search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Leopard Tiger"

    • வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணித்து வருகிறார்கள்.
    • தொழிலாளியை சிறுத்தை புலி தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சிறுத்தை புலி, புலிகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. சிலோன் காலனி பகுதியில் புலியின் அட்டகாசம் காரணமாக பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    அந்த பகுதியில் உள்ள ஆடு, மாடுகளை புலி கடித்துக் கொன்றது. இதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணித்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் கீரிப் பாறை வனப்பகுதியில் சிறுத்தை புலி அட்டகாசம் செய்து வருகிறது. அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சிறுத்தை புலி சுற்றி வருவதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் குமரி மேற்கு மாவட்டம் மோதிர மலை பகுதியில் ரப்பர் தோட்ட தொழிலாளி ஒரு வரை சிறுத்தை புலி தாக்கி உள்ளது. இந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குலசேகரம் அருகே உள்ள மோதிரமலை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). ரப்பர் பால்வெட் டும் தொழிலாளி. இவர் தினமும் காலை அவருக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்திற்கு செல்வது வழக்கம். இன்று காலையில் வழக்கம்போல் சிவக்குமார் அவரது ரப்பர் தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த பகுதி யில் திடீரென வந்த சிறுத்தை புலி சிவகுமாரை தாக்கியது. இதனால் சிவகுமார் கீழே விழுந்தார். இதில் அவருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. சிறுத்தை புலி தாக்கப்பட்டது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து 108 ஆம்பு லன்ஸ் மூலமாக சிவகுமாரை குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சாலைகள் மிக மோசமான நிலையில் கிடந்ததையடுத்து ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினார்கள்.

    சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. சிவக்குமாரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ரப்பர் தோட்ட தொழிலாளியை சிறுத்தை புலி தாக்கிய தகவல் வனத்துறையினருக்கு தெரிய வந்ததையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    அந்த பகுதியில் உள்ள சிறுத்தை புலியின் கால் தடத்தையும் ஆய்வு செய்தனர். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சிவகுமாரிடம் நடந்த சம்பவங்களை கேட்டு அறிந்தனர். தொழிலாளியை சிறுத்தை புலி தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×