என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தங்கச்சங்கிலி பறிக்க முயன்று பொதுமக்களிடம் வசமாக சிக்கிய ஆசாமி
  X

  தங்கச்சங்கிலி பறிக்க முயன்று பொதுமக்களிடம் வசமாக சிக்கிய ஆசாமி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெண்ணின் கழுத்து சங்கிலியை அறுக்க முயன்றபோது பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்
  • தப்பியோடிய மற்றொருவருக்கு போலீசார் வலைவீச்சு

  கரூர்,

  கரூர் வெங்கமேடு சோழன் நகரைச் சேர்ந்தவர் சரவஸ்வதி (வயது 48). ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வெங்கமேடு எஸ்பி காலனி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இவரிடம் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர்களில் ஒருவர், சரஸ்வதியின் கழுத்தில் கிடந்த தங்கசெயினை பறிக்க முயன்றுள்ளார். அப்போது, சரஸ்வதி சுதாரித்துக் கொண்டு சத்தம் போடவும், அருகில் உள்ள மக்கள் ஒன்று சேர்ந்து, செயினை பறிக்க முயன்ற அந்த நபரை கையும் களவுமாக பிடித்து வெங்கமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார், அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது, தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளை ஊரணி பகுதியை சேர்ந்த எட்வின்ராஜ்(வயது 34) என்பது தெரிய வந்ததோடு, அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு, உடன் வந்து பைக்கில் தப்பியோடி மற்றொரு நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

  Next Story
  ×