என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்றதால் பரபரப்பு
    • நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருவதாக கூறினார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று காலை இளம்பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. அந்த பெண் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருவதாக கூறினார்.

    விசாரணையில் அவர் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்ததால் அவரை அங்கு அனுப்பி வைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    ஆனால் அந்த பெண் அங்கிருந்து செல்லாமல் பஸ் நிலையத்தில் சுற்றி வந்தார். பஸ் நிலையத்தில் பெண் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் வடசேரி போலீசார் அந்த பெண்ணை ரெயில் மூலமாக திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    சென்னையிலிருந்து நாகர்கோவில் வழியாக குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு வந்ததும் அதில் அந்த பெண்ணை ஏற்றி வைப்பதற்காக அவரை அழைத்து வந்தனர்.

    ஆனால் ரெயில் நிலையத்திற்கு வர மறுப்பு தெரிவித்த அந்த பெண் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார். ஒரு வழியாக குண்டுகட்டாக தூக்கி ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட் பாரத்திற்கு கொண்டு வந்ததும் அந்த பெண் பிளாட்பாரத்தில் உருண்டு புரண்டு ரகளை செய்தார்.

    போதை தலைக்கேறியதால் அந்த பெண் செய்வது என்ன என்று தெரியாமலேயே இருந்தார்.

    இதை பார்த்த ரெயில் பயணிகள் முகம் சுழித்த னர். ஒரு வழியாக அந்த பெண்ணை ரெயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே பெண் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் குடி போதை யில் தகராறில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    • காலை 10 மணி முதல் 12.30 மணி வரை கோவில் வளாகத்தில் வைத்து இலவச சித்த மருத்துவ முகாம்
    • சித்த மருந்து, மாத்திரைகள், எண்ணைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது

    கன்னியாகுமரி :

    பார்வதிபுரம், ஜூலை.30-

    நாகர்கோவில் எம்.எஸ்.எஸ். ஆசான் 17-வது நினைவு தினம் மற்றும் அவரது மனைவி பாப்பா 3-வது நினைவு தினத்தையும் முன்னிட்டு நாகர்கோவில் எம்.எஸ்.எஸ். ஆசான் அன் சன்ஸ்-ம், கிருஷ்ணன் கோவில் ஆதிபரா சக்தி சக்தி பீடமும் இணைந்து நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் யாதவர் தெருவில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் வைத்து நாளை (31-ந்தேதி) காலை 10 மணி முதல் 12.30 மணி வரை கோவில் வளாகத்தில் வைத்து இலவச சித்த மருத்துவ முகாம் நடத்துகிறது.

    எம்.எஸ்.எஸ். ஆசான் நினைவாக நடைபெறும் இந்த முகாமில் ஏராளமான சித்த மருத்துவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் நோய்கள் குறித்து கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்குகின்றனர். மேலும் முகாமின் போது சித்த மருந்து, மாத்திரைகள், எண்ணைகள் அனைத்தும் அங்கு வந்து ஆலோசனைகளை பெறும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை எம்.எஸ்.எஸ். ஆசான் அன் சன்ஸ், சிக்மா மெடிக்கல் டிரஸ்ட் மற்றும் சக்தி பீடத்தினர் செய்து வருவதாக எம்.எஸ்.எஸ்.ஆசான் அன் சன்ஸ் உரிமையாளர் மகாலிங்கம் என்ற பிரகாஷ் தெரிவித்தார்.

    மேலும் அவர் இந்த இலவச முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து பயன்பெறுமாறும் கேட்டுக் கொண்டார்.

    • மாவட்ட தலைவர் அய்யப்பன் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பிரசார வாகனம் ராமேஸ்வரத்திற்கு அனுப்பப்பட்டது.
    • பாரதிய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை தொடங்கினார். இதற்காக குமரி மாவட்ட பாரதிய ஜனதா பொருளாதார பிரிவு சார்பில் மாவட்ட தலைவர் அய்யப்பன் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பிரசார வாகனம் ராமேஸ்வரத்திற்கு அனுப்பப்பட்டது.

    பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ் கொடியசைத்து வாகனத்தை வழி அனுப்பி வைத்தார். இந்த விழிப்புணர்வு பிரசார வாகனம் நடைபயணம் முடியும் வரை தொடர்ந்து அனைத்து இடங்களிலும் உலா வரும்.

    மாவட்ட பொதுச்செ யலாளர் வக்கீல் ஜெகநாதன், பொருளாளர் முத்துராமன், நாகர்கோவில் மாநகராட்சி 46-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வீரசூர பெருமாள், மாநகர தலை வர்கள் ராஜன், வேணு கிருஷ்ணன், சிவசீலன், தோவாளை ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் வக்கீல் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முரளி மனோகர்லால், சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் ராஜ கோபால், மாவட்ட மகளிர் அணி தலைவி சத்திய ஸ்ரீ ரவி மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுராபிரிஜியா ஓட்டி வந்த தண்ணீர் டேங்க் ஏற்றி வந்த டெம்போ பன்னீர்செல்வம் மீது மோதியது
    • சிகிச்சை பலனின்றி பன்னீர் செல்வம் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி :

    தென்தாமரைகுளம் அருகே உள்ள முகிலன்குடியிருப்பை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 70). இவர் அங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 24-ந்தேதி பன்னீர் செல்வம் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரியில் இருந்து மணக்குடி சாலையில் முகிலன்குடியிருப்பு முத்தாரம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் கீழமணக்குடி அருகே உள்ள ஒரு தும்பும் மில்லில் வேலை பார்த்து வரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மதுராபிரிஜியா ஓட்டி வந்த தண்ணீர் டேங்க் ஏற்றி வந்த டெம்போ பன்னீர்செல்வம் மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பன்னீர் செல்வத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பன்னீர் செல்வம் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மூத்த மகள் அகிலா தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் வரவேற்றார்.
    • டியூரப்பாவின் மகள் பகவதி அம்மன் கோவிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்

    கன்னியாகுமரி :

    கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகள் பத்மாவதி தனது கணவர் விருபாட்சாவுடன் நேற்று இரவு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு வந்த அவரை நாகர்கோவில் தேவசம்தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் வரவேற்றார்.

    பின்னர் எடியூரப்பாவின் மகள் பகவதி அம்மன் கோவிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். கோவிலில் உள்ள ஸ்ரீ காலபைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்து உள்ள பகவதி அம்மன் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, இந்திரகாந்த விநாயகர் சன்னதி, பால சவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்ம சாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீ நாகராஜர் ஸ்ரீ சூரிய பகவான் ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    • 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்தனர்
    • களியக்காவிளை வழியாக கேரளாவிற்கு கடத்தல்

    கன்னியாகுமரி :

    தமிழக-கேரள எல்லைப் பகுதி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்எண்ணை கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று தனிப்பிரிவு போலீசார் களியக்காவிளை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக மீன் ஏற்றி செல்லும் கூண்டு கட்டிய டெம்போ ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த டெம்போவை நிறுத்து மாறு சைகை காட்டியும் டெம்போ நிற்காமல் சென்று விட்டது.

    அந்த வாகனத்தை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மேக்கோடு பகுதியில் வைத்து துரத்தி பிடித்தனர். ஆனால் டிரைவர் வாகனத்தை சாலையில் நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். வாகனத்தை சோதனை செய்து பார்த்தபோது சுமார் 6 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல் வாகனத்தையும், அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அவர்கள் கடத்தல் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும், கடத்தல் வாகனத்தை தாலுகா அலுவல கத்திலும் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய ஓட்டுநர் யார்? ரேஷன் அரிசி கடத்தலில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோ ணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கல்லூரி விதிகளை முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டிப்ளமோ முதலாம் ஆண்டு பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே உள்ள பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் பொறியியல் டிப்ளமோ முதலாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி தலைவர் நீலமார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வர் ராஜேஷ், துணை முதல்வர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.பேராசிரியர் ரெஜினா வரவேற்றார்.

    வெற்றிக்கான வழி, மனிதனுடைய மதிப்புகள், பாட புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட கல்வி அறிவு, யோகா பற்றிய செயல்முறை பயிற்சி, ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள பிரச்சினைகள், பிளம்பிங் மற்றும் தளவமைப்பு திட்டமிடுதல், செயற்கை நுண்ணறிவு, வாகனங்களின் பாகங்கள் பற்றிய விளக்கங்கள் ஆகிய தலைப்புகளில் பல்வேறு பேராசிரியர்களால் சிறப்புரை வழங்கப்பட்டது.

    பேராசிரியர் மீனாட்சியம்மாள் கல்லூரி விதிகளை முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளிடம் எடுத்துரைத்தார். பேராசிரியர் வெராசலின் பேபி நன்றி கூறினார். மாணவி ரெசிபா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டிப்ளமோ முதலாம் ஆண்டு பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • ஹிட்டாச்சி எந்திரம் மூலமாக மணல் தோண்டி அகற்றம்
    • ரெயில்வே கேட்டை 4 மாதம் மூடி வைத்திருந்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாவர்கள்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே ஊட்டு வாழ்மடம் கருப்புக் கோட்டை, இலுப்பையடி போன்ற கிராமங்கள் உள்ளன. இங்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் உள்ள வர்கள் ஊட்டுவாழ்மடம் அருகே உள்ள ரெயில்வே கோட்டை கடந்து தான் நாகர்கோவிலுக்கு வந்தனர். இந்த ரெயில்வே கேட் தினமும் 40 முதல் 50 தடவை மூடப்படுவதால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவி கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். அவசர சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரிக்கு செல்பவர்களும் இந்த கேட்டில் சிக்கி கஷ்டப்பட்டு வந்தனர்.

    எனவே இந்த பகுதியில் சுரங்கப்பாதையில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதை யடுத்து ஊட்டுவாழ்மடம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பணி களை மேற்கொள்வதற்காக அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டை 4 மாதங்கள் மூடப்படும். எனவே பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது.

    ரெயில்வே கேட்டை 4 மாதம் மூடி வைத்திருந்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாவர்கள். 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும். எனவே தற்போது உள்ள ரெயில்வே கேட்ட அருகே தற்காலிக ரெயில்வே கேட் அமைத்து தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று ஊட்டுவாழ் மடம் பகுதியில் தற்காலிக ரெயில்வே கேட் அமைப்ப தற்கான பணிகள் நடந்தது. தற்பொழுது அந்த பகுதியில் தற்காலிக ரெயில்வே கேட் அமைக்கப்பட்டதையடுத்து சுரங்கப்பாதை அமைக்கப் பட உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதைத்தொ டர்ந்து சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் ஜே.சி.பி., ஹிட்டாச்சி எந்திரங்கள் மூலமாக மணல் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த சுரங்கப்பாதை 8 மீட்டர் நீளத்திலும் 4.5 மீட்டர் உயரத்திலும் அமைக் கப்படுகிறது. 80 மீட்டர் நீளம் கொண்டதாகும்.இந்த சுரங்கப்பாதை பாதைக்குள் மழை காலத்தில் தண்ணீர் தேங்காத வகை யில் அமைக்கவும் பஸ்கள் உள்பட கனரக வாகனங்கள் செல்லும் வகையிலும் அமைக்க ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. பகலில் போதிய வெளிச்சமாக இருக்கும் வகையில் சுரங் கப்பாதை அமைக்கப்படு கிறது. 2 புறங்களிலும் வேகத் தடை அமைக்கப்படு கிறது.

    இந்த சுரங்கப்பாதை பணியை 6 மாத காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள் ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.பங்கேற்பு
    • உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்தும் வன்முறைகளை தடுக்க தவறிய மத்திய, மாநில பாரதிய ஜனதா அரசுகளை ராஜினாமா செய்ய கோரியும் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் ஆட்டோ நிறுத்தத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், கிள்ளியூர் எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ் குமார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    விஜய் வசந்த் எம்.பி., குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில சிறப்பு பேச்சாளர் பால்துரை சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்டு மணிப்பூர் கலவரத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய மற்றும் மாநில பாரதிய ஜனதா அரசுகளை கண்டித்து கண்டன உரையாற்றினார்.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் டைட்டஸ், மாநில பொதுச் செயலாளர் ஆஸ்கார் பிரடி, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய் மற்றும் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள், துணை அமைப்புகளின் மாவட்ட, வட்டார தலைவர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர் மின் வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது
    • பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி :

    குழித்துறை உப கோட்டத் திற்குட்பட்ட புதுக்கடை, கருங்கல், கொல்லங்கோடு, நம்பாளி, ரவிபுதூர்கடை, கிள்ளியூர், பள்ளியாடி, சூரியகோடு மின் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளில் நாளை மறுநாள் 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர் மின் வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழித்துறை மின் வினியோக செயற்பொ றியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    நாளை மறுநாள் (1-ந்தேதி) தொழிக்கோடு, காட்டுவிளை, மேல் மிடாலம், பருத்திவிளை, பெரியவிளை, கிள்ளியூர், சடையன்குழி, மூலைதட்டு, பண்டாரவிளை, கூரன் விளை ஆகிய பகுதிகளிலும்,

    2-ந்தேதி வெள்ளை யம்பலம், செம்பருத்திகுளம், காட்டுவிளை, கிராத்தூர், கரியறை, அஞ்சாடி, கண்ணனூர், வெள்ளி கோடு, தாமரைகுளம், ஊசிகோடு, வெட்டுவிளை, செம்மான்விளை, குழிச் சாணி ஆகிய பகுதி களிலும்,

    3-ந்தேதி பரவை, செந்தறை, இனை யம்தோப்பு, தேரிவிளை, பிடாகை, பாலமடம், வாழைதோட்டம், இலவு விளை, நெல்வேலி, கல்லுக்கூட்டம், புல்லாணி, நுள்ளி, தட்டான்குளம், கஞ்சிக்குழி உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை ஏற்படுகிறது.

    இதேபோல் 4-ந்தேதி அனந்தமங்கலம், தைவிடை, கூட்டாலுமூடு, பைங்குளம், நீர்விளாகம், வாழ் வச்சகோஷ்டம், ஆப்பிகோடு, கண்ணத் தான்குழி, வாறுத்தட்டு, கல்லுமூடு ஆகிய பகுதி களிலும்,

    5-ந்தேதி காப்புக்காடு, சென்னிதோட்டம், வயக்கரை, மாராயபுரம், விளாத்திவிளை, நடுத்தேரி, குடுக்கச்சிவிளை, வெள்ளி யாவிளை, காக்கவிளை" பி.பி.எம் பிடாகை, தக்காளிவிளை, பஞ்ச விளை, கருமரம், பிங்குளம், வடக்குமாங்கரை, முருங்க விளை, கரிக்கி ஆகிய பகுதிகளிலும், 7-ந்தேதி அம்சி, வேட்டமங்கலம், வழுத்தூர், கும்பக்கோடு, எடப்பாடு, ததையோபுரம், இரவி புத்தம் துறை, சின்னத்துறை, சடையங் கால், வண்டல் ஆகிய பகுதிகளிலும்,

    8-ந்தேதி வெள்ளங் கொட்டி, பொட்ட குழி, பூட்டேற்றி, கீரியான் தோட்டம், தாழை யன்கோட்டை, காட்டுக்கடை, பாலவிளை, இறையான் தோட்டம், அரசகுளம், கோட்டவிளை, கோலவிளை, வளனூர் பகுதிகளிலும் மின்தடை ஏற்படுகிறது.

    மேலும் 9-ந்தேதி தேங்காய் பட்டணம், பனங்கால்முக்கு, ராமன் துறை, முள்ளுர்துறை, ஆலன்கோடு, பாறை குளம், சரல்முக்கு, காடுவெட்டி, கோழிப்போர்விளை ஆகிய பகுதிகளிலும்,

    10-ந்தேதி குற்றிப்பாறவி ளை, கானாவூர், மேல்மிடா லம், கைதவிளாகம், சுந்தரவனம், தளச் சான்விளை, கூவரவிளை உள்ளிட்ட பகுதிகளிலும்,

    11-ந்தேதி கீழ்குளம், வில்லாரிவிளை, பொத்தை யன்விளை, புத்தன்துறை, இனையம், ஓடக்கரை, சமத்துவபுரம், கலிங்கரா ஜபுரம், கோதேஸ்வரம், கண்ணனூர் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படுகிறது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வனத்துறை ஊழியர்கள் பிடித்து சென்றனர்
    • ரேஷன் கடையில் புகுந்த பாம்பை 1 மணி நேரம் போராடி பிடித்து சென்றனர்

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே முளகு மூடு பகுதியில் காட்டாத்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் முளகுமூடு ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    நேற்று மதியம் ரேஷன் பொருட்கள் வாங்க பொது மக்கள் அதிகமானோர் கூடியிருந்தனர். இந்நிலை யில் திடீரென 5 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று ரேஷன் கடைக்குள் புகுந்தது. இதனை கண்ட ஊழியர் உள்பட பொதுமக்கள் அலறி அடித்து வெளியே ஓடினர்.

    இதுதொடர்பாக கவுன்சி லர் பிரேமசுதா தீய ணைப்புதுறைக்கும், வனத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். குலசேகரம் வன அலுவலர் ராஜா மற்றும் வன துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து ரேஷன் கடையில் புகுந்த பாம்பை 1 மணி நேரம் போராடி பிடித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அரிசி கொம்பன் யானை உலா வரும் காட்சிகள் அவ்வப் போது சமூக வலைதளங்களில் பரவியது.
    • கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்த வனத்துறையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    கேரள மாநிலம் இடுக்கி சின்னக்கனால் பகுதியில் அரிசி கொம்பன் யானை அட்டகாசம் செய்தது. இதைய டுத்து அரிசி கொம்பன் யானையை தமிழ்நாடு கொண்டு வரப்பட்டு பெரியார் புலிகள் காப்ப கத்தில் முல்லைக்கொடி வனப்பகுதியில் விட்டனர். அதன்பிறகு அரிசி கொம்பன் யானை கம்பம் பகுதியில் சுற்றி திரிந்தது. தொடர்ந்து அந்த பகுதியில் அட்டகாசம் செய்து வந்ததையடுத்து மயக்க ஊசி செலுத்தி யானையை நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வனப்பகுதிக்கு கொண்டு வந்தனர்.

    கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி அப்பர் கோதையாறு பகுதியில் அரிசிகொம்பன் யானை விடப்பட்டது. யானை கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். யானையை குடியிருப்பு பகுதிகளுக்குள் விடாமல் தடுக்கும் வகையில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டு கண்கா ணிப்பு பணியை மேற் கொண்டனர். அரிசி கொம்பன் யானை உலா வரும் காட்சிகள் அவ்வப் போது சமூக வலைதளங்களில் பரவியது.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு அரிசிகொம்பன் யானை மெலிந்த நிலையில் காணப்படுவதாக புகைப்ப டம் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை தற்போது வனப்பகுதியில் புத்துணர்ச்சி யுடன் உலா வர தொடங்கி யுள்ளது. அரிசி கொம்பன் யானை வசித்து வரும் பகுதியில் 2 குட்டி யானைகள் உட்பட 10 யானைகள் உள்ளது.

    அந்த யானைகள் கூட்டத்துடன் சேர்ந்து அரிசி கொம்பன் யானை உலா வருகிறது. குற்றியாறு அணைப்பகுதி, அப்பர் கோதையாறு, முத்துக்கு ளிவயல் பகுதிகளில் தற்போது அரிசி கொம்பன் யானை சுற்றி வருகிறது.

    யானை கூட்டத்துடன் இணைந்து விட்டதால் அரிசி கொம்பன் யானையை கண்காணிக்க நியமிக்கப்பட்டி ருந்த வனத்துறையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

    ×