என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • பெருந்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தெரிவித்த வாழ்த்தினை ஏற்று வாங்கினேன்.

    பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது

    திங்கள் நகரில் நடைபெற்ற பெருந்தலைவர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருந்தலைவருக்கு அஞ்சலி செலுத்தினேன்.


    திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் திரு. சுமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் திரு. கே.டி.உதயம், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ராஜேஷ் குமார், திரு. பிரின்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் திரு. லாரன்ஸ், திரு யூசுஃப் கான், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு டைசன் ,மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி திருமதி வதன நிஷா, மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


    இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தெரிவித்த வாழ்த்தினை ஏற்று வாங்கினேன்.

    பெருந்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

    • தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர்செல்வம் ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தார்.
    • நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாகர்கோவிலில் வருகின்ற 15 ஆம் தேதி மிக சிறப்பாக நடைபெற இருக்கும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கன்னியகுமாரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் மாவட்ட தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர்செல்வம் ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.



    • செல்வப்பெருந்தகையை குற்றம்சாட்டி பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்.
    • செல்வப்பெருந்தகை மீது சி.பி.ஐ. வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீதான வழக்குகளை பட்டியல் போட்டு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.

    காங்கிரஸ் கட்சியில் வேறு எந்த மாநிலத்திலும் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்து விட்டு வெளியில் வந்தவர் மாநில தலைவராக இல்லை. ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு அனைவருக்குமே தெரியும்.

    செல்வப்பெருந்தகையை கைது செய்ய சென்ற போது குதித்து காலை உடைத்துக் கொண்டதும் அனைவருக்கும் தெரியும்.


    தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் எப்படி இருக்கிறார்? என்பது தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும். அதைப் பார்த்துதான் மக்கள் ஓட்டு போட வேண்டும். இது போன்ற நபர்களை படம் பிடித்து காட்டாமல் விடமாட்டேன் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.

    இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் செல்வப்பெருந்தகை மீது தொடர்ந்து அநாகரீக முறையில் பேசிவரும் அண்ணாமலை மற்றும் பா.ஜ.க.-வினரையும் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.


    • விஜய் வசந்த் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார்.
    • நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார். இதேபோல் விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றார்.

    அந்த வகையில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற விஜய் வசந்த் இணைந்து நன்றியை தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்றது.
    • மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம், நவீன் குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு கொண்டனர்.

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செல்வபெருந்தகை தலைமையில் ஜூலை 15 அன்று நடைபெறவுள்ளது.


    அது தொடர்பான ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்றார்.

    தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் செல்வம் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம், நவீன் குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு கொண்டனர்.

    • ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக வக்கீல்கள் அறிவித்திருந்தனர்.
    • போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    நாகர்கோவில்:

    நாட்டில் அமலுக்கு வந்துள்ள மாற்றி அமைக்கப்பட்ட 3 குற்றவியல் வழக்குகளை வாபஸ் பெற கோரியும், மத்திய அரசை கண்டித்தும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்திலும் நாகர்கோ வில், பூதப்பாண்டி, குழித்துறை, தக்கலை, இரணியல் கோர்ட்டுகளில் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று நாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக வக்கீல்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நாகர்கோவில் கோர்ட்டில் இன்று காலை வக்கீல்கள் திரண்டனர்.

    சங்கத் தலைவர் அசோக் குமார் மற்றும் மூத்த வக்கீல் பால ஜனாதிபதி, வெற்றி வேல், மரியஸ்டீபன், குழித்துறை வக்கீல்கள் சங்கத் தலைவர் சுரேஷ், பூதப்பாண்டி வக்கீல்கள் சங்க தலைவர் ரெஜினால்டு, இரணியல் வக்கீல்கள் சங்க தலைவர் பெஸ்லி பத்மநாபபுரம் வக்கீல்கள் சங்க தலைவர் பொன்ராஜ் உட்பட 300-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    ஆனால் கோர்ட்டில் இருந்து வக்கீல்கள், ஊர்வலமாக வேப்பமூடு வழியாக அண்ணா பஸ் நிலையம் வந்தனர். அவர்க ளை போலீசார் ரோட்டின் நடுவே பேரிகார்டுகள் வைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரின் தடுப்புகளை மீறி வக்கீல்கள் செல்ல முயன்றனர்.

    போலீசார் அவர்களை தடுத்ததால் நடுரோட்டில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அதை தொடர்ந்து மீண்டும் வக்கீல்கள் தடுப்புகளை மீறி ரெயில் நிலையம் நோக்கி செல்ல முயன்றனர். போலீ சார் அவர்களை தடுத்து நிறுத்திய போது போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    ரோட்டில் வைக்கப்பட்டி ருந்த பேரிகார்டுகளை தூக்கி வீசிவிட்டு வக்கீல்கள் மீண்டும் அங்கிருந்து தடையை மீறி ஊர்வலமாக சென்றனர். கோட்டாறு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் முன்பகுதியில் மீண்டும் போலீசார் பேரிகார்டுகளை சாலையின் நடுவே வைத்து தடுத்து நிறுத்தினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கு மேற்பட்ட வக்கீல்களை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை, தக்கலை பகுதிகளை சேர்ந்த வக்கீல்கள்களும் கலந்து கொண்டனர். வக்கீல்கள் போராட்டம் காரணமாக நாகர்கோவில் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தவிப்பிற்கு ஆளானார்கள்.

    • டாக்டர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது சதீஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.
    • சதீஸ்வரன் இறப்புக்கு 2 மணி நேரமாக 108 ஆம்புலன்ஸ் டிரைவர் அலைக்கழித்தது தான் காரணம்.

    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி மூவேந்தர் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மகன் சதீஸ்வரன் (வயது 37). இவர் சென்னையில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

    ஊருக்கு வந்திருந்த சதீஸ்வரன், இன்று காலையில் வீட்டில் டீ குடிக்கும் போது மயங்கி விழுந்தார். உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில் அது வராததால், சதீஸ்வரனை ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளனர். பின்னர் 108 ஆம்புலஸ்சு மூலம் செண்பகராமன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது சதீஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இது அவரது உறவினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் கூறுகையில், 108 ஆம்புலன்சு டிரைவரின் அலட்சியம் தான் சதீஸ்வரன் உயிரை பறித்து விட்டது. அவர் மயங்கியதும் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தோம்.

    ஆனால் வரவில்லை. ஆட்டோவில் சென்ற போது, ஆம்புலன்சை நடுவழியில் பார்த்தோம். அதன் டிரைவர் பரிசோதித்து பார்த்து விட்டு, சதீஸ்வரனுக்கு நாடி துடிப்பு சரியாக இல்லை. வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள் என்றார்.

    அதன்படி வீட்டுக்கு வந்த நிலையில், சதீஸ்வரன் உடலில் அசைவுகள் காணப்பட்டன. எனவே மீண்டும் ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அப்போது 108 ஆம்புலன்சு டிரைவர், எங்களை மறித்து சதீஸ்வரனை ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த போதே சதீஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.

    சதீஸ்வரன் இறப்புக்கு 2 மணி நேரமாக 108 ஆம்புலன்ஸ் டிரைவர் அலைக்கழித்தது தான் காரணம். சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருந்தால் அவர் பிழைத்து இருப்பார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் இணைந்து கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் துவக்கி வைத்தார்.
    • கால்பந்து போட்டிகளில் பல்வேறு அணிகளை சேர்ந்த ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடி பகுதியில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கால்பந்து போட்டி நடைபெற்றது. 

    கால்பந்து போட்டிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் இணைந்து கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் துவக்கி வைத்தார்.

    கால்பந்து போட்டிகளில் பல்வேறு அணிகளை சேர்ந்த ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர். 

    போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.பி விஜய் வசந்த் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

    • மீனவர் அணி தலைவர் ஸ்டர்வின், உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • காமராஜர் மற்றும் லூர்தம்மாள் சைமன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    குளச்சல் நகரத்தில் காங்கிரஸ், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாராளுமன்ற உளுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு நன்றி தெரிவித்தார்.


    பெருந்தலைவர் காமராஜர் மற்றும் லூர்தம்மாள் சைமன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


    இந்நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.டி.உதயம், நகர்மன்ற தலைவர் நசீர், காங்கிரஸ் நகர கமிட்டி தலைவர் சந்திரசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் யூசுஃப் கான், ஆரோக்கிய ராஜன், மீனவர் அணி தலைவர் ஸ்டர்வின், உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் அதனை பார்த்து ரசித்தனர்.
    • அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் வார இறுதி விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் அதனை பார்த்து ரசித்தனர்.

    மேலும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் காத்து இருந்தனர். ஆனால் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 8 மணிக்கு படகு போக்கு வரத்து தொடங்கப்படவில்லை. பகல் 10.30 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து சுமார் 2½ மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர். மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துஉள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார்.
    • பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உடன் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார்.

    அந்த வகையில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக விஜய் வசந்த் சந்தித்தார். அவர்களுக்கு சால்வை அணிவித்தார்.


     அப்போது, பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உடன் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இருந்தனர்.

    • குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொகுதிக்கு உட்பட்ட அவரது துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தார்.
    • சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என பாராளுமன்று உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்தார்.

    கன்னியாகுமரி:

    மத்திய நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொகுதிக்கு உட்பட்ட அவரது துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தார்.

    மேலும் களியக்காவிளை, கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை மற்றும் மார்த்தாண்டம், பர்வதிபுரம் மேம்பாலங்கள் பழுதடைந்து இருப்பதை விளக்கி உடனடியாக அவற்றை சீர் செய்ய ரூபாய் 21 கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என பாராளுமன்று உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்தார்.

    ×