என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரூரில் நடந்த விபத்தில் தாய் மகன் படுகாயம்
- மூலிமங்கலம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தாய் மகன் படுகாயம்
- விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே காந்திநகர் 2-வது தெரு பகுதியை சேர்ந்தவர் ஓமந்தூர் (65) .இவரது மனைவி செல்லம்மாள் (60). இவர் கட்டுமான தொழிலில் சித்தாள் வேலை செய்து வருவார். இவரது மகன் பெரியசாமி (37). கட்டிட மேஸ்திரி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பெரியசாமியும் அவரது தாயார் செல்லம்மாளும் கட்டிட வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புகளூர் அன்னை நகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மூலிமங்கலம் பிரிவு சாலையை கடக்கும்போது கரூரில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் பெரியசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த இருவரும், தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






