என் மலர்
கன்னியாகுமரி
- 9 பேர் சேர்ந்து இரு சக்கர வாகனங்களில் பேச்சிப்பாறை அணையை பார்ப்பதற்காக சுற்றுலா வந்தனர்.
- ரோஜன்ராஜூ மட்டும் நீச்சல் அடிக்க முடியாமல் தடுமாறினார். அவர் நீரில் மூழ்கி தத்தளித்தார்
கன்னியாகுமரி :
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் தும்பமண் பேரா ணிக்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி ஷாலியா, மகன் ரோஜன்ராஜூ (வயது 19). களியாக்காவிளை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ரோஜன்ராஜூ முதலாம் ஆண்டு பிசியோ தெரபி படித்து வருகிறார். ராஜூ இறந்து விட்ட நிலையில் ஷாலியா கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்து வந்தார்.
ரோஜன்ராஜூ, புலியூர்சா லையை சேர்ந்த தனது நண்பர் ஆன்றோ என்பவரின் வீட்டில் தங்கியிருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார். நேற்று விடுமுறை என்பதால் நண்பர்கள் 9 பேர் சேர்ந்து இரு சக்கர வாகனங்களில் பேச்சிப்பாறை அணையை பார்ப்பதற்காக சுற்றுலா வந்தனர். அணையை பார்த்து விட்டு அணையின் மேல் பகுதியான தேக்காடு நீர்பிடிப்பு பகுதிக்கு வந்தனர். அங்கு நண்பர்கள் அனை வரும் சேர்ந்து பிரியாணி சமைத்து சாப்பிட்டு சந்தோஷ மாக இருந்தனர்.
பின்னர் ரோஜன்ராஜூ உட்பட 4 மாணவர்கள் காய லில் இறங்கி குளித்து நீச்சல டித்து கொண்டு இருந்தனர். அவர்கள் காயலின் ஒரு பகுதி வரை சென்று திரும்பி கரைக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது ரோஜன்ராஜூ மட்டும் நீச்சல் அடிக்க முடியாமல் தடுமாறினார். அவர் நீரில் மூழ்கி தத்தளித்தார். உடனே அதிர்ச்சி அடைந்த மற்ற 3 மாணவர்களும் சேர்ந்து ரோஜன்ராஜூவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர் தண்ணீர் அதிகம் குடித்ததால் மயங்கிய நிலையில் இருந்தார்.
உடனே நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து பேச்சிப்பாறை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து முதலுதவி சிகிட்சை அளித்தனர். இந்த தகவல் அறிந்து திருவட்டார் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பீனாகுமாரி சம்பவ இடத்தை பார்வையிட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தார். பின்னர் ஆம்பு லன்ஸ் மூலம் ரோஜன்ராஜூ குலசேகரம் அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ரோஜன்ராஜூ இறந்து விட்டதாக தெரி வித்தனர். இதனை கேட்டு அவரது நண்பர்கள் கதறி அழுது துடித்தனர்.
தகவல் அறிந்ததும் பேச்சிப்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். மகன் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் குறித்து தாய் ஷாலியாவுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர்.
இன்று மாணவனின் உடல் பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. மாணவன் இறந்த அந்த பகுதியில் அபாய பகுதி யாரும் குளிக்க வேண்டாம் என்று ஊராட்சி மூலம் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணித்து வருகிறார்கள்.
- தொழிலாளியை சிறுத்தை புலி தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சிறுத்தை புலி, புலிகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. சிலோன் காலனி பகுதியில் புலியின் அட்டகாசம் காரணமாக பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அந்த பகுதியில் உள்ள ஆடு, மாடுகளை புலி கடித்துக் கொன்றது. இதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணித்து வருகிறார்கள்.
இதற்கிடையில் கீரிப் பாறை வனப்பகுதியில் சிறுத்தை புலி அட்டகாசம் செய்து வருகிறது. அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சிறுத்தை புலி சுற்றி வருவதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் குமரி மேற்கு மாவட்டம் மோதிர மலை பகுதியில் ரப்பர் தோட்ட தொழிலாளி ஒரு வரை சிறுத்தை புலி தாக்கி உள்ளது. இந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குலசேகரம் அருகே உள்ள மோதிரமலை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). ரப்பர் பால்வெட் டும் தொழிலாளி. இவர் தினமும் காலை அவருக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்திற்கு செல்வது வழக்கம். இன்று காலையில் வழக்கம்போல் சிவக்குமார் அவரது ரப்பர் தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதி யில் திடீரென வந்த சிறுத்தை புலி சிவகுமாரை தாக்கியது. இதனால் சிவகுமார் கீழே விழுந்தார். இதில் அவருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. சிறுத்தை புலி தாக்கப்பட்டது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து 108 ஆம்பு லன்ஸ் மூலமாக சிவகுமாரை குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சாலைகள் மிக மோசமான நிலையில் கிடந்ததையடுத்து ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினார்கள்.
சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. சிவக்குமாரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ரப்பர் தோட்ட தொழிலாளியை சிறுத்தை புலி தாக்கிய தகவல் வனத்துறையினருக்கு தெரிய வந்ததையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அந்த பகுதியில் உள்ள சிறுத்தை புலியின் கால் தடத்தையும் ஆய்வு செய்தனர். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சிவகுமாரிடம் நடந்த சம்பவங்களை கேட்டு அறிந்தனர். தொழிலாளியை சிறுத்தை புலி தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- காலை 4 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
- கல்குளம் தாலுகா அதிக மக்கள் தொகை கொண்ட தாலுகா ஆகும்.
கன்னியாகுமரி :
குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், தெற்கு ரெயில்வே அதிகாரிக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதா வது:-
திருவனந்தபுரத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள வாராந்திர சிறப்பு ரெயில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 23, 30-ந் தேதி மற்றும் செப்டம்பர் 6-ந் தேதி (புதன்கிழமை)களில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் குழித்துறை, நாகர்கோவில் டவுண், திருநெல்வேலி, மதுரை ,திருச்சி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வியாழக்கிழமை காலை 4 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
மறு மார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து வியாழக்கிழமை மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு திருச்சி, மதுரை, நாகர்கோவில் டவுன், குழித்துறை வழியாக திருவனந்தபுரத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 7:30 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் சட்டமன்ற தொகுதி மக்கள் அதிக அளவு பயன்படுத்தும் இரணியல் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இரணியல் ெரயில் நிலையம் கல்குளம் தாலுகாவில் அமைந்துள்ளது. மாவட்டத்திலுள்ள மற்ற தாலுகாக்களை விடவும் கல்குளம் தாலுகா அதிக மக்கள் தொகை கொண்ட தாலுகா ஆகும். இந்த தாலுகாவை சார்ந்த மக்கள் அனைவரும் இரணியல் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரெயிலுக்கு இரணியலில் நிறுத்தம் கொடுக்காமல் இயக்குவது இந்த தாலுகா மக்களை புறக்கணிக்கும் செயலாகும். ஆகவே வேளாங்கண்ணி சிறப்பு ரெயில்கள், இரணியல் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடினார்கள்.
- நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
நாகர்கோவில்:
சென்னை வடபழனியைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார்.
அவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் நேரில் சந்தித்து பேசினார்கள். இந்நிலையில் வீட்டிலிருந்த மாணவி மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினார்கள்.
ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடினார்கள். அப்போது மாணவி வாலிபருடன் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து மாணவியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்து வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக அவர் செல்போனில் யாருடனும் பேசாமல் இருந்து வந்தார். இதனால் அவரை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. ஒரு மாதமாக தேடியும் மாணவி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மாணவி, தனது தோழி ஒருவருக்கு செல்போனில் பேசினார். அவர் தனது தோழியிடம் காதலனை நம்பி வந்ததாகவும் அவர் தனது நகையை விற்று செலவு செய்து விட்டு, தற்பொழுது கொடுமைப்படுத்தி வருவதாகவும் கூறினார். மேலும் பக்கத்து வீட்டு பெண் ஒருவரின் செல்போனை வாங்கி பேசுவதாக கூறியதுடன் தான் குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தன்னால் கூற இயலவில்லை. எனவே பெற்றோரிடம் தெரிவித்து தன்னை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று கண்ணீர் மல்க பேசினார். இதையடுத்து மாணவியை அவரது தோழி சமாதானம் செய்தார். மேலும் மாணவியின் பெற்றோரிடம் நடந்த சம்பவத்ததையும் கூறினார். அவர்கள் இந்த தகவலை போலீஸ் நிலையத்தில் தெரிவித்தனர்.
உடனே சென்னை போலீசார், வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாணவியை மீட்க வடசேரி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மாணவி கூறிய தகவலின் அடிப்படையில் வடசேரி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மாணவி இருந்தது தெரிய வந்தது. அவரை மீட்ட போலீசார், அங்கு இருந்த வாலிபரையும் பிடித்தனர். மீட்கப்பட்ட மாணவியையும் அந்த வாலிபரையும் போலீசார் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
மாணவி மீட்கப்பட்டது குறித்த தகவல் சென்னை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அவர்கள் மாணவியின் பெற்றோரை அழைத்துக் கொண்டு இன்று காலை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.
வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாணவியுடன் சமூக வலைதளம் மூலமாக பழகி தனது நண்பர் ஒருவரது ஏற்பாட்டில் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்ததாகவும் நாகர்கோவிலில் வாடகை வீட்டில் இருவரும் குடும்பம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் வாலிபர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என்ற தகவலும் தெரியவந்தது.
மாணவிக்கு 17 வயதே ஆவதால் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வடசேரி வாடகை வீட்டில் மீட்கப்பட்ட மாணவியை போலீசார் நேற்று இரவு விசாரணைக்கு பிறகு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இன்று காலை மீண்டும் மாணவி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது சென்னையில் இருந்து போலீசாரும் மாணவியின் பெற்றோரும் அங்கு வந்தனர். மாணவி அவரது பெற்றோரை பார்த்ததும் கதறி அழுதார். இதையடுத்து அவர்கள் அவரை சமாதானம் செய்தனர். வாலிபரை நம்பி எனது வாழ்க்கையை இழந்து விட்டேன் என்று கூறி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
வடசேரியில் வாடகை வீட்டில் மீட்கப்பட்ட மாணவிக்கு 17 வயதே ஆவதால் அந்த மாணவியரிடம் குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொண்டனர். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. மீட்கப்பட்ட மாணவியிடம் நடந்த சம்பவத்தை அவர்கள் கேட்டறிந்தனர். விசாரணையின் போது அவரது பெற்றோர் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
- முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் நடந்தது
- புனித அல்போன்சா சிறப்பு நவநாளும் தொடர்ந்து திருப்பலியும் கொடியிறக்கமும் நடைபெறுகிறது.
நாகர்கோவில் :
கேரளாவில் பரணங்ஙானம் என்ற இடத்தில் தூய அருட்சகோதரியாக வாழ்ந்த அல்போன்சா 1946-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ந்தேதி தனது 36-வது வயதில் விண்ணகம் சென்றார். அவரைத் திருத்தந்தை 16-ம் பெனடிக்ட் 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந்தேதி புனிதையாக பிரகடனப்படுத்தினார். அவரின் திருப்பெயரை தாங்கிய தமிழ்நாட்டில் முதல் திருத்தலமாக விளங்குவது நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தலமாகும்.
இத்திருத்தல திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் 8-ம் நாள் அல்போன்சா விண்ணகம் சென்ற நாளானதால் அதனை சிறப்பிக்கும் பொருட்டுக் கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இவர்களோடு இணைந்து இத்திருவிழா திருப்பலியை தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்தந்தை தாமஸ் பவுவத்துப்பறம்பில் அருட்தந்தை ஜாண் கென்னடி, அருட்தந்தை டைனிசியஸ், அருட்தந்தை செல்வராஜ், அருட்தந்தை அருளப்பர், அருட்தந்தை யுஜின், அருட்தந்தை மரிய சூசை வின்சென்ட், அருட்தந்தை அமலநாதன், அருட்தந்தை தார்சியுஸ், அருட்தந்தை குருசுகார்மேல், அருட்தந்தை செல்வராஜ், அருட்தந்தை டினு சி.எம்.ஐ., அருட்தந்தை மத்தேயு அறைக்கபலம் சி.எம்.ஐ. ஆகியோர் நிறைவேற்றினர். இத்திருவிழா திருப்பலியில் சாந்திதான் குழுவினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
திருவிழாவின் 10-ம் திருவிழா நாளை (30-ந்தேதி) நடைபெறுகிறது. அன்றைய தினம் இடுக்கி மறைமாவட்ட ஆயர் ஜாண் நெல்லிக்குந்நேல் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும் தொடர்ந்து புனித அல்போன்சா திருத்தேர்ப்பவனியும் நேரச்சை விருந்தும் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாளும் தொடர்ந்து திருப்பலியும் கொடியிறக்கமும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல பங்குத்தந்தை பேரருட்தந்தை சனில் ஜாண் பந்திச்சிறக்கல் மற்றும் துணை பங்குத்தந்தை அருட்தந்தை ஜார்ஜ் கண்டத்தில் ஆகியோராலும் மற்றும் விழாக்குழு தலைவர் அகஸ்டின் தறப்பேல், கைக்காரர்களான முனைவர் ராஜையன் மற்றும் ஜோ பெலிக்ஸ் மலையில் ஆகியோர் திருத்தல பங்கு மக்களோடு இணைந்து செய்து வருகின்றனர்.
- இடலாக்குடியில் அமைந்துள்ள எம்.டி.பி. கம்யூனிட்டி ஹாலில் வைத்து நடைபெறுகிறது.
- நாட்டிய கலை மணிகள் கவிதா மற்றும் நிஷா குழுவினர் செய்து வருகின்றனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் சைமன்ந கரை தலைமையிடமாக கொண்டு, அஞ்சுகிராமத்தில் கிளை நிறுவனம் அமைத்து செயல்பட்டு வருகிறது கவிதாலயா நாட்டியபள்ளி. இந்த நாட்டியபள்ளி குமரி மாவட்டத்தின் சிறந்த நாட்டிய பள்ளிக்கான விருதினை பெற்றுள்ள நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பள்ளியின் சலங்கை அணி விழா நாளை (30-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு கோட்டார் இடலாக்குடியில் அமைந்துள்ள எம்.டி.பி. கம்யூனிட்டி ஹாலில் வைத்து நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் 13 மாணவிகள் சலங்கை அணி செய்ய உள்ளனர். நிகழ்ச்சி யில் விஜய் வசந்த் எம்.பி., புதுச்சேரி சங்கீதா சலங்கை நாட்டியாலயா இயக்குனர் கலைமாமணி ராஜமா ணிக்கம், புதுச்சேரி கலை ஆலயம் பைன் ஆர்ட்ஸ் இசை இயக்குனர் மற்றும் நாட்டிய ஆராய்ச்சி மேற்பா ர்வையாளர் கலைமாமணி மரிய ஸ்டெல்லா, சென்னை உயர்நீதி மன்ற வக்கீல் சிவகுமார் சிவாஜி, பாரத கலைமாமணி சூசடிமா சூசன் (கத்தார்), அழகிய பாண்டிபுரம் அனுகிரஹா சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் சதீஷ்குமார், மெற்றில்டா சதீஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்துகொள்கி ன்றனர்.
திருச்சி கலை காவேரி கலைக்கல்லூரி இயக்குனர் மற்றும் செயலாளர் அருட்தந்தை லூயிஸ் பிரிட்டோ கலந்துகொண்டு சலங்கை பூஜை செய்யும் குழ ந்தை களை ஆசீர்வதிக்கின்றார்.
கவிதாலயா நாட்டிய பள்ளியில் பரதம், வாய்பாட்டு, மேற்கத்திய நடனங்கள் முறையே பயிற்றுவிக்கப்படுகின்றது. ஆண்டு தோறும் தேர்வுகள் நடத்தப்படுகிறது. குளோபல் ஆர்ட்ஸ் அகாடமி (யுகே), அமெரிக்கா முத்தமிழ் யூனிவர்சிட்டி (யுஎஸ்ஏ) ஆகிய பல்கலைக்கழகத்தின் கீழ் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
பட்டயபடிப்பு முடிக்கும் தருவாயில் இருக்கின்றவர்களுக்கு ஆசிரியர் பயிற்சியும் அளித்து அத ற்கான தகுந்த நடத்தி சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாணவிகளுக்கு பரதநாட்டியத்தில் முறையே பயிற்சி அளித்து சலங்கை பூஜை அதனை தொடர்ந்து அரங்கேற்றமும் செய்து வைக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை நாட்டிய கலை மணிகள் கவிதா மற்றும் நிஷா கண்காணிப்பில் கவிதாலயா விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
- திருட்டு புகாரில் தலைமறைவானவர் என தகவல்
- குளச்சல் வாலிபரை காரில் தூக்கிச் சென்ற விவகாரம்
கன்னியாகுமரி :
குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பு பகுதி பரபரப்பாக காணப்பட்ட இரவு 7 மணியளவில் காரிலிருந்து இறங்கிய கும்பல் ஒரு வாலிபரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றது. கடத்தப்பட்ட வாலிபர் போட்ட சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், நடப்பது என்ன என்று யோசிப்பதற்குள் அந்தக் கார் அங்கிருந்து மாயமாய் மறைந்து விட்டது. இந்த சம்பவம் அங்கு பதட்டத்தை ஏற்படுத்தியது.
இதுபற்றி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் தேவ ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசா ரணை நடத்தினர். கடத்த லுக்கு பயன்படுத்திய கார் கேரள மாநில பதிவு எண்ணை கொண்டது என போலீசாரிடம் தெரிவித்த னர்.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் சோதனைச்சா வடிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இதன்பயனாக புதுக்கடை பகுதியில் அந்த கார் சிக்கியது. கடத்தப்பட்ட வாலிபரையும் அவரை கடத்திய கும்பலையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று கருங்கல் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை விசாரணை நடத்தினார்.
இதில் கடத்தப்பட்ட வாலிபர், குளச்சல் துறை முகத் தெருவை சேர்ந்தவர் என்பதும், அவர், கேரளா வில் விசைப்படகிலிருந்து ₹.40 ஆயிரம், ஜி.பி.எஸ். மற்றும் ஓயர்லஸ் கருவிகளை திருடிவிட்டு குளச்சல் தப்பி வந்தவர் என்றும் தெரிய வந்தது. இது குறித்து கேரள விசைப்படகினர் பள்ளித் தோட்டம் ேபாலீஸ் நிலை யத்தில் புகார் செய்தனர்.ஆனால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
இதனால் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், வாலிபரை பிடித்து பள்ளித்தோட்டம் போலீசில் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் குளச்சல் வந்து வாலிபரை காரில் கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து பள்ளித்தோட்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட் டது. அவர்கள் கருங்கல் போலீஸ் நிலையம் வந்தனர். அப்போது திருட்டு வழக்கு உண்மை தான் என கூறியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து கடத்தல் கும்பலையும் கடத்தப்பட்ட வாலிபரையும் கருங்கல் போலீசார், கேரள போலீ சாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் விசாரணைக்காக கேரளா அழைத்துச் செல்லப்பட்டனர்.
- வனத்துறை நடவடிக்கை எடுக்குமா?
- காலை, மாலையில் தெரு பகுதியில் நடந்து வரும் மாணவ-மாணவிகளை விரட்டி வருகிறது.
கன்னியாகுமரி :
ஆரல்வாய்மொழி, வடக்கூர் கீழத்தெரு, மேலத்தெரு கிறிஸ்து நகர், மேற்கு காந்திநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாக குரங்குகள் நடமாடி வருகிறது.
மின்கம்பங்களில் ஏறி குதித்து விளையாடுவதும், கேபிள் வயர்களை அறுத்து நாசம் செய்து வருவது மட்டுமல்லாமல், வீட்டுக்குள் புகுந்து பொருட்களை தூக்கி ஓடுவது, காலை, மாலையில் தெரு பகுதியில் நடந்து வரும் மாணவ-மாணவிகளை விரட்டி வருகிறது.
இதுகுறித்து வனத்துறை யிடம் தகவல் தெரி விக்கப்பட்டது. எனினும் குரங்குகளை பிடிக்க முன்வரவில்லை. இதனால் பொதுமக்கள் படும் அவதி அடைந்து வரு கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஆரல்வாய்மொழி பகுதி களில் பெரும் அச்சத்தை உருவாக்கி வரும் குரங்கு களின் அட்டகாசத்தை கட்டுப்ப டுத்த வனத்துறை யினர் முன்வர வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
- தினமும் குளிப்பதற்கு வீட்டின் அருகில் உள்ள குளத்தில் குளிக்க செல்வது வழக்கம்
- டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது சார்லெட் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது
கன்னியாகுமரி :
திருவட்டார் அருகே ஆறாம்விளாகம், கண்ணணூர் பகுதியை சேர்ந்தவர் நேசைய்யன் (வயது 63). இவருக்கு சார்லெட் என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
சார்லெட்டுக்கு கடந்த 5 ஆண்டுகளாக உடல்நிலை பாதிப்பு இருந்தது. இதற்காக இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் தினமும் குளிப்பதற்கு வீட்டின் அருகில் உள்ள குளத்தில் குளிக்க செல்வது வழக்கம்.
நேற்றும் சார் லெட் வழக்கம் போல் குளத்தில் குளிக்க சென்றவர் கால் தவறி குளத்தில் விழுந்து விட்டார். இதனை அந்த வழி யாக சென்ற வர்கள் பார்த்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் சார்லெட்டை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது சார்லெட் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இது குறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.]
- வருகிற 5-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது
- தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:-
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000-ம் வழங்கும் திட்டத்துக்கான முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் கடந்த 24-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட பதிவு முகாமில் விண்ணப்பம் பதிவு செய்யாதவர்கள் வருகிற 3, 4-ந்தேதிகளில் தங்கள் நியாய விலைக்கடை முகாம்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம், வருகிற 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. 2-ம் கட்ட முகாமில் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்ய முடியாமல் போனவர்கள், வருகிற 15-ந்தேதி, 16-ந்தேதிகளில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். இரு கட்ட முகாம்கள் அரசு விடுமுறை நாட்களிலும் நடைபெறும்.
அதன்படி முதற்கட்ட முகாமிற்கான நாட்களில் இன்று (29-ந்தேதி), நாளை (30-ந்தேதி) ஆகிய நாட்களில் அகஸ்தீஸ்வரம், தோவாளை ஆகிய வட்டங்களில் அனைத்து நியாய விலை கடைகள் மற்றும் கல்குளம் வட்டத்தில் 126 நியாய விலை கடைகள் இயங்கும்.
இதேபோல் 2-ம் கட்ட முகாம் நடைபெறும் நாட்களில் வருகிற 5-ந்தேதி (சனி), 6-ந்தேதி (ஞாயிறு), 12-ந்தேதி (சனி), 13-ந்தேதி (ஞாயிறு), 15-ந்தேதி (சுதந்திர தினம்), 16-ந்தேதி (உள்ளூர் விடுமுறை) திருவட்டார், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் வட்டங்களில் அனைத்து நியாய விலைக்கடைகள் மற்றும் கல்குளம் வட்டத்தில் 49 நியாய விலை கடைகள் செயல்படும். முகாம் நடைபெறும் நாட்களில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆடுகளை அடைத்து வைத்ததன் மூலமாக புலி நடமாட்டம் குறைந்துள்ளது
- தற்போது சிற்றாறு பகுதியை சுற்றி அனைத்து காமிராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி
நாகர்கோவில் :
சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் குடி யிருப்புகள் பகுதியில் புலி நடமாட்டம் இருந்ததால் பொதுமக்கள் அச்ச மடைந்தனர். அந்த பகுதியில் உள்ள ஆடு, மாடுகளை புலி கடித்து கொன்றது.
இதையடுத்து புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்ட னர். அங்கேயே முகாமிட்டு வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் புலி சிக்கவில்லை. தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்ததையடுத்து தேனியில் இருந்து எலைட் படையினரும் களக்காட்டில் இருந்து டாக்டர் குழுவினரும் வரவழைக்கப்பட்டு தேடும்பணி நடந்தது.
2 இடங்களில் கூண்டு அமைக்கப்பட்டதுடன் 50 இடங்களில் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்டு தேடும் பணி நடந்து வருகிறது. சத்தியமங்கலத்தில் இருந்து நவீன காமிரா கொண்டு வரப்பட்டு இரவு நேரங்களில் புலி நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். ட்ரோன் காமிரா மூலமா கவும் கண்காணிப்பு பணி நடந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக புலி நடமாட்டம் இல்லாத நிலை உள்ளது. வனத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் புலி நடமாட்டம் குறைந்தது. இதையடுத்து புலியை பிடிக்க வனத்துறையினர் புதுவியூகம் மேற்கொண்ட னர். ஆட்கள் நடமாட்டத்தை குறைத்தால் மட்டுமே புலியை பிடிக்க முடியும் என்று முடிவு செய்தனர்.
இதனால் தற்போது தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எலைட் படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர். டாக்டர் குழுவினர் மட்டும் கண்காணித்து வருகிறார்கள். தற்போது சிற்றாறு பகுதியை சுற்றி அனைத்து காமிராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை சிற்றாறு காலனி பகுதியில் அந்த பகுதி மக்களுடன் வனத்துறை யினர் ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் வன அதிகாரி இளையராஜா மற்றும் வனத்துறை அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர். புலியை பிடிப்பதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து வன அதிகாரி இளையராஜா கூறுகையில், புலி நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். ஆடுகளை அடைத்து வைத்ததன் மூலமாக புலி நடமாட்டம் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக புலி நடமாட்டம் தென்படவில்லை. இதனால் தற்காலிகமாக தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட் டுள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.
- காய்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்தது
- பீன்ஸ் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது
நாகர்கோவில் :
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக தக்காளி யின் விலை ஏறுமுக மாக இருந்து வருகிறது. குமரி மாவட்டத்தி லும் தக்காளி யின் விலை அதிகமாக உள்ளது.
தக்காளியின் விலை அதிகரித்து வருவதையடுத்து அதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண் டது. ரேஷன் கடைகளில் தக்காளி சப்ளை செய் யப்பட்டு வந்தது. நாகர்கோவில் நகரில் ஒரு சில ரேசன் கடைகளில் சில நாட்கள் மட்டுமே தக்காளி சப்ளை செய்யப் பட்டு வந்த நிலையில் தற்போது அங்கு தக்காளி சப்ளை செய்யப் படவில்லை. நாகர்கோவில் மார்க்கெட்டு களில் தக்காளி யின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது.
ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்பட்ட நிலையில் மீண்டும் விலை உயர தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோ ரூ.10 உயர்ந்து ரூ.140 ஆனது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிலோ ரூ.20 உயர்ந்து ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணம் வெளியூர்களில் இருந்து வரும் தக்காளிகளின் வரத்து குறைவாக உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் இருந்து வழக்கமாக வரக்கூடிய தக்காளியை விட மிக குறை வான அளவில் தக்காளிகள் விற்பனைக்கு வருகிறது.
உள்ளூர் பகுதிகளில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு வரவில்லை. இதனால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரி கள் தெரிவித்துள்ளனர். பூண்டு விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூ. 180-க்கு விற்கப்பட்ட பூண்டு நேற்று ரூ.200 ஆக உயர்ந்தது. இன்று மேலும் ரூ.20 உயர்ந்து கிலோ ரூ.220-க்கு விற்பனை ஆனது. கேரட், பீன்ஸ் விலைகள் கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது.
பீன்ஸ் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட் டது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்து உள்ளது. நாகர்கோவில் மார்க்கெட் டில் விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-
கேரட் ரூ.75, பீன்ஸ் ரூ.100, கத்தரிக்காய் ரூ.50, வழுதலங்காய் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.30, சேனை ரூ.70, மிளகாய் ரூ.80, தக்காளி ரூ.160, இஞ்சி ரூ.280, பூண்டு ரூ.220, சின்ன வெங்காயம் ரூ.120, தடியங்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20, புடலங்காய் ரூ.30, வெண்டைக்காய் ரூ.50-க்கு விற்கப்பட்டது.
காய்கறி விலை உயர்வால் இல்லத்தரசிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தக்காளியை பொறுத்த மட்டில் அதன் பயன்பாட்டை குறைத்து வருகிறார்கள். முன்பு ஒரு கிலோ தக்காளியை வாங்கி செல்லும் பொதுமக்கள் தற்போது 100 கிராம் தக்காளியை வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.






