அருமனை அருகே பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்றவர் கைது

புகையிலை பொருட்கள், பள்ளி கல்லூரிகள் அருகில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தனபறிமுதல் செய்த போலீசார், சிவகுமாரை கைது செய்தனர்.
அருமனை அருகே பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்றவர் கைது
Published on

அருமனை :

அருமனை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பள்ளி கல்லூரிகள் அருகில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மஞ்சாலுமூடு முக்கூட்டுக்கல் பகுதியில் பள்ளிக்கூடம் அருகே சிவகுமார் (வயது 49) என்பவர் நடத்தும் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா விற்பனை செய்யப்படுவதாக தனிப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் அந்த கடையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு ஏராளமான குட்கா பாக்ெகட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சிவகுமாரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com