என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • திருமண நிகழ்ச்சியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
    • மிக சிறந்த ஒரு சமூக சேவையை முன்னின்று நடத்திய சபைக்கு எனது நன்றியினை விஜய் வசந்த் தெரிவித்துக்கொண்டார்.

    நாகர்கோவில்:

    தென்னிந்திய திருச்சபை சார்பில் நாகர்கோவிலில் வைத்து ஏழு ஏழை பெண்களுக்கான திருமண நிகழ்ச்சி நடத்தி வைக்கப்பட்டது.

    திருச்சபையின் பவள விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த "நம்ம வீட்டு கல்யாணம்" திருச்சபையின் சார்பில் ஏழு நலிவடைந்த குடும்பங்களை சேர்ந்த பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு திருச்சபையின் செலவில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    தென்னிந்திய திருச்சபை பேராயர் செல்லையா நடத்தி வைத்த இந்த திருமண நிகழ்ச்சியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    மிக சிறந்த ஒரு சமூக சேவையை முன்னின்று நடத்திய சபைக்கு எனது நன்றியினை விஜய் வசந்த் தெரிவித்துக்கொண்டார்.

    • பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பிஜி பிரதாப் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
    • பி.எஸ்.என்.எல். சேவைகளை மக்களிடம் மேலும் எடுத்து செல்வது மற்றும் சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. இக்குழு கூட்டத்தை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையேற்று நடத்தினார்.

    பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பிஜி பிரதாப் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பி.எஸ்.என்.எல். சேவைகளை மக்களிடம் மேலும் எடுத்து செல்வது மற்றும் சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    • ஆண்டுதோறும் தைத்திருவிழா நடைபெறும்.
    • கால்நாட்டு விழா நேற்று காலையில் கோவிலில் நடந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் தைத்திருவிழா நடைபெறும். அதன்படி வருகிற ஜனவரி மாதம் 18-ந் தேதி தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான கால்நாட்டு விழா நேற்று காலையில் கோவிலில் நடந்தது.

    நிகழ்ச்சியில் கோவில் நம்பூதிரி கேசவன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் கால் நாட்டப்பட்டது. இதில் கண்காணிப்பாளர் ஆனந்த் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனை செய்து தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று குமரி மாவட்ட மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அவர்களிடம் கலெக்டர் ஸ்ரீதர் மனுக்களை பெற்றார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடுக்க ப்பட்ட மனுவில், மர்மமாக இறந்த குலசேகரம் கோட்டூர் கோணம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் சுந்தர்ராஜ் மரணம் குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது.

    செண்பகராமன்புதூர் சமத்துவபுரம் மக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் மரப்பாலம் மலைப்பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனை செய்து தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    • தி.மு.க.வினர் வட்டச் செயலாளர் ஆனந்த் தலைமையில் பசலியான் நசரேத் முன்னிலையில் இன்று அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
    • 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 100 பேர் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடிவீஸ்வரம் ஊட்டுவாழ் மடம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க.வினர் வட்டச் செயலாளர் ஆனந்த் தலைமையில் பசலியான் நசரேத் முன்னிலையில் இன்று அ.தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில நிரவாகிகள் சந்துரு, ராஜன், அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் சேவியர் மனோகரன், துணை செயலாளர் சுகுமாரன், இளைஞரணி செயலாளர் அட்சயா கண்ணன், மண்டல செயலாளர்கள் ஜெயகோபால், ஜெவின் விசு, முருகேஸ்வரன் தொழிற்சங்க செயலாளர் வைகுண்ட மணி நிர்வாகிகள் வேலாயுதம், வெங்கடேஷ், ரபீக் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 100 பேர் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்

    • போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
    • குஷ்பு மீது வன்கொடுமை சட்டம் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

    நாகர்கோவில் :

    ஆதித்தமிழர் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் குமரேசன் தலைமையிலான நிர்வாகிகள், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனத்தை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    நடிகை திரிஷா குறித்து அநாகரிகமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு நடிகையும் மகளிர் ஆணைய உறுப்பினருமான பா.ஜனதாவை சேர்ந்த குஷ்பு தனது இணையதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவு வெளியிட்டிருந்தார். இதற்கு தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து கேள்வி எழுப்பி பதிவிட்டு இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை குஷ்பு அவரது இணையதள பதிவில் "சேரி மொழியில் பேச முடியாது" என பதிவிட்டிருந்தார். சேரி என்ற வார்த்தையை இழிவு படுத்தி ஒட்டுமொத்த பட்டியலின மக்களை இழிவு படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டுள்ள நடிகை குஷ்பு மீது வன்கொடுமை சட்டம் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முன்னாள் அமைச்சர்கள் ராஜலட்சுமி, தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • தெற்கு பகுதி செயலாளர் வக்கீல் முருகேஷ்வரன் தலைமையில் நடந்தது.

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்டம் நாகர்கோவில் மாநகர தெற்கு பகுதிக்குட்பட்ட பூத் கமிட்டி அமைக்கும் பூத் முகவர்கள் கூட்டம் தெற்கு பகுதி செயலாளர் வக்கீல் முருகேஷ்வரன் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மகளிர் அணி இணை செயலாளருமான ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பூத்கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினர். மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், துணை செயலாளர் சுகுமாரன், மாநில நிர்வாகிகள் கிருஷ்ணதாஸ், வக்கீல் சிவ செல்வராஜன், சாந்தினி பகவதியப்பன், பகுதி செயலாளர்கள் வக்கீல் ஜெயகோபால், ஜெவின் விசு, ஸ்ரீலிஜா, வட்ட செயலாளர்கள் ராஜாராம், ஜெயராஜ், முருகன், பாலசுந்தர், ராஜகோபால், சதீஷ், ராம்ஜி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • மது அருந்தும் பழக்கம் இருந்த ஜெயராஜ் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்
    • அவரை குடும்பத்தினர் மீட்டு நெய்யூரில் ஒரு தனியார் மருத்துமனையில் சேர்த்தனர்.

    குளச்சல், நவ. 27-

    மண்டைக்காடு அருகே காரியாவிளை வட்டக்கோட்டையை சேர்ந்தவர் ஜெயராஜ்(வயது 53).வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஊர் திரும்பி உடையார்விளை பகுதியில் ஆக்கர்கடை நடத்தி வந்தார்.

    மது அருந்தும் பழக்கம் இருந்த ஜெயராஜ் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 21-ந் தேதி ஜெயராஜ் விஷம் குடித்து மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு நெய்யூரில் ஒரு தனியார் மருத்துமனையில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து அவரது மனைவி சகிதா மிஸ்ரயேல், குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடக்கு மண்டல தலைவர் தகவல்
    • மழைக்காலங்களில் தேசிய நெடுஞ்சாலையிலும் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுத்தும் நிலை இருந்தது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 16-வது வார்டு உறுப்பினரும், வடக்கு மண்டல தலைவருமான ஜவஹர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சி 16-வது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதும் வார்டு பகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்படி ஹனிபா நகரில் மேடுபள்ளமாக இருந்த பகுதிகள் சீர் செய்யப்பட்டு கழிவுநீர் பாய்ந்தோட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜோதி தெருவில் மழைநீர் வடிகால்கள் சீர் செய்யப்பட்டது.

    16-வது வார்டு சுத்தம், சுகாதாரம் நிறைந்த வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. 2 போர்வெல்களில் இருந்து வரும் தண்ணீர் இணைக்கப்பட்டு தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யப்படுகிறது. இம்மானுவேல் தெரு, ேஜாதி தெரு பகுதியில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டும், நிலை உயர்த்தப்பட்டும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.

    அடுத்து 2 மாத காலத்திற்குள் புத்தன் அணை குடிநீர் திட்டம் அமலுக்கு வரும்போது தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும், வார்டு பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் சீர் செய்யப்பட்டு வருகின்றன. கே.பி.ரோடு, எம்.எஸ்.ரோடு, கிறிஸ்டோபர் தெரு ஓடைகள் புதுப்பிக்கப்படும் பணிகள் நடந்து வருகிறது. இதில் சாலையோரம் நடைபாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    16-வது வார்டு பகுதியில் சுகாதார மையம் இல்லை. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுகாதார மையம் அமைக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கை ஆகும். அதனை போன்று 2 அங்கன்வாடிகள் உள்ளது. அவை மோசமான நிலையில் உள்ளது. அதற்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நூலக கட்டிடம் அருகே அங்கன்வாடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகர்கோவில் மாநகராட்சியில் அனைத்து வார்டுகளும் மேயரின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. 16-வது வார்டில் மட்டும் இதுவரை ரூ.2.50 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

    எம்.எஸ்.ரோட்டில் கிறிஸ்துநகர் முன்பு ஓடைகள் முறையாக சீரமைக்கப்படாததால் இந்த பகுதியில் 20 வருடங்களாக தண்ணீர் தேங்கும். மழைக்காலங்களில் தேசிய நெடுஞ்சாலையிலும் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுத்தும் நிலை இருந்தது. தற்ேபாது வடிகால் சீர் செய்யப்பட்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கீழ் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட இடங்கள் மின்விநியேகம் இருக்காது.
    • குழித்துறை மின் வினியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

    களியக்காவிளை :

    குழித்துறை மின் வினியோக செயற்பொறி யாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    குழித்துறை கோட்டம் புதுக்கடை உபகோட்டம், புதுக்கடை, கருங்கல், கொல்ல ங்கோடு, நம்பாளி, இரவி புதூர்கடை, கிள்ளியூர், பள்ளியாடி மற்றும் சூரிய கோடு ஆகிய பிரிவு களுக்குட்பட்ட பகுதிகளில் தட்டுமர கிளைகள் அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின் தளவாடங்கள் மாற்றும் பணிகள் வருகிற 30-ந்தேதி வரை நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கீழ் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட இடங்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கும் மின்விநியேகம் இருக்காது.

    நாளை (28-ந்தேதி ) கொடுவனம்தோட்டம், விளாத்திகுளம், முள்ள ஞ்சேரி, குமட்டிவிளை, நெடு விளை, மெதுகும்மல், குளப்புறம். நாளை மறுநாள் (29-ந்தேதி) கல்பவிளை, மேலவிளை, சரல்கோட்டை, ஓலவிளை, காட்டுவிளை, கலிங்கராஐபுரம், சமத்துவ புரம், செறுகோல், கிள்ளியூர், இலவுவிளை, கல்லுக்கூட்டம், முருங்கவிளை.

    30-ந்தேதி காஞ்சிநகர், பேப்பிலாவிளை, சேரி, ஆலப்பாடு, மானான்விளை, கருக்கு பனை, வடக்குமாங்கரை, கொல்லன் விளை, இளம்பாலமுக்கு, வள்ளவிளை, கம்பிளார், தாமரைகுளம், ஆப்பிகோடு, இடவார், வளனூர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புகையிலை பொருட்கள், பள்ளி கல்லூரிகள் அருகில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன
    • பறிமுதல் செய்த போலீசார், சிவகுமாரை கைது செய்தனர்.

    அருமனை :

    அருமனை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பள்ளி கல்லூரிகள் அருகில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மஞ்சாலுமூடு முக்கூட்டுக்கல் பகுதியில் பள்ளிக்கூடம் அருகே சிவகுமார் (வயது 49) என்பவர் நடத்தும் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா விற்பனை செய்யப்படுவதாக தனிப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் அந்த கடையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு ஏராளமான குட்கா பாக்ெகட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சிவகுமாரை கைது செய்தனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பங்கேற்பு
    • அம்மனின் கால் பாதத்துக்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் கார்த்திகை தீபத்திரு விழாவையொட்டி நேற்று மாலை மகாதீபம் ஏற்றப் பட்டது. இதையொட்டி நேற்று மாலை பகவதி அம்மன் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். இந்த ஊர்வலம் சன்னதி தெரு வழியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுதுறையை சென்ற டைந்தது. பின்னர் அங்கு இருந்து தனி படகு மூலம் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்றனர். அங்குள்ள ஸ்ரீபாதமண்டபத்தில் உள்ள பாறையில் இயற்கையாகவே அமைந்துள்ள பகவதி அம்மனின் கால் பாதம் பதிந்து இருந்த இடத்தில் எண்ணெய், மஞ்சள் பொடி, பால், பன்னீர், தயிர், இளநீர், களபம், சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின்னர் அம்மனின் கால் பாதத்துக்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீபாத மண்டபத்தில் இருந்து கோவில் மேல்சாந்தி சீனிவாசன் போற்றி கார்த்திகை தீபத்தினை ஏற்றி மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து ஸ்ரீபாதமண்டபத்தின் மேற்குப்பக்கம் உள்ள வெளிபிரகாரத்தில் வைத்தார். இந்த கார்த்திகை தீபம் கடற்கரையில் உள்ள பகவதி அம்மன் கோவில் கிழக்குவாசலை நோக்கி வைக்கப்பட்டது. கன்னியா குமரி கடற்கரையில் நின்ற வாறு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கார்த்திகை தீபத்தை பார்த்து வணங்கி வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரு மான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., குமரி மாவட்ட திருக்கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ், கன்னியா குமரி விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்மநாபன், விவே கானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர்.சி. தாணு, பாறை நினைவாலய மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் அக்சயா கண்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×