என் மலர்
உள்ளூர் செய்திகள்

புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்க அதிகாரிகள் நேரில் ஆய்வு
- புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்க அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்
- நத்தம் நிலவரித் திட்டத்தின் கீழ் வீட்டு மனை பட்டா 1.705 குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்செய் புகளூர் மற்றும் நஞ்சை புகளூர் கிராமங்களில் 50 ஆண்டு காலமாக பட்டா இல்லாமல் வசித்து வரும் பொதுமக்களுக்கு நத்தம் நிலவரித் திட்டத்தின் கீழ் வீட்டு மனை பட்டா 1.705 குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டா இல்லாமல் வசித்து வரும் பொதுமக்களுக்கு நத்தம் நில வரி திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
புகழூர் வட்டாட்சியர் முருகன், புகழூர் நகராட்சி ஆணையாளர் கனிராஜ்,கரூர் மாவட்ட நில அளவை பிரிவு உதவி இயக்குனர், மண்டல துணைத்தாசில்தார் ரமேஷ் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் , நில அளவையர்கள் கொண்ட குழுவினர் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டா இல்லாமல் வசித்து வரும் மக்களுக்கு நத்தம் நில வரி திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா வழங்கல் தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் பட்டா இல்லாத பொது மக்களிடம் விசாரணை நடத்தி பட்டா இல்லாத வீடுகளை சேர்ந்தவர்கள் குறித்து விவரம் சேகரித்தனர்.






