கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது
    • க.பரமத்தி அருகே குப்பத்தில் நடைபெற்றது

    கரூர்,

    கரூர் மாவட்டம் க.பரமத்தி அடுத்துள்ள குப்பம் அருகேயுள்ள கிராம பகுதியில் நான்கு கல்குவாரி அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் க.பரமத்தி அருகேயுள்ள குப்பத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், குவாரி அமைக்க ஆதரா வாளர்கள் மற்றும் எதிர்ப்போர் என பலர் கலந்து கொண்டனர். ஒரு சிலர் கல்குவாரி அமைக்க ஆதரவாக பேசினர். அதில் ஒரு சிலர் கல்குவாரி அமைப்பதால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு குறித்து பேசினார்.பிறகு தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசியதாவது:கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் அனுமதி வழங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.கல் குவாரிக்கான திட்ட அறிக்கையில் சரியான தகவல்களை முதலில் அதிகாரிகள் தயார் செய்து கொடுக்க வேண்டும். கல்குவாரிகளில் போர்டு வைக்க வேண்டும். ஆனால் அவற்றை பல்வேறு கல் குவாரி நிறுவனங்கள் செயல்படுத்துவது இல்லை. ஒன்றியம் முழுவதும் சட்ட விரோதமான இயங்கும் கல்குவாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சுருக்க அறிக்கையில் முழுமை யான விபரங்கள் போதுமானதாக இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

    • அரவக்குறிச்சி அருகே நங்காஞ்சி ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கரூர் :

    அரவக்குறிச்சி அருகே ஆலமரத்துப்பட்டி காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மாயவன் (வயது 18), சென்ட்ரிங் தொழிலாளி. இவர் தனது அண்ணன் பாலமுருகன் (22) மற்றும் இதே ஊரைச் சேர்ந்த கருப்புசாமி மகன் உதயகுமார் (16), முனியப்பன் மகன் பரத் (19), சந்திரன் மகன் ராஜேஷ் கண்ணன் (27) ஆகியோருடன் நேற்று மதியம் பள்ளப்பட்டி நங்காஞ்சி ஆற்றில் உள்ள தடுப்பணையில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாலமுருகன் மற்றும் அவரது நண்பர்கள் மாயவனை காப்பாற்ற முயன்றனர்.

    ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் அணையில் இறங்கி மாயவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.37 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம் போனது.
    • தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.21.65-க்கு விற்பனையானது

    கரூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர் ஒன்றியம், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 90.31½ குவிண்டால் எடை கொண்ட 23 ஆயிரத்து 930 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.21.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.16.55-க்கும், சராசரி விலையாக ரூ.20.59-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்து 656-க்கு விற்பனையானது. அதேபோல் 166.25 குவிண்டால் எடை கொண்ட 372 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது.இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.73.69-க்கும், சராசரி விலையாக ரூ.75.49-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.74.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.75-க்கும், சராசரி விலையாக ரூ.71.85-க்கும் என மொத்தம் ரூ.11 லட்சத்து 92 ஆயிரத்து 828-க்கு விற்பனையானது. விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.147.11-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.140.99-க்கும், சராசரி விலையாக ரூ.145.59-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.148.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.126.39-க்கும், சராசரி விலையாக ரூ.144.59-க்கும் என மொத்தம் ரூ.23 லட்சத்து 56 ஆயிரத்து 326-க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.37 லட்சத்து 17 ஆயிரத்து 810-க்கு விற்பனையானது.

    • கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
    • அவரிடமிருந்து 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தது

    கரூர்,

    கரூர் திருமாநிலையூர் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அமராவதி ஆற்றுப்பகுதி அருகே கஞ்சா வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர் திருமாநிலையூரை சேர்ந்த மனோஜ் குமார் (வயது 23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்ததுடன், கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • நோட்டீசில் எங்களது (அமலாக்கத்துறையின்) அனுமதியின்றி இந்த அலுவலகத்தை திறக்கக்கூடாது.
    • சென்னையில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

    கரூர்:

    கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகள், அலுவலகங்களில் கடந்த 26-ந்தேதி தொடங்கிய வருமான வரித்துறை சோதனை 8 நாட்களுக்கு பிறகு நிறைவடைந்தது.

    அதில் கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் அடிப்படையில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனையில் இறங்கினர். கரூரில் 8 இடங்களில் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவில் நிறைவடைந்தது.

    இதற்கிடையே கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு சொந்தமான டெக்ஸ்டைல்ஸ் நிறுவன அலுவலகம் அமைந்துள்ளது.

    இதில் தற்போது வரை சோதனை நடத்தப்படாத நிலையில் நேற்று இரவில் அங்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றை ஒட்டியுள்ளதோடு, அசோக்குமாரின் அலுவலகத்திற்கும் சீல் வைத்தனர்.

    மேலும் அந்த நோட்டீசில் எங்களது (அமலாக்கத்துறையின்) அனுமதியின்றி இந்த அலுவலகத்தை திறக்கக்கூடாது. சென்னையில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும். அதன் பின்னரே அலுவலகத்தை திறக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த டெக்ஸ்டைல்ஸ் அலுவலகத்தின் ஊழியர்கள், பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தை பார்த்து திரும்பி சென்றனர்.

    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
    • உறுதிமொழியை சமூக இடைவெளியை கடைபிடித்து ஏற்றுக்கொண்டனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி எடுக்கப்பட்டது. குழந்தைகளை கல்வி பயில வேண்டிய பருவத்தில் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்கும் வகையிலும் அவர்களை பள்ளிக்கு அனுப்புவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் குழந்தை ெதாழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

    உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பொது மேலாளர் மகேஷ் (உற்பத்தி), துணை பொது மேலாளர்கள் ராதாகிருஷ்ணன் (பாதுகாப்பு), ஜெயக்குமார் (வனம்), முதுநிலை மேலாளர்கள் சிவக்குமார் (மனித வளம்), முத்துராமன் (காகித இயந்திரம்), பரமசிவம்(காகித இயந்திரம்) மற்றும் மேலாளர் வெங்கடேசன் (மனித வளம்) ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழியை சமூக இடைவெளியை கடைபிடித்து ஏற்றுக்கொண்டனர்.

    • கரூர் மாவட்டத்தில் 27 பள்ளிகளுக்கு ரூ.10.19 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது
    • இதனை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார்.

    கரூர்,

    கரூர் ஊராட்சி ஒன்றியம் நெரூர், வாங்கல், குப்புச்சிப்பாளையம் மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் மொஞ்சனூர் ஊராட்சி தொட்டம்பட்டியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய பள்ளிகள் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில் பள்ளிகளுக்கு தேவையான புதிய கட்டிடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் உருவாக்கிடும் வகையில் பணிகளை அதிகளவில் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரெங்கநாதன் பேட்டை, என்.புகளூர், பெரிய வரப்பாளையம் மற்றும் வாங்கல் ஆகிய இடங்களிலும், கடவூர் ஊராட்சி ஒன்றியம் பாப்பம்பட்டி மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் மொஞ்சனூர் தொட்டம்பட்டியில் தலா ரூ.31 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

    இதேபோல் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சின்னம்மன் நாயக்கன்பட்டி, சிந்தலவாடி, மகாதானபுரம், கட்டாரிப்பட்டி, போத்து ராவுத்தன்பட்டி, மலைப்பட்டி, செக்கானம், ஆகிய இடங்களில் தலா ரூ.31 லட்சத்து 70 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும், மாயனூர், சிவாயம், காட்டூர் ஆகிய இடங்களில் தலா ரூ.61 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடங்களும் கட்டப்படுகிறது.

    மேலும் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் மேலபட்டி, தண்ணீர் பள்ளி ஆகிய இடங்களில் ரூ.31 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும், அய்யர் மலையில் ரூ.69 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடங்களும், தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம் பாகநத்தத்தில் ரூ.31 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் சின்னியம்பாளையம், பாதிரிப்பட்டியில் தலா ரூ.31 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது.

    அரவக்குறிச்சி பேரூராட்சி அரவக்குறிச்சியில் ரூ.69 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடங்களும், புஞ்சை தோட்டக்குறிச்சி, அரவக்குறிச்சி, புலியூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் தலா ரூ.31 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும் என மொத்தம் 27 பள்ளிகளில் ரூ.10 கோடியே 19 லட்சம் மதிப்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணிஈஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, உதவி பொறியாளர்கள் இளஞ்சேரன், பூரணமா தேவி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட தகவல் கரூர் மாவட்ட தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்களின் நடவடிக்கைகளையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    கரூர்:

    கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் தொடர்புடைய இடங்களில் கடந்த மாதம் 26-ந்தேதி வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர். 8 நாட்கள் வரை நீடித்த இந்த சோதனை 3-ந்தேதி நிறைவடைந்தது.

    சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் நேற்று அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வீடு, சகோதரர் அசோக்குமார் வீடு, கொங்குமெஸ் மணி, ஆடிட்டர் வீடு, நகைக்கடை உள்ளிட்ட 8 இடங்களில் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு குழுக்களாக சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு 11 மணியளவில் நிறைவடைந்தது.

    இந்தநிலையில் இன்று அதிகாலை சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட தகவல் கரூர் மாவட்ட தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக கரூர் பேருந்து நிலையம், மாவட்ட பா.ஜ.க. அலுவலகம், மனோகரா கார்னர், திருக்காம்புலியூர் ரவுண்டானா, சர்ச் கார்னர், வெங்கமேடு, லைட் ஹவுஸ் கார்னர் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் தலைமையில், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் போலீசார் தங்களது ரோந்து வாகனங்களில் சென்று தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அதேபோல் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்களின் நடவடிக்கைகளையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

    • அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
    • 12 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.

    கரூர்:

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் காலையில் சோதனை மேற்கொண்டனர்.

    அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

    இந்நிலையில், கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீட்டில் 12 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.

    சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 15 மணி நேரம் கடந்தும் சோதனை நடைபெற்று வருகிறது.

    ×