என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரூரில் வரத்து குறைவால் தக்காளி கிலோ ரூ.90க்கு விற்பனை
- கரூரில் வரத்து குறைவால் தக்காளி கிலோ ரூ.90க்கு விற்பனையானது
- பெரிய வெங்காயம் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையானது.
கரூர்,
கரூர் மாவட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுகளில் இருந்து தக்காளி வரத்தாகிறது. தினமும் 40 முதல் 50 டன் வரை தக்காளி வரத்து இருந்த நிலையில் தற்போது 10 டன் மட்டுமே கரூர் மார்க்கெட்டுக்கு வருகிறது. மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனையானது. சில்லறை விலையில் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. கேரட் ரூ.100-க்கும், பீன்ஸ் ரூ.140, பீட்ரூட் ரூ.70, அவரைக்காய் ரூ.160, முள்ளங்கி ரூ.60, உருளைக்கிழங்கு ரூ.30, புடலங்காய் ரூ.50, வெண்டைக்காய் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.30-க்கும் விற்பனையானது. சின்ன வெங்காயம் ரூ.80-க்கும், பெரிய வெங்காயம் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையானது.
Next Story






