என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த விஜய் வசந்த்
- விஜய் வசந்த் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார்.
- நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார். இதேபோல் விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றார்.
அந்த வகையில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற விஜய் வசந்த் இணைந்து நன்றியை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






