என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரூரில் ெரயிலில் அடிபட்டு வாலிபர் பலி
- கரூரில் ெரயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்
- இறந்த வாலிபர் தற்கொலை செய்யும் நோக்கத்தில் வந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து கரூர் ெரயில்வே போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், மாங்காசோளிபாளையம் வி.வி. நகர் அருகில் கரூர்-மூர்த்தி பாளையம் ெரயில் தண்டவாளங்களுக்கு இடையே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ெரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக கரூர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் கரூர் ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவன் தலைமையிலான ெரயில்வே போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விசாரணையில் அந்த வாலிபர் வலது கையில் ஒரு கருப்பு மச்சம், இடது கையில் ஸ்டார், சிங்கம் படம் பச்சை குத்தப்பட்டு இருந்தது. ெரயிலில் அடிபட்டு இறந்த வாலிபர் தற்கொலை செய்யும் நோக்கத்தில் வந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து கரூர் ெரயில்வே போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.