என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க. D.M.K."

    • நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை கண்டித்து அரியலூரல தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்

    அரியலூர்,

    'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி அரியலூர் மாவட்ட தி.மு.க.வின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி ஆகியவற்றின் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் மாணிக்கம், துணை செயலாளர் லதா பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளருமான சிவசங்கர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாணவர்களையும், பெற்றோர்களையும் தற்கொலைக்கு தூண்டும் வகையில் 'நீட்' தேர்வு அமைந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் மருத்துவ கனவில் இருந்த பல மாணவ- மாணவிகளை 'நீட்' தேர்வு பலி கொண்டுள்ளது. எனவே 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் 'நீட்' தேர்வு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படாது என கவர்னர் ரவி பேசி வருவது கண்டிக்கத்தக்கது.

    எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவ கனவில் இருக்கும் மாணவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் 'நீட்' தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் கழக துணை அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தாயகம் ரவி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் மற்றும் அனைத்து பொறுப்பாளர்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நேற்று வழக்கத்திற்கு மாறாக அரியலூரில் கடும் வெயில் அடித்தது. பந்தலை சுற்றிலும் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டது. காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதனைதொடர்ந்து அனைவருக்கும் குளிர்பானங்களை கொடுத்து போராட்டம் முடித்து வைக்கப்பட்டது. முன்னதாக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ராமராஜன் வரவேற்றார். முடிவில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் சஞ்சய் குமார் நன்றி கூறினார்.

    • 2024 தேர்தலில் கரூர் பாராளுமன்ற தொகுதியை தி.மு.க. குறி வைக்கிறது
    • ஜோதிமணி எம்.பி. தொகுதி மாறுவாரா?

    கரூர்,

    தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியில் தி.மு.க. கூட்டணி இடம் பெற்று ள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளில் சரி பாதி தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. பங்கிட்டு கொடு த்தது.

    அதில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், 2 கம்யூனி ஸ்டு இயக்கங்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலா 2 தொகுதிகளிலும் இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் வழங்கப்ப ட்டது.

    இதில் இந்திய ஜனநாயக தற்போது கட்சி விலகி நிற்கி றது. மக்கள் நீதி மய்யம் உள்ளே வர காத்திருக்கிறது.

    இந்த நிலையில் நடை பெற இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி யில் இடம் பெற்றுள்ள ஒரு சில கட்சிகள் கூடுதல் இடம் கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறது.

    காங்கிரஸ் கட்சியும் கட ந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளையும் கேட்கி றது.

    தொகுதி பங்கீட்டைப் பொறுத்த அளவில் காங்கிர ஸுக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட அதே தொகு திகளை மீண்டும் ஒதுக்குவ தற்கான வாய்ப்பு அதிகம் இல்லை.

    தொகுதி எண்ணிக்கை குறையவும் வாய்ப்பு இருப்ப தாக சொல்லப்பட்டு வருகி றது.

    இதற்கிடையே ஒரே இய க்கம் மீண்டும் மீண்டும் அதே தொகுதியில் கோலோ ச்சுவதை தி.மு.க. விரும்பவி ல்லை. தங்களது இயக்கத்தில் இருக்கும் அந்தந்த மாவட்ட த்தில் இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது.

    ஆகவே கூட்டணியில் அதிக சீட்டுகள் வைத்திரு க்கும் காங்கிரஸ் தொகுதிகள் வருகிற தேர்தலில் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அதில் பிரதானமாக கரூர் பாராளுமன்ற தொகு தியை தி.மு.க. தலைமை குறி வைத்துள்ளது. இந்த தொகு தியில் உடன்பிறப்புகள் நேரடியாக களம் காண தீர்மானித்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜோதி மணியின் வெற்றிக்கு அமைச்சர் செந் தில் பாலாஜி கடுமையாக உழைத்தார். பின்னர் இடை ப்பட்ட காலத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே முட்டல் மோதல்கள் வெடி த்தது.

    அப்போதே மீண்டும் தி.மு.க. கூட்டணியில் கரூர் தொகுதியில் ஜோதிமணிக்கு போட்டியிட வாய்ப்பு கிடை க்காது என்று அக்கட்சியினர் சொல்லி வந்தனர். அது விரைவில் உறுதி யாக இருப்பதாக சொல்கிறா ர்கள்.

    ஆனால் ஜோதி மணியை பொருத்தமட்டில் காங்கிரஸ் மேலிடத்தில் செல்வாக்கு வைத்துள்ளார்.

    ஆகவே தனக்கான ரூட் டில் சென்று சலசலப்பு இல்லாமல் மீண்டும் கரூர் தொகுதியை பெற்று அனை வரையும் வியக்க வைப்பார் அல்லது கரூரில் தி.மு.க.வி னரின் ஒத்து ழைப்பு கிடைக்காத பட்சத்தில் தொகுதி மாறி போட்டி யிடவும் வாய்ப்புள்ளது என கதர் சட்டைக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

    கரூர் மாவட்டத்தை பொரு த்தமட்டில் காங்கிரஸ் கட்சியினர் இடையே இண க்கம் இல்லாத நிலை இருக்கி றது.

    இவ்வாறான சூழலில் தொகுதி ஒதுக்கீட்டில் ஜோதிமணியிடம் பூத் கமி ட்டி பலத்தை தி.மு.க. கேட் டால் அது அவருக்கு நெரு க்கடியை ஏற்படுத்தும். ஆகவே நிச்சயம் வருகிற தேர்தலில் ஜோதி மணியின் திட்டம் கரூரில் எடுபடாது என தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஒருவர் அடித்து கூறினார்.

    யார் என்ன சொன்னா லும் காலம் சொல்லும் பதிலுக்காக நாம் காத்திருப்போம்...

    ×