என் மலர்tooltip icon

    கரூர்

    • புகழூர் நகராட்சியில் கழிவு நீர் அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது
    • நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமையில் நடைபெற்றது

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி காந்தி மண்டபத்தில் செப்டிக் டேங்க் கிளீன் செய்வதற்கு நகராட்சி அனுமதி பெற்ற வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பிரதாபன், நகராட்சி பொறியாளர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துப்புரவு ஆய்வாளர் வள்ளிமுத்து வரவேற்றார். கூட்டத்தில், மனித கழிவுகளை மனிதனே அகற்ற அனுமதிக்க கூடாது. செப்டிக் டேங்க் கழிவுநீர் இயந்திரங்களை உபயோகப்படுத்தி மட்டுமே செப்டிக் டேங்க் கழிவுகள் அகற்றப்பட வேண்டும். செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனத்தின் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களின் முழு விவரம் அறிந்து வைத்திருக்க வேண்டும். கழிவு நீர் வண்டியில் உள்ள கழிவுகளை பொது இடங்க ளில் ஏரி வாய்க்கால் ,குளங்களிலோ திறந்து விடக்கூடாது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் அகற்றும் வீடு ,வணிக வளாகம் உரிமையாளர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பின்னரே பணியை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு தகவல்களுக்கு நகராட்சியின் கட்டணம் இல்லா தொலைபேசி எண் 14420 என்ற எண்ணை பயன்படுத்துமாறு நகராட்சி தலைவர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் நகராட்சி நிர்வாக அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், மண்டப உரிமையாளர்கள், வணிகப் பெருமக்கள், கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சாலைபுதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ரூ.8.35 லட்சத்திற்கு விற்பனையானது
    • 110 குவிண்டால் நிலக்கடலை விற்று தீர்ந்தது

    வேலாயுதம்பாளையம்,  

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், க.பரமத்திஒன்றியம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இந்த வாரம் நடந்த ஏலத்தில்நிலக்கடலை காய் 110.45குவிண்டால் எடை கொண்ட 370-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.70-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.53-க்கும், சராசரி விலையாக ரூ.82.16-க்கும் என ரூ 8 லட்சத்து 35ஆயிரத்து 317-க்கு விற்பனையானது.

    • மூலிமங்கலம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தாய் மகன் படுகாயம்
    • விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே காந்திநகர் 2-வது தெரு பகுதியை சேர்ந்தவர் ஓமந்தூர் (65) .இவரது மனைவி செல்லம்மாள் (60). இவர் கட்டுமான தொழிலில் சித்தாள் வேலை செய்து வருவார். இவரது மகன் பெரியசாமி (37). கட்டிட மேஸ்திரி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பெரியசாமியும் அவரது தாயார் செல்லம்மாளும் கட்டிட வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புகளூர் அன்னை நகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மூலிமங்கலம் பிரிவு சாலையை கடக்கும்போது கரூரில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் பெரியசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த இருவரும், தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • கரூர் மாவட்டம் புகளூர் வாய்க்காலில் விழுந்து தொழிலாளி சாவு
    • படகு மூலமாக தேடி தீயணைப்பு படையினரால் உடல் மீட்கப்பட்டது

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன்(65). கூலித் தொழிலாளி. இவர் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் அருகே உள்ள புகளூர் வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீருக்குள் விழுந்து மூழ்கி விட்டார். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் நிலையை அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். படகு மூலமாக தேடும் பணி நடைபெற்ற போது முனிநாதபுரம் அருகே தண்ணீரில் வாய்க்காலில் ஓரத்தில் மிதந்து கொண்டு இருந்த அர்ஜுனன் சடலத்தை கைப்பற்றினர்.

    • குளித்தலை அருகே விஷ பூச்சி கடித்து பெண் பரிதாபமாக பலியானார்
    • மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் உயிரிழந்தார்

    கரூர், 

    குளித்தலை அடுத்த, நல்ல கவுண்டனுாரை சேர்ந்தவர் சிவா, கூலி தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது 22). இவர் வெளியில் சென்ற போது, விஷ பூச்சி ஒன்று அவரை கடித்துள்ளது. இதில் அவர் உடல் நலம் பாதிக்கப்ட்டதை தொடர்ந்து, அவர் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிந்தாமணிப்பட்டி போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • இரு குடும்பத்தினரிடையே நடைபெற்ற மோதலில் கரூர் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
    • போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ரவி (54). இவரது மனைவி விஜயா (49). அதே பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (50).இவரது மனைவி ராதிகா (45). இரு குடும்பத்தினர் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் விஜயாவின் வீட்டிற்கு அருகே வந்த சிவசுப்பிரமணியம் என்பவர் விஜயாவை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரம் அடைந்த சிவசுப்பிரமணியன் கையில் வைத்திருந்த அறிவாளால் வெட்டியுள்ளார். அப்போது அவரது மனைவி ராதிகா, அவரது சித்தி தமிழ்ச்செல்வி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து விஜயாவை தாக்கியுள்ளனர். இதில் விஜயா படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விஜயா, வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் விஜயாவை அரிவாளால்வெட்டி தாக்கியதாக ராதிகா, அவரது கணவர் சிவசுப்பிரமணியன், அவரது சித்தி தமிழ்ச்செல்வி ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். அதேபோல் ராதிகா கொடுத்துள்ள புகாரில் தன்னை வினோத் என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து வலது கை மேல் போட்டு காயப்படுத்தியதாகவும், சிந்து, விஜயா, ரவி ஆகியோர் தலை முடியை பிடித்து இழுத்து தன்னை தாக்கியதாகவும் கூறி வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கரூரில் வீட்டு உரிமையாளரிடம் வாடகை தொடர்பாக தகராறில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்
    • கைது செய்யப்பட்ட சிறுவன் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே ஓ.கே.ஆர். தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (56). இவருக்கு சொந்தமான வீடு மாணிக்க நகரில் உள்ளது. அங்குள்ள வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் மூர்த்தி தனக்கு சொந்தமான மாணிக்க நகரில் உள்ள வீட்டிற்கு சென்ற போது அங்கு ஏற்கனவே வாடகை கொடுக்காத 17 வயது சிறுவன் மூர்த்தியிடம் வாடகை கேட்க, சிறுவன் வாடகை கொடுக்க முடியாது என தகாத வார்த்தைகளால் மூர்த்தியை திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மூர்த்தி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் அரசினர் கூர் நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

    • கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 535 பேர் முதியோர் உதவித்தொகை பெற்று பயனடைந்துள்ளனர்
    • கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தகவல்

    கரூர்,  

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது,

    தமிழ்நாடு அரசு, சமுதா யத்தில் நலிவடைந்த பிரிவி னர்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு ஓய்வூ திய திட்டங்களைச் செய ல்படுத்தி வருகிறது. அதும ட்டுமல்லாமல், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் வாயிலாக ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகை யில் ஓய்வூதிய திட்டங்களை வழங்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்க ள் நடைமுறையில் இருக்கி ன்றன. தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், இந்திரா காந்தி மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி கைம்பெண்கள் ஓய்வூ தியத் திட்டம், மாற்றுத்தி றனாளிகள் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டம், போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    கடந்த 10 வருடங்களாக உயர்த்தப்படாமல் இருந்த முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சமூக ப்பா துகாப்புத் திட்டங்களின் வாயிலாக வழங்கப்பட க்கூடிய உதவித்தொகையை, தமிழ்நாட்டு மக்களின் நலனில் மிகுந்த அக்கறையு டன், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமை ச்சர் முதியோர் உதவித்தொ கை உள்ளிட்ட பல்வேறு சமூகப்பாதுகாப்பு திட்டங்க ளின் வாயிலாக வழங்கப்ப ட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தொகையான 1000 ரூபாயை 1,200 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.

    அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில், கரூர் வட்டத்தில் 14,759 மண்மங்க ளம் வட்டத்தில் 7,085, புகளூர் வட்டத்தில் 5469, அரவக்குறிச்சி வட்டத்தில் 7.474. கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 6,328 குளித்தலை வட்டத்தில் 9,349, கடவூர் வட்டத்தில் 4,071, என மொத்தம் 54 ஆயிரத்து 535 பயனாளிகள் முதியோர் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

    • மத்திய அரசை கண்டித்து கரூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட்டுகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்

    கரூர், 

    தமிழகம் முழுதும் வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து, மாநிலம் தழுவிய தொடர் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் தலைமை தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் நாட்றாயன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதனைத் தொடர்ந்து, கரூர் ஜவஹர் சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்த போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 30 பேர்களை கைது செய்தனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக இந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் மாநில அளவிலான ஜூடோ போட்டி நடைபெற்றது
    • 15 பள்ளிகளிலிருந்து 98 வகையான பிரிவுகளில் 325 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்

     கரூர்,  

    கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற கொங்கு சகோதயா கூட்டமைப்பு சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையேயான ஜுடோ போட்டியில் 15 பள்ளிகளிலிருந்து 98 வகையான பிரிவுகளில் 325 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் பரணி வித்யாலயா மொத்தமாக 29 தங்க பதக்கத்தையும், 24 வெள்ளி பதக்கத்தையும், 22 வெண்கல பதக்கத்தையும் வென்று ஆண்கள், பெண்கள் 2 பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றனர். இதன் மூலம் புள்ளிகளின் அடிப்படையில் 2-வது முறையாக 75 பதக்கங்களுடன் ஓட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளனர்.கொங்கு சகோதயா மாநில அளவிலான ஜூடோ போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கும் பெருமை சேர்க்க உறுதுணையாக இருந்த தமிழ்நாடு ஜுடோ சங்க மாநில துணைத் தலைவரும், பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வருமான ராமசுப்பிரமணியன், முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, ஒருங்கிணைப்பாளர்கள். ஜூடோ பயிற்சியாளர்கள், முத்துலட்சுமி, பார்த்திபன், ரம்யா, கார்த்திகேயன். துரை, சாதனை படைத்த ஜூடோ விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணி பார்க் கல்வி குழும தாளாளர் மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் சுபாஷினி மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்றவர்களை பாராட்டி வாழ்த்தினர்.

    • விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிலைகளை நீர் நிலைகளின் கரைப்பதற்கான வழிமுறைகள் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் விளக்கம் அளித்துள்ளார்
    • சிலைகளுக்கு வாணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயனசாயம் எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கை

    கரூர்,

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் (PoP),பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோன் (பாலிஸ்டிரின்) கலனைய ற்றதுமான,சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நா நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உணர்ந்த மலர் கூறுகள், வைக்கோல்

    போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்குமரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வனக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகத்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.சிலைகளுக்கு வாணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயனசாயம் எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை பயன்படுத்தக்கூடாது. சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குளித்தலை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • வாக்கு சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பங்கேற்பு

    குளித்தலை,  

    கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை கிழக்கு, மேற்கு, கிருஷ்ணராயபுரம் கிழக்கு, தெற்கு ஒன்றியங்கள் மற்றும் நங்கவரம், மருதூர் பேரூர் தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது, ஆலோசனை கூட்டத்தில் குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம் பேசுகையில்,

    வருகின்ற 24 -ந் தேதி திருப்பூர் மாவட்டம் படியூரில் தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்தும், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 தி.மு.க பெற வேண்டும் என்று அதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்வது குறித்து பேசினார். ஆலோசனை கூட்டத்தில் கட்சி தேர்தல் தொகுதி மேற்பார்வையாளர் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பரணி கார்த்திகேயன், மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சூரியனூர் சந்திரன், குளித்தலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பொய்யாமணி தியாகராஜன், கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கரிகாலன், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கதிரவன், மற்றும் பேரூர் செயலாளர்கள் ரவீந்திரன், முத்து(எ)சுப்பிரமணி, மற்றும் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

    ×