என் மலர்tooltip icon

    கரூர்

    • புன்னம் சத்திரம் அருகே மேஸ்திரி திடீரென மரணமடைந்துள்ளார்
    • வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே குட்டக்கடை வசந்தம் காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (45). கட்டிட மேஸ்திரி. ரமேஷ்க்கு கடந்த 10 வருடங்களாக குடிப்பழக்கம் இருந்து வந்தததாக கூறப்படுகிறது. இதனால் ரமேஷ் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னிமலைக்கு சென்று சித்த வைத்தியம் பார்த்து வந்தார். இந்நிலையில் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். காலை அவரது மனைவி சுமதி எழுந்து ரமேஷை எழுப்பிய போது ரமேஷ் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுஅவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ரமேஷின் மனைவி சுமதி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தவுட்டுப்பாளையம் நர்சிங் கல்லூரி மாணவி மாயமானார்
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). இவரது மனைவி கல்யாணி (35). இவர்களது மகள் ஹர்சினி(17). இவர் புன்னம் சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு சென்று வருவதாக ஹர்சினி வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் இரவு வெகு நேரம் ஆகியும் ஹர்சினி வீடு திரும்பவில்லை.

    பெற்றோர்கள் கல்லூரிக்குச் சென்று விசாரித்த போது ஹர்சினி கல்லூரிக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். பல இடங்களிலும் தேடி கிடைக்காததால், இது குறித்து வர்சினியின் தாய் கல்யாணி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கரூர் மாவட்டம் கந்தப்பாளையத்தில் சாலை அமைக்கும் பணியால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்
    • கரூர் மாவட்டம் கந்தப்பாளையத்தில் சாலை அமைக்கும் பணியால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலை முதல் கந்தம்பாளையம் வரை தார் சாலையின் இருபுறமும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு பழுதடைந்த தார் சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 3 மாதத்திற்கும் மேலாக இந்தப் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் வேலாயுதம்பாளையம்- நடையனூர் வரை கடந்த நான்கு நாட்களாக பழுதடைந்த சாலையை சீரமைத்து தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கந்தம்பாளையம் பகுதியில் தார் சாலையின் குறுக்கே இரும்பு தடுப்புகள் அமைத்து எந்த வாகனமும் இந்த வழியாக செல்ல முடியாதபடி அடைத்துவிட்டனர். இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன. இதன் காரணமாக

    இதனால் கொடுமுடி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் நொய்யல் குறுக்குச்சாலையில் இருந்து புன்னம்சத்திரம் வழியாக வேலாயுதம்பாளையம் சென்று அங்கிருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதேபோல் சேலம், நாமக்கல், பரமத்தி வேலூர் பகுதியில் இருந்து இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் வேலாயுதம்பாளையத்தில் இருந்து புன்னம் சத்திரம் சென்று நொய்யல் குறுக்குச்சாலை வழியாக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால்இரண்டு பகுதியிலிருந்தும் வந்த அனைத்து வாகனங்களும் வெகுதூரம் சென்று குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மிகவும் காலதாமதமாக வாகனங்கள் செல்ல வேண்டி இடத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது. இதனால் தொடர்ந்து பொதுமக்கள், மாணவ, மாணவிகள், நோயாளிகள், விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலையின் ஒரு புறமாக வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பனை மரமானது மனித வாழ்வுக்கு தேவையானவைகளில் பெரும்பாலானவற்றை தந்தது.
    • கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில பனைமரங்களே உள்ளன.

    வேலாயுதம்பாளையம்:

    பூலோகத்தின் கற்பகத்தரு என்று போற்றப்படுவது பனைமரம். இம்மரம் சங்க காலத்தில் இருந்து தமிழர்களின் வாழ்க்கையோடு இரண்டற கலந்திருந்தது. இதன் வேர் முதல் நுனி வரை அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சிறு உயிரினங்களுக்கும் வாழ்விடமாக உள்ளது.

    இதன் வேர் பகுதி விறகாகவும், சேவு நிறைந்த தண்டுப்பகுதி வீடு கட்ட சட்டங்களாகவும், அதன் மட்டையிலிருந்து கயிறு தயாரிக்க பயன்படும் நாரும், ஓலை கூரை வேயவும், தடுப்பு கட்டவும், வறட்சி காலத்தில் கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது.

    மேலும் கூடை, விசிறி, பாய், தொப்பி போன்ற பலவித கலை பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

    அதேபோல் பனை மரம் மருத்துவ குணம் நிறைந்த பதநீர், கள், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய கூடிய நொங்கு, பனம்பழம், பனங்கொட்டை, நார்சத்து மிகுந்த பனங்கிழங்கு ஆகியவற்றை தருவதுடன் பதநீரில் இருந்து பனைவெல்லம், கற்கண்டு ஆகியவையும் தயாரிக்கிறார்கள்.

    இவ்வாறு பனை மரமானது மனித வாழ்வுக்கு தேவையானவைகளில் பெரும்பாலானவற்றை தந்தது. இதனால் அவற்றை நம் முன்னோர்கள் அனைத்து இடங்களிலும் நடவு செய்து பாதுகாத்தனர்.

    காலச்சக்கரத்தில் கற்பக தரு பல இடங்களில் காணாமல் போய்விட்டது. இன்று கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில பனைமரங்களே உள்ளன.

    இந்நிலையில் பனை மரத்தை அழிவில் இருந்து காக்க வேண்டும் என்பதற்காக அரசும், சில தனியார் தொண்டு நிறுவனங்களும் பனை மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்தி வருகின்றன. அதனால் ஒரு சிலர் பனை விதைகளை நடவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அந்த வகையில் கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி அய்யம்பாளையத்தை சேர்ந்த அன்புநாதன் பனை மரம் நடவு செய்ய முன்வந்தார்.

    தொழிலதிபரும் விவசாயியுமான இவருக்கு சேங்கல்மலை அருகே 10 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது.

    இதில் மண்மங்கலத்தை சேர்ந்த பனைமர ஆர்வலர் ராமசாமி மற்றும் பசுமை தளவை இயக்க செயலாளர் அரவிந்தன் ஆகியோர் ஒத்துழைப்புடன் 4 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்துள்ளார்.

    இதுகுறித்து அன்புநாதன் கூறும்போது,

    இன்று தென்னையை விட அதிகம் லாபம் தரக்கூடியது பனைமரம். தென்னை ஏக்கருக்கு 70 மரம்தான் வைக்க முடியும். ஆனால் பனை 400 மரம் வைக்கலாம்.

    ஒரு தேங்காய் ரூ.10 வரை தான் விற்பனை ஆகிறது. ஆனால் நொங்கு ஒரு சுளை ரூ.10வீதம் ஒரு காய் ரூ.30 முதல் 50 வரை விற்பனை ஆகிறது.

    அதேபோல் பதநீர், கருப்பட்டி ஆகியவற்றின் தேவையும், விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மேலும் தென்னை மரத்திற்கு தொடர்ந்து நீர் பாய்ச்சுவதுடன் உழவு, குப்பை, உரம் என்று தொடர்ந்து பராமரிப்பு செலவு செய்ய வேண்டும்.

    ஒரு வருடம் கடும் வறட்சி வந்தாலும் பல வருடங்கள் பாதுகாத்த தென்னந்தோப்பு முற்றிலும் அழிந்து விடும். ஆனால் பனை மரம் மானாவாரி பயிர், வறட்சி, வெள்ளம் என்று எந்த சுழலையும் தாங்கி வளரக்கூடியது. பராமரிப்பு செலவு எதுவும் இல்லை. லாப நோக்கில் பார்த்தால் தென்னை மரத்தை விட இன்று பனை மரமே சிறந்தது. நமது பாரம்பரியத்தின் அடையாளமான பனை மரம் சுற்றுசூழலை பாதுகாப்பது டன் நிலத்தடி நீரையும் பாதுகாக்கிறது என்றார்.

    பனை விதை நடவு செய்த விவசாயி அன்புநாதனை இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். 

    • மாணவிகளிடையே பொருட்கள் வழி தோன்றல்கள் மற்றும் பரிமாற்றம் குறித்த விழிப்புணர்
    • கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வேலாயுதம்பாளையம்  

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல், வணிகக் கணினிப் பயன்பாட்டில், வணிக மேலாண்மை, தொழிற்சார் கணக்கியல் ஆகிய துறைகள், மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் உடன் இணைந்து ஒரு நாள் ஆய்வு கருத்தரங்கை கல்லூரி கலையரங்கில் நடத்தினார்கள்.

    மாணவிகளிடையே பொருட்கள் வழி தோன்றல்கள் மற்றும் பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வியாபார யுக்திகளை மேம்படுத்தும் வகையில் இக்கருத்தரங்கு அமைந்திருந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு அரசு கல்வி நிறுவனங்களின் தலைவரும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினருமான நடேசன் தலைமை வகித்தார்.

    தாளாளர் கோதை நடேசன், செயலாளர் இன்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரை வழங்கினர்.

    கல்லூரியின் வணிகக் கணினிப் பயன்பாட்டியல் துறை தலைவர் முனைவர் கன்னியம்மாள் வரவேற்புரை வழங்கினார், துணை முதல்வர் முனைவர் ரதிதேவி வாழ்த்துரை வழங்கினார்.

    வணிகவியல் துறை தலைவர் யமுனா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். வணிகத் தொழிற்சார் கணக்கியல் துறை தலைவர் சுதா நன்றியுரை வழங்கினார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • அமாவாசையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு
    • பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

     வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, பேச்சிப்பாறை, வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லைப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    இங்கு கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. மேலும் சுப முகூர்த்த நாட்கள், கோவில் மற்றும் திருவிழா விசேஷங்கள் போன்ற காரணங்களால் பூ தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.கடந்த வாரம் ஒரு கிலோ குண்டு மல்லி ரூ300-க்கு விற்பனையானது நேற்று 700 ரூபாய்க்கும், கடந்த வாரம் 70 ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி 180 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி நேற்று 170 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. இதே போல் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாம்பந்தி பூ 170 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லைப்பூ கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனையானது.சுப முகூர்த்த நாட்களை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • புகழூர் தாசில்தார் அலுவலகம் முன்பு சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்
    • தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் முருகையன் முடிவுரை ஆற்றினார்

    வேலாயுதம்பாளையம் 

    சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் சென்னையில் நடக்கும் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தமிழக அரசு உண்ணாவிரதம் இருக்கும் சி.பி.எஸ் இயக்க தலைமையை அழைத்து பேச வலியுறுத்தியும், புகழூர், மண்மங்கலம் வட்ட கிளை சார்பாக புகழூர் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆதரவு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டக் கிளைத் தலைவர் உமா மகேஸ்வரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணு, தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர்கள் சங்க மாநில செயலாளர் தனலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழக அரசு புதிய ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் முருகையன் முடிவுரை ஆற்றினார்.வட்ட பொருளாளர் இளவரசி நன்றி கூறினார்.

    • கரூரில் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா பறிமுதல்
    • செம்மலர் (49) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பா ன்மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் புகையிலை பொ ருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போ லீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று சோதனை செய்த போது அங்கு பான் மசாலா, குட்கா, புகையிலை பொ ருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது. இத்னையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் விற்பனை செய்த புன்னம் சத்திரம் ஆர்.ஜி.நகர் பகுதியைச் சேர்ந்த செம்மலர் (49) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு கோவில்களில் அபிஷேக ஆராதனை
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் சேமங்கி மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு மாரியம்மனுக்கு

    பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மாரி யம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில் சுற்று வட்டா ர பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொ ண்டு மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரி சனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ப்பட்டது. அதேபோல் உப்பு பாளையத்தில் உள்ள வீர மாத்தி அம்மன் கோவில், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை கோவில், நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில், புன்னம் மாரியம்மன், பேரூர் அம்மன் கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை கோவில், மாரி யம்மன் கோவில், நன்செய் புகழூர் பத்ரகாளி கண்டியம்மன் கோவில், அத்திப்பாளையம் பொன்னாச்சிஅம்மன், , உப்பு பாளையம் மாரியம்மன், புன்னம் மாரியம்மன், பகவதி அம்மன், பேரூர்அம்மன், தவுட்டுப்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன், , குந்தாணி பாளையம் நத்தமேடு அங்காள பரமேஸ்வரி அம்மன், மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், குடிப்பாட்டு மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்

    • ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு கோவில்களில் அபிஷேக ஆராதனை
    • சிறப்பு அலங்காரத்தில் மாரி யம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

      வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் சேமங்கி மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு மாரியம்மனுக்கு

    பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மாரி யம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில் சுற்று வட்டா ர பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொ ண்டு மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரி சனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ப்பட்டது. அதேபோல் உப்பு பாளையத்தில் உள்ள வீர மாத்தி அம்மன் கோவில், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை கோவில், நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில், புன்னம் மாரியம்மன், பேரூர் அம்மன் கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை கோவில், மாரி யம்மன் கோவில், நன்செய் புகழூர் பத்ரகாளி கண்டியம்மன் கோவில், அத்திப்பாளையம் பொன்னாச்சிஅம்மன், , உப்பு பாளையம் மாரியம்மன், புன்னம் மாரியம்மன், பகவதி அம்மன், பேரூர்அம்மன், தவுட்டுப்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன், , குந்தாணி பாளையம் நத்தமேடு அங்காள பரமேஸ்வரி அம்மன், மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், குடிப்பாட்டு மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்

    • தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் நேற்றைய தினமே பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ.1000 வந்து சேர்ந்துள்ளது.
    • கலைஞர் மகளிர் உரிமை தொகை நெருக்கடியான நேரங்களில் உதவியாக இருக்கும்.

    கரூர்:

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

    அதன்படி 2023-24 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அந்த திட்டத்திற்கு ரூ. 7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் சிறப்பு முகாம்கள் நட த்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் பின்னர் தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன.

    தற்போது இந்த திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதா னத்தில் உரிமை தொகையை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதாக முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று அந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் நேற்றைய தினமே பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ.1000 வந்து சேர்ந்துள்ளது.

    திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் பயனாளிகளின் வங்கி கணக்குக்கு நேற்றைய தினமே ரூ.1000 வந்துள்ளது.

    கரூர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவி மகேஸ்வரி கூறும்போது;-

    எனது கணவர் டீக்கடை மாஸ்டராக உள்ளார். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாய் உள்ளத்துடன் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.

    பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    சின்ன சின்ன தேவைகளுக்கு கூட கணவரை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலை இருந்தது. எனது சிறிய தேவைகளை கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை கொண்டு பூர்த்தி செய்வேன். முதலமைச்சருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கரூர் ஆத்தூர் பிரிவு பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசி சுசீலா கூறுகையில், எனது கணவர் சலூன் கடை வைத்துள்ளார்.

    நாங்கள் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். சொந்த வீடு கிடையாது. இரண்டு குழந்தைகள் பள்ளியில் படித்து வருகின்றனர். சில நேரங்களில் வாடகை கொடுப்பதற்கும் பள்ளி செலவினங்களுக்கும் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.

    இனிமேல் கலைஞர் மகளிர் உரிமை தொகை நெருக்கடியான நேரங்களில் உதவியாக இருக்கும். நேற்றைய தினமே எனது வங்கி கணக்கில் பணம் வந்து சேர்ந்து விட்டது. முதலமைச்சருக்கு என்றும் நன்றி கடன் பட்டவர்களாக இருப்போம்.

    திருச்சி தாராநல்லூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தலைவி விஜயலட்சுமி கூறும்போது,

    எனது கணவர் மரக்கடையில் மாதம் ரூ.10,000 சம்பளத்துக்கு வேலை செய்கிறார். வாடகை வீட்டில் இருக்கிறோம். மாத வாடகையாக ரூ. 3000 கொடுக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு மகன் பத்தாம் வகுப்பு, இன்னொரு மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள். நான் எந்த வேலைக்கும் செல்லாமல் குழந்தைகளை பராமரித்து வருகிறேன்.

    சில நேரங்களில் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் வாங்குவதற்கு கூட கையில் பணம் இருக்காது.

    கலைஞர் உரிமைத்தொகை என்னை போன்று வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு வரப் பிரசாதமாக இருக்கும்.

    சொந்த காலில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. முதலமைச்சருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

    திருச்சி முத்தரசநல்லூர் கூடலூர் பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசி நதியா கூறுகையில்,

    நேற்று பிற்பகல் 2:30 மணிக்கு எனது வங்கி கணக்குக்கு ரூ. 1000 வந்தது. அதை பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது.

    எனது கணவர் நகைக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். எனக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர்.

    எனது கணவரின் வருமானத்தில் சேமிப்பு என்பது இதுவரை இல்லை. வீட்டு வாடகைக்கும், சாப்பாட்டுக்குமே சரியாக இருக்கும்.

    எனது மகளின் எதிர்கால தேவைக்கு இனிமேல் இந்த கலைஞர் உரிமைத்தொகையை சேமிக்கலாம் என இருக்கிறேன். முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி.

    குளித்தலை தெற்கு மயிலாடி புவனேஸ்வரி கூறும்போது, எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். தினமும் வேலை இருக்காது.

    ஆகவே குடும்ப செலவுகளுக்கு திணறும் விலை ஏற்படும்.

    இந்தநிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு நானும் விண்ணப்பித்திருந்தேன். எனது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் எனது வங்கி கணக்குக்கு ரூபாய் ஆயிரம் அனுப்பியுள்ளார்.

    இது மகிழ்ச்சி அளிக்கிறது பெண்களுக்கு உரிமை தொகை வழங்கிய முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகள்.

    ஏற்கனவே மகளிருக்கு இலவச பேருந்து கட்டணம் வழங்கி வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் பொருளாதார விடுதலையை பெறுவார்கள்.

    முதலமைச்சருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி உள்ளவர்களாக இருப்போம் என்றார்.

    • கரூர் தரகம்பட்டியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர் 

    கரூர் தரகம்பட்டி அருகே உள்ள மேலப்பகுதி ஊராட்சி விராலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 49)விவசாயி. இவர் காசநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக அவதி பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பழனிசாமி கடந்த 11-ந்தேதி விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் பழனிசாமிைய மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். இது குறித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×