என் மலர்tooltip icon

    கரூர்

    • அரசு ஊழியர்கள் சங்க வட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது
    • இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


    கரூர்,

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் புகழூர், மண்மங்கலம் வட்ட பேரவை கூட்டம் புகழூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தனலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்டத்தலைவர் கருணாகரன் தொடக்க உரையாற்றினார். சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் சிங்கராயர், மாவட்ட துணைத்தலைவர் (டி.என்.ஜி.இ.ஏ.) குப்புசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் விஜயக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். புகளூர், மண்மங்கலம் தாசில்தார்களை சந்திக்க வரும் பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் கழிவறை வசதி செய்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
    • இந்த விபத்து குறித்து வெள்ளிபணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர் :

    ஜெகதாபி அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 67). விவசாயி. இவர் கடந்த 28-ந்தேதி ஜெகதாபி- காணியாளம்பட்டி சாலையில் மதுக்கரை நால்ரோடு அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், எதிர்பாராத விதமாக பெருமாள் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெருமாள் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பெருமாள் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வெள்ளிபணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் புகளூர், மண்மங்கலம் வட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது
    • இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    வேலாயுதம் பாளையம்,

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் புகளூர், மண்மங்கலம் வட்ட பேரவை கூட்டம் புகளூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தனலட்சுமி தலைமை வகித்தார்.முருகையன் வரவேற்றார் . மாவட்ட தலைவர் கருணாகரன் துவக்க உரை ஆற்றினார்.சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சிங்கராயர்,மாவட்ட துணைதலைவர்( டிஎன்ஜிஇஏ) குப்புசாமி, மாவட்ட மகளிர் ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்க லட்சுமி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் விஜயகுமார் ஆகியோர்சிறப்புரை ஆற்றினார்கள்.முடிவில் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது.வட்ட தலைவராக (வருவாய்த்துறை) உமா மகேஸ்வரன், வட்ட செயலாளராக (நெடுஞ்சாலைத்துறை) முருகையன், வட்ட பொருளாளர்( வருவாய்த்துறை) இளவரசி, தேர்ந்தெடுக்கப்பட்டனர். பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். மண்மங்கலம் ,புகளூர் தாலுகாக்களில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு, மாவட்ட மையம் அமைத்து தர வேண்டும்.புகளூர் ,மண்மங்கலம் தாசில்தார்களை சந்திக்க வரும் பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


    • தரகம்பட்டி அருகே தொழிலாளி மீது தாக்குதல் நடந்தது.
    • ஆத்திரமடைந்த நாகராஜ், பெருமாளை தகாதவார்த்தையால் திட்டி மண்வெட்டியால் தாக்கினார்.

    கரூர் :

    தரகம்பட்டி அருகே உள்ள டி.அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 47). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் ரூ.50 ஆயிரத்தை கடனாக வாங்கி விட்டு, நீண்ட நாட்களாக கொடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெருமாளிடம், நாகராஜ் தான் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜ், பெருமாளை தகாதவார்த்தையால் திட்டி மண்வெட்டியால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த பெருமாள் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பெருமாள் மனைவி லட்சுமி கொடுத்த புகாரின்பேரில், சிந்தாமணிப்பட்டி போலீசார் நாகராஜ் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நொய்யல் பகுதியில் வரத்து குறைவால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
    • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, வேட்டமங்கலம், குளத்துப்பாளையம், பேசிப்பாறை, நடையனூர், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குண்டு மல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். பூக்கள் நன்கு விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், தினசரி பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய உதிரிப் பூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டியும் விற்பனை செய்து வருகின்றனர்.

     இல்லத்தரசிகள் கவலை விலை உயர்வு கடந்த வாரம் குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.240-க்கும், முல்லைப் பூ ரூ.240 -க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.200- க்கும், ரோஜா ரூ.180-க்கும், செவ்வந்தி ரூ.170-க்கும் விற்பனையானது. நேற்று குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.340-க்கும், முல்லைப் பூ ரூ.340-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.140-க்கும் ரோஜா ரூ.200-க்கும், செவ்வந்தி ரூ.220-க்கும் விற்பனையானது. வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் ெதரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கரூர் மாவட்டத்தில் உள்ள குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • விதிமீறல் கண்டறியப்பட்ட 12 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க உதவி கலெக்டர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் 150க்கும் அதிகமான கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் தினமும் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது.

    இந்த குவாரிகள் நடைபெறும் இடங்களில் டிஜிட்டல் முறைப்படி ஆய்வு செய்ய கனிம வளம் மற்றும் புவியியல் துறை இயக்குனர் திட்டமிட்டார். அதன்படி முதல் கட்டமாக கரூர் மாவட்டத்தில் கடந்த 22-ந் தேதி ஆய்வு தொடங்கியது. இந்த ஆய்வினை கண்டித்து கரூர் மாவட்டத்தில் உள்ள குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் உதவி கலெக்டர்கள் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், உதவி இயக்குனர் (நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை) தாசில்தார்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் 42 குவாரிகளில் ஆய்வினை முடித்தனர்.

    இதில் விதிமீறல் கண்டறியப்பட்ட 12 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க உதவி கலெக்டர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து அந்த குவாரிகளுக்கு ரூ. 44 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரத்து 357 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 30 கல்குவாரிகளுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்தார். இதில் விதிமீறலில் சிக்கிய 12 குவாரிகளில் ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., பழனியாண்டிக்கு சொந்தமான குவாரிக்கு மட்டும் ரூ. 23 கோடியே 54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குவாரி அதிபர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில போட்டிக்கு கரூர் வீரர்கள் 71 பேர் தேர்வு செய்யபட்டுள்ளனர்
    • கலெக்டர் பிரபு சங்கர் வாழ்த்து தெரிவித்தார்

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் இருந்து முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு 71 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இதில், கரூர் மாவட்டத்தில் இருந்து கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள், வீராங்னைகளுக்கு டி-சர்ட் வழங்கும் நிகழ்ச்சி கரூரில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளுக்கு டி-சர்ட் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இன்று தொடக்கம் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கி அடுத்த மாதம் 25-ந்தேதி வரை நடைபெறுகிறது.கரூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போட்டிகளில் மாவட்ட அளவில் பல்வேறு அணிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பள்ளி பிரிவு, கல்லூரி பிரிவுகளில் உள்ள விளையாட்டு வீரர்கள் கையுந்துபந்து, கபடி மற்றும் சிலம்பம் போன்ற விளையாட்டு போட்டிகளில் மொத்தம் 71 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

    மாவட்ட அளவில் பல்வேறு அணிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் கரூர் மாவட்ட சார்பில் கலந்து கொள்வதற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது.விளையாட்டு வீரர்கள் ஆகிய நீங்கள் அனைவரும் இந்த பயணத்தை மகிழ்ச்சியாகவும் சிறப்பாக போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற உங்களுக்கும், உங்கள் பெற்றோர்களுக்கும், கரூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் நீங்கள் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர் உமாசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கரூரில் வரத்து குறைவால் தக்காளி கிலோ ரூ.90க்கு விற்பனையானது
    • பெரிய வெங்காயம் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையானது.

    கரூர்,

    கரூர் மாவட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுகளில் இருந்து தக்காளி வரத்தாகிறது. தினமும் 40 முதல் 50 டன் வரை தக்காளி வரத்து இருந்த நிலையில் தற்போது 10 டன் மட்டுமே கரூர் மார்க்கெட்டுக்கு வருகிறது. மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனையானது. சில்லறை விலையில் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. கேரட் ரூ.100-க்கும், பீன்ஸ் ரூ.140, பீட்ரூட் ரூ.70, அவரைக்காய் ரூ.160, முள்ளங்கி ரூ.60, உருளைக்கிழங்கு ரூ.30, புடலங்காய் ரூ.50, வெண்டைக்காய் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.30-க்கும் விற்பனையானது. சின்ன வெங்காயம் ரூ.80-க்கும், பெரிய வெங்காயம் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையானது.

    • கரூரில் அகல்விளக்கு தீ சேலையில் பற்றி பெண் உயிரிழந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    திண்டுக்கல் மாவட்டம் கரிகாலியைச் சேர்ந்தவர் முத்துவடுகன் (வயது 53). இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிமெண்ட் ஆலையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனா (52). இவர் சம்பவத்தன்று தனது உறவினர் பெண் ஒருவருடன் கரூர் மேட்டு தெருவில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அகல்விளக்கு எதிர்பாராத விதமாக இவரின் சேலையில் பற்றி தீயினால் மீனா தீக்காயம் அடைந்தார். இதையடுத்து உடனடியாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி மீனா உயிரிழிந்தார். இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின்படி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.2.50 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது
    • கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகில் உள்ள சாலைப்புதுாரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், கொப்பரை தேங்காய், எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறும். கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த வாரம் நடந்த ஏலத்தில் 36.61 குவிண்டால் எடை கொண்ட 106 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது. கிலோ அதிகபட்சம் ரூ.76.30-க்கும், குறைந்தபட்சம் ரூ.65.19-க்கும் சராசரியாக ரூ.71.20 என மொத்தம் ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்து 468-க்கு விற்பனையானது.

    • கரூர் அருகே டெய்லர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் பசுபதிபாளையம் அடுத்துள்ள திருமாநிலையூரைச் சேர்ந்தவர் டெய்லர் சரவணபூபதி (வயது 38). இவர் கடந்த சில ஆண்டுகளாக குடிப்பழக்கத்துக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று திருமாநிலையூரில் உள்ள உறவினர் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து உறவினர்கள் பசுபதிபாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    • கரூர் அருகே பெண் உயிரிழந்தார்
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கரூர்,

    கரூர் அருகே திருக்காடுதுறை உள்ள கரைப்பாளையம் பூலான் காலனியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி பான்மதி (வயது 47). கூலி தொழிலாளர்கள். இவர்கள் 2 பேரும் தென்னந்தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, பான்மதி, லோகநாதனிடம் எனது அம்மாவை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை.இதற்கிடையில் பான்மதி வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் குளித்து விட்டு, துணி மாற்றும் அறையில் மயங்கி கிடந்துள்ளார்.

    இதையடுத்து பான்மதியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பான்மதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து லோகநாதன் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


    ×