என் மலர்
கரூர்
- க.பரமத்தி அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- அமராவதி ஆற்றங்கரையோர பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது
கரூர்:
க.பரமத்தி ஒன்றியம் விசுவநாதபுரி அருகே அணியாபுரம் அமராவதி ஆற்றங்கரையோர பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக வந்த தகவலின் பேரில் க.பரமத்தி சப் இன்ஸ்பெக்டர் உதய குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, சேவல் சண்டை போட்டியில் ஈடுபட்ட விசுவநாதபுரி கிழக்குதெரு பழனிச்சாமி மகன் ஜெயபாரதி( வயது 30), திருக்காம்புலியூர் ரவி மகன் பிரகாஷ் (31) ஆகிய 2 பேரை க.பரமத்தி போலீசார் கைது செய்தனர்.
- கரூரில் ெரயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்
- இறந்த வாலிபர் தற்கொலை செய்யும் நோக்கத்தில் வந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து கரூர் ெரயில்வே போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், மாங்காசோளிபாளையம் வி.வி. நகர் அருகில் கரூர்-மூர்த்தி பாளையம் ெரயில் தண்டவாளங்களுக்கு இடையே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ெரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக கரூர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் கரூர் ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவன் தலைமையிலான ெரயில்வே போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விசாரணையில் அந்த வாலிபர் வலது கையில் ஒரு கருப்பு மச்சம், இடது கையில் ஸ்டார், சிங்கம் படம் பச்சை குத்தப்பட்டு இருந்தது. ெரயிலில் அடிபட்டு இறந்த வாலிபர் தற்கொலை செய்யும் நோக்கத்தில் வந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து கரூர் ெரயில்வே போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்றது
- பல்வேறு ஒத்திகைகள் செய்து காண்பிக்கப்பட்டது
கரூர்,
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை சார்பில் முத்தனூரில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தீயணைப் புதுறை நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகையை செய்து காட்டினார்கள். அப்போது தீ விபத்தில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது சமையல் அறையில்சமையல் செய்யும் போது எண்ணெய் சட்டியில் திடீரென தீப்பிடித்தால் எவ்வாறு எதை கொண்டு அணைக்க வேண்டும் என்பது குறித்தும், தீப்பிடித் துக் கொண்ட வீட்டில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்பது, கேஸ் சிலிண்டரில் கேஸ் லீக் ஆகி தீ பிடித்தால் எப்படி அணைப்பது, புகை சூழ்ந்த இடங்களில் இருந்து எவ்வாறு தப்பிப்பது. அவர்களை எப்படி காப்பாற்றுவது உள்ளிட்ட பல்வேறு ஒத்திகைகளை செய்து காட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
- சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது
- தகவலின் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை
கரூர்,
க.பரமத்தி ஒன்றியம் விசுவநாதபுரி அருகே அணியாபுரம் அமராவதி ஆற்றங்கரையோர பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக வந்த தகவலின் பேரில் க.பரமத்தி சப் இன்ஸ்பெக்டர் உதய குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, சேவல் சண்டை போட்டியில் ஈடுபட்ட விசுவநாதபுரி கிழக்குதெரு பழனிச்சாமி மகன் ஜெயபாரதி( வயது 30), திருக்காம்புலியூர் ரவி மகன் பிரகாஷ் (31) ஆகிய 2 பேரை க.பரமத்தி போலீசார் கைது செய்தனர்.
- பெண்ணின் கழுத்து சங்கிலியை அறுக்க முயன்றபோது பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்
- தப்பியோடிய மற்றொருவருக்கு போலீசார் வலைவீச்சு
கரூர்,
கரூர் வெங்கமேடு சோழன் நகரைச் சேர்ந்தவர் சரவஸ்வதி (வயது 48). ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வெங்கமேடு எஸ்பி காலனி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இவரிடம் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர்களில் ஒருவர், சரஸ்வதியின் கழுத்தில் கிடந்த தங்கசெயினை பறிக்க முயன்றுள்ளார். அப்போது, சரஸ்வதி சுதாரித்துக் கொண்டு சத்தம் போடவும், அருகில் உள்ள மக்கள் ஒன்று சேர்ந்து, செயினை பறிக்க முயன்ற அந்த நபரை கையும் களவுமாக பிடித்து வெங்கமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார், அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது, தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளை ஊரணி பகுதியை சேர்ந்த எட்வின்ராஜ்(வயது 34) என்பது தெரிய வந்ததோடு, அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு, உடன் வந்து பைக்கில் தப்பியோடி மற்றொரு நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
- முதன்மை அமர்வு நீதிபதி தொடங்கி வைத்தார்
- 62 பேர் ரத்ததானம் கொடுத்தனர்
கரூர்,
கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், ரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் ரத்த தான முகாமை, தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நீதிமன்ற ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்பட 62 பேர் ரத்த தானம் செய்தனர். முகாமில், முதன்மை சார்பு நீதிபதி பாரதி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம், கூடுதல் சார்பு நீதிபதி மகேந்திரவர்மா, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி, சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாக்கியம் உள்பட பலர் பங்கேற்றனர்.
- பணி பாதுகாப்பு வழங்க கோரி கோஷம்
- கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது
கரூர்,
துாத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு வி.ஏ.ஓ., லுார்து பிரான்சிஸ், மணல் கடத்தல்காரர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கரூர் மாவட்ட கிளை சார்பில், கரூர் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க செயலாளர் பிரபு தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் மங்கையர்க்கரசி, கரூர் வட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். இதில், கொலை குற்றவாளிகளை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரியும், வி.ஏ.ஓ.,க்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கோடை மழை காரணமாக வரத்து அதிகரித்தது
- கிலோ ரூ,120 என சரிந்தது
கரூர்,
கரூரில் கடந்த மார்ச் மற்றும் நடப்பு ஏப்ரல் மாத தொடக்கத்தில், எலுமிச்சம் பழம் ஒரு கிலோ 140 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.இதனால், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் எலுமிச்சை பழம் விளைச்சல் அதிகரித்தது.இதையடுத்து, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் மார்க்கெட்டுக்கு எலுமிச்சை பழம் வரத்து அதிகரித்தது. இதனால் ஒரு கிலோ எலுமிச்சை பழம், 100 ரூபாய் முதல், 120 என சரிந்தது.இதுகுறித்து, வியாபாரிகள் சிலர் கூறியதாவது, எலுமிச்சை பழம் வரத்து அதிகரித்துள்ள நிலையில், கோடை மழை துவங்கியுள்ளது. இதனால், அவற்றின் பயன்பாடு குறைந்து விலையும் சரிவடைந்து வருகிறது என்று தெரிவித்தனர்.
- இரு வேறு சம்பவங்களில் இரண்டு பேர் மாயமாகி உள்ளனர்
- வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்
கரூர்,
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், மூலிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது 50). இவர் ஆந்திரா மாநிலத்தில் ரயில்வே கூட்டுறவு வங்கியில், உதவியாளராக பணியாற்றி வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக, விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த கதிரவன், கடந்த 19-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால், அதன் பிறகு மீண்டும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து, கதிரவன் மனைவி ஜெயலட்சுமி அளித்த புகாரின்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், கரூர், வெங்கமேடு தங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 41) டிரைவர். இவரது மனைவி தீபா (40), கரூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில், வேலை செய்து வந்தார். கடந்த, 21-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற, தீபாவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சுரேஷ் வெங்கமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
- கரூர் க.பரமத்தியில் இரண்டு பட்டிக்குள் புகுந்து வெறிச்செயல்
- கால்நடை மருத்து குழுவினர், உயிரிழந்த ஆடுகளை பரிசோதனை செய்தனர்
கரூர்,
கரூர் மாவட்டம், க.பரமத்தியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 45). விவசாயியான இவர் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், பட்டிக்குள் புகுந்த நாய்கள், கடித்ததில் ஏழு ஆடுகள் இறந்தன. அதேபோல், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு விவசாயி ரவி (50) என்பவரது பட்டியில் இருந்த, மூன்று ஆடுகள், நாய்கள் கடித்ததில் உயிரிழந்தன. தகவல் அறிந்த க.பரமத்தி உதவி கால்நடை மருத்துவர் தமிழரசன் குழுவினர், உயிரிழந்த ஆடுகளை பரிசோதனை செய்தனர். இந்த சம்பவம், அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கரூர் மைய நூலகத்தில் நடைபெற்றது
- மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது
கரூர்,
உலக புத்தக தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட மைய நூலகத்தில் மாணவ மாணவியருக்கான நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. அதில் அரசு பள்ளி மாணவ மாணவியர் 300 பேருக்கு நன்கொடை மூலம் நூலக அடையாள அட்டைகளை, வாசகர் வட்டத் தலைவர் தீபம் சங்கர் வழங்கினார். மேலும் உலக புத்தக தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட மைய கிளை ஊர்புற நூலகங்களில் 44 புரவலர்கள், இரண்டு பெரும் புரவலர்கள், இரண்டு கொடையாளர்கள் சேர்க்கப்பட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட மைய நல் நூலகர் சுகன்யா, மாநகராட்சி கோட்டைமேடு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயா, நூலகர் கார்த்தி நிவாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் கரூர் மாநகராட்சி காந்திகிராமம் நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர் புத்தக வாசிப்பை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் ஆசிரியை திலகவதி உட்பட பலர் பங்கேற்றனர்.
- கரூர் மாவட்டம் வெள்ளப்பட்டியில் நாளை நடைபெறுகிறது
- கலெக்டர் பிரபுசங்கர் தகவல்
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வெள்ளப்பட்டி கிராமம், மஜ்ரா வேலாயுதப்பாளையம் கிராமத்தில் நாளை (26-ந்தேதி, புதன்கிழமை) பிற்பகல் சுமார் 3 மணியளவில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு அரசுத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்க உள்ளனர். மேலும் மருத்துவ முகாம், அரசுத்துறை சார்பாக கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளன. எனவே, வெள்ளப்பட்டி கிராமம், மஜ்ரா வேலாயுதப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மேற்படி மனுநீதி நாள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.






