என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வி.ஏ.ஓ., படுகொலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
    X

    வி.ஏ.ஓ., படுகொலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பணி பாதுகாப்பு வழங்க கோரி கோஷம்
    • கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது

    கரூர்,

    துாத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு வி.ஏ.ஓ., லுார்து பிரான்சிஸ், மணல் கடத்தல்காரர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கரூர் மாவட்ட கிளை சார்பில், கரூர் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க செயலாளர் பிரபு தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் மங்கையர்க்கரசி, கரூர் வட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். இதில், கொலை குற்றவாளிகளை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரியும், வி.ஏ.ஓ.,க்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×