என் மலர்tooltip icon

    கரூர்

    • வரத்து குறைவால் கரூரில் 1 கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனையாகிறது.
    • இதேபோல் கடந்த வாரத்தை விட மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்து உள்ளது.

    கரூர்:

    கரூர் பஸ்நிலையம் அருகே தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த தினசரி மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து வருகிறது. அந்தவகையில் மழையின் காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்து உள்ளது. இதனால் வரத்தும் குறைந்துவிட்டது. இந்நிலையில் கரூர் தினசரி மார்க்கெட்டில் நேற்று 1 கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனையானது. வரத்து குறைவின் காரணமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த வாரத்தில் ரூ.40 முதல் 50-க்கும் தக்காளி விற்பனையானது. கடந்த மாதம் ரூ.25-க்கு 1 கிலோ தக்காளி விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கடந்த வாரத்தை விட மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்து உள்ளது. அதன்படி (1 கிலோ) கேரட் ரூ.100-க்கும், பீன்ஸ் ரூ.140-க்கும், பீட்ரூட் ரூ.70-க்கும், கோழி அவரைக்காய் ரூ.160-க்கும், முள்ளங்கி ரூ.60-க்கும், உருளைகிழங்கு ரூ.30-க்கும், புடலங்காய் ரூ.50-க்கும், வெண்டைக்காய் ரூ.50-க்கும், முட்டைக்கோஸ் ரூ.30-க்கும் விற்பனையானது.

    இதேபோல் சின்ன வெங்காயம் ரூ.80-க்கும், பெரிய வெங்காயம் ரூ.25 முதல் 30-க்கும் விற்பனையானது. இந்த காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை விட அதிகமாக உயர்ந்து உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பெரும்பாலான வீடுகளில் தக்காளி உபயோகம் என்பது வெகுவாக குறைந்து விட்டது எனவும் கூறலாம். இதுகுறித்து காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் ரூ.25-க்கு விற்பனையான தக்காளி தற்போது ரூ.90-க்கு விற்பனையாகிறது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளன. கடந்த வாரத்தை விட இருமடங்கு அதிகமாகி உள்ளது. தக்காளி மற்றும் காய்கறிகளின் வரத்து அதிகமானால்தான் விலை குறையும், என்றார்.


    • அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண நலம்பெற வேண்டி தான்தோன்றிமலை கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது
    • இதில் தி.மு.க. கட்சி முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    குளித்தலை:

    கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சரு–மான வி.செந்தில்பாலாஜி விரைவில் பூரண குணம–டைந்து மக்கள் பணியாற்றிட வேண்டி கரூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கள் அனைவரும் ஒன்றி–ணைந்து கரூர் தான்தோன்றி–மலை கல்யாண வெங்க–டேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அபி–ஷேகம், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணை தலைவர் தேன் மொழி தியாகராஜன், நந்தினி தமிழ்ச்செல்வன், நல்ல முத்து வடிவேல், கார்த்திக், கண்ணையன், இந்திரா புகழேந்தி, அல–மேலு மனோகரன், குளித் தலை மேற்கு ஒன்றிய செய–லாளர் பொய்யாமணி தியாகராஜன் மற்றும் தி.மு.க. கட்சி முக்கிய நிர்வாகி–கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கரூரில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது
    • இதற்காக கரூர் மாவட்டத்தில் 15 கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர் மாவட்டத்திற்குட்பட்ட 58 மேல்நிலைப்பள்ளிகள், 56 உயர்நிலைப்பள்ளிகள், 165 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 279 பள்ளிகளில், மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் விதமாக, வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் சுமார் 26,000 மாணவர்கள் பயன் பெறுவார்கள்.இத்திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு முதல்கட்டமாக கருர் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு ரூ.3 கோடியே 34 லட்சத்து 800 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதற்காக கரூர் மாவட்டத்தில் 15 கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் வானவில் மன்ற செயல்பாடுகள் சிறந்த முறையில் மாணவர்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலமாக மாதம் ஒருமுறை கூட்டம் நடத்தப்படும். ஒவ்வொரு வகுப்பிலும் அறி வியல் மனப்பான்மையுடனும் ஆர்வத்துடன் செயல்பாடுகளில் பங்கேற்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநிலஅளவில் நடைபெற்ற மன்றப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல்துறை சார்பில் புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நெப்போலியன், ரெங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியை வளர்மதி அனைவரையும் வரவேற்றார். போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி வேலாயுதம்பாளையம் ரவுண்டானா மற்றும் முக்கிய வீதிகளில் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை சென்றடைந்தது. பேரணியில் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், அலுவலகப் பணியாளர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

    • விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்
    • இந்த சம்பவம் குறித்து வாங்கல் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கரூர்,

    கரூர் மண்மங்கலம் அருகே உள்ள மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் வையாபுரி (வயது 77), விவசாயி. இவர் வயது முதிர்வின் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனமுடைந்த வையாபுரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில், உடல் கருகிய அவரை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கரூர் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வையாபுரி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வாங்கல் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்க அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்
    • நத்தம் நிலவரித் திட்டத்தின் கீழ் வீட்டு மனை பட்டா 1.705 குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புன்செய் புகளூர் மற்றும் நஞ்சை புகளூர் கிராமங்களில் 50 ஆண்டு காலமாக பட்டா இல்லாமல் வசித்து வரும் பொதுமக்களுக்கு நத்தம் நிலவரித் திட்டத்தின் கீழ் வீட்டு மனை பட்டா 1.705 குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டா இல்லாமல் வசித்து வரும் பொதுமக்களுக்கு நத்தம் நில வரி திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    புகழூர் வட்டாட்சியர் முருகன், புகழூர் நகராட்சி ஆணையாளர் கனிராஜ்,கரூர் மாவட்ட நில அளவை பிரிவு உதவி இயக்குனர், மண்டல துணைத்தாசில்தார் ரமேஷ் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் , நில அளவையர்கள் கொண்ட குழுவினர் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டா இல்லாமல் வசித்து வரும் மக்களுக்கு நத்தம் நில வரி திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா வழங்கல் தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் பட்டா இல்லாத பொது மக்களிடம் விசாரணை நடத்தி பட்டா இல்லாத வீடுகளை சேர்ந்தவர்கள் குறித்து விவரம் சேகரித்தனர்.

    • கரூர் வள்ளுவர் கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கபட்டுள்ளது
    • மாணவர்கள் சென்ற வாரம் 23-ந்தேதி பணியில் சேர்ந்தனர்.

    கரூர்,

    இந்திய தொழில் நுட்பக் கழகம் (மெட்ராஸ்) தென்னிந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியாகும். இந்திய அரசினால் தேசிய இன்றியமையாக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாகும். இதன் துணை நிறுவனமான ப்ரவர்தக் டெக்நாலோஜிஸ் திறமையான வள்ளுவர் கல்லூரி மாணவர்களை ஒவ்வொரு வருடமும் பணியமர்த்தி வருகிறது. இந்தவருடமும் கணினி அறிவியல் பயின்று முடித்த மூன்று மாணவர்களை தேர்வு செய்துள்ளது. இந்த மாணவர்கள் சென்ற வாரம் 23-ந்தேதி பணியில் சேர்ந்தனர். வேறெந்த கல்லூரிக்கும் கிடைக்காத வாய்ப்பும் பெருமையும் வள்ளுவர் கல்லூரிக்கு கிடைத்திருப்பதாக கல்லூரியின் தலைவர் செங்குட்டுவன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதற்F மாணவர்களின் திறமை மற்றும் கல்லூரியில் அளிக்கப்படும் தலைசிறந்த பயிற்சியுமே காரணம் என்றும் அவர் கூறினார்.

    • பரமத்திவேலூர் அருகே லாரி மோதி ஓட்டல் உரிமையாளர் பலியானார்
    • போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் பாலத்துறை பஜனை மடத்தெரு பகுதி சேர்ந்தவர் வீரப்பன் (வயது 60). பாலத்துறை பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் இவர், பரமத்தி வேலூர் சென்று விட்டு டவுன் பஸ்சில் திரும்பி உள்ளார். பாலத்துறையில் உள்ள தேசிய கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இறங்கி அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, கரூர் நோக்கி வந்த லாரி ஒன்று வீரப்பன் மீது மோதி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த வீரப்பன், ஆம்புலன்ஸ் உதவியுடன், வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வீரப்பனின் மனைவி ரத்தினம் கொடுத்த புகாரின் பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்கு பதிந்து, கரூர் அருகம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற லாரி டிரைவர் மீது வழக்கு பதிந்து, லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கரூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • பேரணியை போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

    கரூர்,

    கரூர் சி.எஸ்.ஐ. பிஷப் சாலமன் துரைசாமி கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கல்லூரி முதல்வர் உமேஷ் சாமுவேல் முன்னிலையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது கரூர் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, கரூர் பஜார் வழியாக, பேருந்து நிலையம், திண்ணப்பா திரையரங்கம் வழியாக கரூர் சி.எஸ்.ஐ. பிஷப் சாலமன் துரைசாமிக் கல்லூரியில் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து, போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் இறுதியில் கணிதவியல் உதவிப்பேராசிரியர் லிவிங்ஸ்டன் (நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்) நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.

    • சிவன் கோவில்களில் அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கரூர்:

    நன்செய் புகழூரில் மேகபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. புன்னம் புன்னைவனநாதர் கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்மன் கோவில், நத்தமேடு ஈஸ்வரன் கோவில் உள்பட நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன்கோவில்களில் அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பள்ளப்பட்டி அருகே மாரியம்மன் கோவில் ஆனித்திருவிழா நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கரூர்:

    பள்ளப்பட்டி அருகே வேலம்பாடி ஊராட்சி சவுந்திராபுரத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பொங்கல், மா விளக்கு எடுத்து வந்தனர். பின்னர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கம்பத்தையன் அரிவாள் மீது ஏறி பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சித்தலைவர் ராணி கணேசன், ஊர் பொதுமக்கள், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • தென்னை மரங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    • இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    கரூர் :

    கந்தம்பாளையம் அருகே உள்ள மலைநகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 45). இவரது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த பாஸ்கரனின் மனைவி பானுமதி அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தென்னை மரங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அனைத்து கட்டுப்படுத்தி, அருகில் விவசாய நிலங்களுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ×