என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரவக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
- அரவக்குறிச்சி அருகே நங்காஞ்சி ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
- இந்த சம்பவம் தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கரூர் :
அரவக்குறிச்சி அருகே ஆலமரத்துப்பட்டி காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மாயவன் (வயது 18), சென்ட்ரிங் தொழிலாளி. இவர் தனது அண்ணன் பாலமுருகன் (22) மற்றும் இதே ஊரைச் சேர்ந்த கருப்புசாமி மகன் உதயகுமார் (16), முனியப்பன் மகன் பரத் (19), சந்திரன் மகன் ராஜேஷ் கண்ணன் (27) ஆகியோருடன் நேற்று மதியம் பள்ளப்பட்டி நங்காஞ்சி ஆற்றில் உள்ள தடுப்பணையில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாலமுருகன் மற்றும் அவரது நண்பர்கள் மாயவனை காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் அணையில் இறங்கி மாயவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






