என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்
- மத்திய அரசை கண்டித்து கரூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட்டுகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்
கரூர்,
தமிழகம் முழுதும் வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து, மாநிலம் தழுவிய தொடர் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் தலைமை தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் நாட்றாயன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, கரூர் ஜவஹர் சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்த போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 30 பேர்களை கைது செய்தனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக இந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story






