என் மலர்
கன்னியாகுமரி
- பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கன்னியாகுமரி :
இரணியல் அருகே நெய்யூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பரம்பை கண்ணோடு கொக்கோட்டிலிருந்து, சரல்விளை, பாளையம், பழவண்டான்கோணம் ஆகிய ஊர்கள் செல்ல ெரயில் வழித்தடத்தில் மேம்பாலம் அமைத்து தரும்படி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நெய்யூர் பேரூராட்சி தலைவர் பிரதீபா, கவுன்சிலர்கள் ராஜகலா, ஹரிதாஸ், வக்கீல் ஜெகன் ஆகியோர் தலைமையில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனையடுத்து இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன், குழித்துறை ெரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இஜி மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்
- மாலைமலர் செய்தி எதிரொலி
நாகர்கோவில் :
ஆரல்வாய்மொழி மற்றும் தேவ சகாயம் மவுண்ட் தேவாலயம் பகுதிகளில் குரங்குகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து தொடர்ந்து பொதுமக்களுக்கு தொந்தரவு செய்து வந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குரங்குகள் தொல்லை அதிகரிப்பது குறித்தும் அதை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் மாலை மலரில் செய்தி வெளியிடப்பட்டது. இந்தநிலையில் வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
வனத்துறையினர் அசோக், துரைராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த பகுதியில் கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை மேற் கொண்டனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் வைத்த கூண்டில் குரங்குகள் சிக்கியது. ஒரே நாளில் 46 குரங்குகள் சிக்கி உள்ளது. பிடிப்பட்ட குரங்குகளை அடர்ந்த காட்டுப்பகுதியில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- 4-ந்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது
- விழாவில் ஏராளமான பலவண்ண பட்டங்கள் பறக்க விடப்படுகின்றன
கன்னியாகுமரி :
குமரி மாவட்ட சுற்றுலாத்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து சுற்றுலா பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மற்றும் சொத்தவிளை கடற்கரை பகுதியில் பட்டம் பறக்க விடும் விழாவை வருகிற 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 3 நாட்கள் நடத்துகிறது.
கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் வருகிற 4-ந் தேதி பகல் 12 மணிக்கு நடக்கும் பட்டம் பறக்க விடும் விழாவை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைக்கிறார். அதனைத்தொடர்ந்து சொத்தவிளை கடற்கரை பகுதியில் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இந்த பட்டம் பறக்க விடும் விழா நடக்கிறது.
இந்த விழாவில் ஏராளமான பலவண்ண பட்டங்கள் பறக்க விடப்படுகின்றன. இந்த பட்டங்கள் வானத்தில் வர்ண ஜாலங்கள் காட்டுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார் மற்றும் உதவி சுற்றுலா அலுவலர் கீதா ராணி ஆகியோர் செய்து வருகிறார்கள்.
- பன்னீர் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து நிரப்பி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
- காலை 10 மணிக்கு உதயாஸ்தமன பூஜை மற்றும் அதிவாசஹோமம் நடக்கிறது.
கன்னியாகுமரி :
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இந்த மாதத்தில் 12 நாட்கள் களப பூஜை நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை இன்று (திங்கட்கிழமை) காலை தொடங்கியது. இதையொட்டி காலை 10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் கோவிலுக்கு வழங்கிய தங்க குடத்தில் சந்தனம், களபம், ஜவ்வாது, பச்சைக்கற்பூரம், அக்கி, இக்கி, புனுகு, பன்னீர் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து நிரப்பி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
மாத்தூர் மட தந்திரி சங்கரநாராயணரூ பூஜை யை நடத்தினார். பின்னர் அம்மனுக்கு எண்ணை, பால், பன்னீர், இளநீர், தேன், தயிர், களபம், சந்த னம், குங்குமம், பஞ்சா மிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு மேளதாளம் மற்றும் பஞ்சவாத்தியங்கள் முழங்க களபம் நிரப்பப் பட்ட தங்க குடத்தை கோவில் மேல்சாந்திகள் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மன் எழுந்தருளி யிருக்கும் கருவறைக்குள் கொண்டு சென்றார்கள். அங்கு தங்க குடத்தில் நிரப்பப்பட்ட களபத்தினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இந்த களப அபிஷேகத்தை கோவில் மேல்சாந்திகள் நடத்தினார்கள் . பின்னர் அம்மனுக்கு வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 11-30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திருவாவடு துறை ஆதினம் திருக்கயிலாய பரம்பரை 24-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருவாடுதுறை ஆதின நெல்லை மண்டல மேலாளர் ராமச்சந்திரன், சுசீந்திரம் கிளைமட பொறுப்பாளர் நாதன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாளை முதல் 11-ந் தேதி வரை௧ 2 நாட்கள் தொடர்ந்து காலை 10 மணிக்கு அம்ம னுக்கு களப அபிஷேகம் நடக்கிறது. களப பூஜை நிறைவடைந்த பிறகு 12-ந்தேதி காலை 10 மணிக்கு உதயாஸ்தமன பூஜை மற்றும் அதிவாசஹோமம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், குமரி மாவட்ட கோவில்களில் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்
- பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன
- தினமும் ஏராளமானோர் நாய் கடிக்கு ஊசி போட்டு செல்கிறார்கள்
நாகர்கோவில் :
வடசேரி பஸ் நிலை யம், அண்ணா பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, பறக்கை, கோட்டாறு, ஆசாரிபள்ளம் உள்ளிட்ட மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவை இறைச்சி கடைகளில் இருந்து கொட்டப்படும் இறைச்சி கழிவுகள், சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைக ளில் சிதறி கிடக்கும் உணவு பொருட்கள் மற்றும் திருமண மண்டபங்களில் இருந்து குப்பைகளில் கொட்டப்படும் மீதமுள்ள உணவுகளை தின்று வளர் கின்றன.
தற்போது தெரு நாய்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் உணவு கிடைக்காத வேளைகளில் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இரு சக்கர வாகனத்தில் செல்வோரை தூரத்தி செல்கிறது. அப்போது சிலர் சாலைகளில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். சிலரை தெரு நாய்கள் கடித்தும் உள்ளது. இது ஒரு புறம் இருக்க, சாலைகளின் குறுக்கே திடீரென நாய் புகுந்து விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வரும் சம்பவமும் நடக்கிறது. மேலும் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள் முடிகள் உதிர்ந்த நிலையில் நோய் வாய்பட்டும், காயங் களுடனும் காணப்படுகிறது. இவ்வாறு நோய்கள் பாதித்த நாய்கள் பொதுமக்கள் அருகில் வரும்போது அவர்கள் கூடுதல் அச்சம் அடைகின்றனர்.
மேலும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி, மாநகராட்சி நகர் நல மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் என தினமும் ஏராளமானோர் நாய் கடிக்கு ஊசி போட்டு செல்கிறார்கள்.
தெரு நாய்களின் தொல்லை அதிகம் உள்ள பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல அச்சம் அடைந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அந்த சாலையை விட்டு விட்டு தெரு நாய்கள் தொல்லை இல்லாத சாலை வழியாக சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே மாநகராட்சி கூட்டத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்த வலியு றுத்தப்பட்டுள்ளது.
அதனை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும், சமூக ஆர்வ லர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குடும்பம் குடும்பமாக மணற்பரப்பில் அமர்ந்து பொழுதை போக்கினர்.
- தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் ஐஸ் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கன்னியாகுமரி :
குளச்சல் சுற்று வட்டார பொதுமக்கள் மாலை வேளையில் குளச்சல் கடற்கரை வந்து பொழுதை கழித்து செல்வர். மாலை வேளையில் மணற்பரப்பில் அமர்ந்து சூரியன் மறையும் காட்சியை கண்டுகளித்து மாலை நேர கடற்கரை காற்று வாங்கி செல்வது வழக்கம்.
நேற்று மாலை குளச்சல் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பொது மக்கள் குளச்சல் கடற்கரை யில் குவிந்தனர். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதால் பெண்கள், சிறு வர்கள், பெரியவர்களின் கூட்டம் கடற்கரையில் நிரம்பி வழிந்தது. அவர்கள் நண்பர்கள், குடும்பம் குடும்பமாக மணற்பரப்பில் அமர்ந்து பொழுதை போக்கினர்.
சிறுவர்கள் மணற்பரப் பில் விளையாடி மகிழ்ந்த னர். அருகில் குளச்சல் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பூங்காவிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குளச்சல் கடற்கரையில் பொதுமக்கள் குவிந்ததால் குளச்சல் கடற்கரை மிகுந்த களைக்கட்டி காணப்பட்டது. இதனால் தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் ஐஸ் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.விடுமுறை நாளில் குளச்சல் கடற்கரையில் குவிந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.
- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், தாம்பரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டன.
- ரெயில் 1 மணி நேரம் தாமதமாக 8.15 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தடைந்தது.
நாகர்கோவில் :
சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு தினமும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர தாம்பரத்தில் இருந்து திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரெயில்கள் அனைத் தும் இரவில் சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலையில் நாகர்கோவில் வந்து சேரும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், தாம்பரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டன. ஆனால் நாகர்கோவில் நிலையத்திற்கு தாமதமாக வந்தது. காலை 5 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு நிலையம் வரவேண்டிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அரை மணி நேரம் தாமதமாக வந்தது.
தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரெயில் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் வர வேண்டும். ஆனால் இந்த ரெயில் 1 மணி நேரம் தாமதமாக 8.15 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தடைந்தது.
நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக காலை 8 மணிக்கு நாகர்கோவில் டவுன் நிலையத்தை வந்தடையும். ஆனால் இன்று சுமார் 3 மணி நேரம் தாமதமாக பகல் 11 மணிக்கு நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.
இதனால் அந்த ரெயிலில் வந்த பயணிகள் தவிப்புக்குள்ளானார்கள். அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு ரெயில் வந்து சேராததால் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. திருச்சியில் தண்டவாளம் பராமரிப்பு பணி நடப்பதால், ரெயில்கள் அனைத்தும் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் சென்னை சென்ற தென்மாவட்ட ரெயில்களும் பல மணி நேரம் தாமதமாக சென்றன.
- குமரி மேற்கு கடற்கரையில் தடைக்காலம் நிறைவடைகிறது
- 60 நாட்களாக மேற்கு மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.
கன்னியாகுமரி :
மீன்கள் இனப்பெருக்கத்திற்காக குமரி மாவட்ட கடல் பகுதியில் ஆண்டுக்கு 2 முறை மின்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ந்தேதிமுதல் ஜூன் 15-ந்தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்.
இந்த காலங்களில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள். அதன்படி மேற்கு கடற்கரை பகுதியில் விதிக்கப்படடிருந்த தடை இன்று நள்ளிரவுடன் முடிகிறது. கடந்த 60 நாட்களாக மேற்கு மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் இன்றுடன் தடை நீங்குவதால் அவர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். கடலுக்கு செல்வதற்கு தங்களின் படகுகளை பழுதுநீக்கி, புதுப்பித்து தயார் நிலையில் வைத்துள்ளனர். அவர்கள் நள்ளிரவுக்கு பிறகு கடலுக்கு செல்ல உள்ளனர்.
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு களுக்கு உதவி பங்குத்தந்தை ஷாஜன் பிரார்த்தனை செய்தார். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்கம் செய்திருந்தது.
குளச்சல் மீன் பிடித்துறை முகத்தில் விசைப்படகுகளில் மீன்பிடி தொழிலில் வடநாட்டு தொழிலாளர்கள் ஏராள மானோர் ஈடுபட்டு உள்ளனர். 60 நாட்கள் தடையையொட்டி, அவர்கள் தங்களின் ஊருக்கு சென்றிருந்தனர்.
இன்று நள்ளிரவு முதல் தடை நீங்குவதால் தங்களின் சொந்த ஊருக்கு சென்றி ருந்த வடமாநில தொழி லாளர்கள் கடந்த 3 நாட்க ளாக குளச்சல் திரும்பிய வண்ணம் இருந்தனர்.
- மோதிரமலை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி
- சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.
கன்னியாகுமரி ;
குலசேகரம் அருகே உள்ள மோதிரமலை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45), ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவரது ரப்பர் தோட்டத்திற்கு சிவக்குமார் நேற்று காலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் திடீரென வந்த சிறுத்தை புலி அவரை தாக்கியது. இதனால் சிவக்குமார் கீழே விழுந்தார். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிவக்குமார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று பா.ஜ.க. கன்னியாகுமரி மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சியின் 50-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், முன்னாள் ராணுவ வீரருமான அய்யப்பன், மாவட்ட பொதுச்செயலாளர் வக்கீல் ஜெகநாதன், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் சுபாஷ் மற்றும் குமரி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் ஆகியோர் நேரில் சென்று சிவக்குமாரை சந்தித்து சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.
- போலீஸ் ஏட்டு ரமேசை கம்பியால் தாக்கியதாக தெரிகிறது.
- 8 பேர் மீது கொலை முயற்சி உள்பட 9 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில் :
சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் சரவணன் தேரியை சேர்ந்த ரமேஷ் போலீஸ் ஏட்டாக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று தெங்கம்புதூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலய திருவிழா பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்தார்.
அப்போது அங்கு சிலர் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை ரமேஷ் தட்டி கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் தெங்கம் புதூரை சேர்ந்த விஷ்ணு குமார் (வயது 40), போலீஸ் ஏட்டு ரமேசை கம்பியால் தாக்கியதாக தெரிகிறது. விஷ்ணுகுமாருக்கு ஆதர வாக ஒரு கும்பல், போலீஸ் ஏட்டு ரமேசை சரமாரியாக தாக்கியதுடன் அவரது செல்போனையும் சேதப் படுத்தி உள்ளது.
இது குறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். படு காயம் அடைந்த ரமேசை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ் பத்திரியில் அனுமதித்தினர்.
இது குறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் தெங்கம்புதூரை சேர்ந்த விஷ்னுகுமார், பணிக்கன் குடியிருப்பை சேர்ந்த சிவனேசன், கொழுந்தி ராஜா, சக்திவேல், ராஜவேல் (50), வடக்கு அஞ்சுகுடி யிருப்பை சேர்ந்த ராஜன் (35), பணிக்கன்குடி யிருப்பை சேர்ந்த சங்கர், தெங்கம்புதூரை சேர்ந்த நந்தினி ஆகிய 8 பேர் மீது கொலை முயற்சி உள்பட 9 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள னர்.
இந்தநிலையில் தெங்கம்புதூரை சேர்ந்த விஷ்ணு குமார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை போலீசார் கைது செய்ததுடன் அவர் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தலைமறைவாகியுள்ள 7 பேரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். போலீசார் தேடுவதை அறிந்த அவர் கள் தலைமறைவாகி விட்டனர். இந்த நிலையில் 3 பேர் போலீசில் சிக்கி உள்ளனர்.
- 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது
- பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீரை எடுத்து வரும் சூழலுக்கு தள்ளப் பட்டுள்ளனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் நகர மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அணையில் தற்போது போதுமான அளவு தண்ணீர் இல்லா ததால் பொதுமக்களுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகரில் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாநகராட்சி கவுன்சி லர்கள் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாந கராட்சி கூட்டத்தில் வலியுறுத்தினார்கள். இதற்கு தீர்வு காணும் வகையில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் நட வடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் நாளுக்கு நாள் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வருகிறது. தண்ணீர் பிரச்சினை காரணமாக பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீரை எடுத்து வரும் சூழலுக்கு தள்ளப் பட்டுள்ளனர்.
மேலும் குடிதண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு வந்துள்ளனர். இதனால் ஏழை எளிய மக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மாநக ராட்சி மக்களுக்கு லாரிகள் மூலமாகவும் போர்வெல் மூலமாகவும் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அந்த தண்ணீர் போதுமான அளவு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது ரூ.239 கோடி செலவில் புத்தன்அணை குடிநீர் திட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே அந்த திட்டத்திற்கு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. ஒரு சில இடங்களில் நீர்க்கசிவு உள்ளதையடுத்து அதை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணன்கோவிலுக்கு கொண்டு வரும் தண்ணீரை பொதுமக்களுக்கு சப்ளை செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இதுவரை சப்ளை செய்யப்படவில்லை. விரைந்து அந்த திட்டத்தை செயல்படுத்தி பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன் சிலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் மேயர் மகேஷ் உடனடி நட வடிக்கையாக அதி காரிகளுடன் ஆலோசித்து புத்தன்அணை தண்ணீரை உடனடியாக வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
- குளச்சல் நகர அ.தி.மு.க. முடிவு
- மீனவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்
கன்னியாகுமரி :
குளச்சல் நகர அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நடந்தது. குளச்சல் நகர்மன்ற கவுன்சிலர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்ஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணை செயலாளர் குமாரதாஸ் வரவேற்று பேசினார். துணை செயலாளர் செர்பா தீர்மானங்கள் வாசித்தார்.
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் எஸ்.எம்.பிள்ளை, நகர முன்னாள் செயலாளர்கள் தாசீம், கில்லேரியன் மற்றும் நிர்வாகிகள் நாஞ்சில் அனீபா, சிசிலி, ஜெகன், ரமேஷ்பாபு, வெள்ளிச்சந்தை சரவணன், பெலிக்ஸ்ராஜன், ஆனக்குழி சதீஷ், ஆன்றனி, சுபல், தேவிசக்தி, சகாயராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் வருகிற ஆகஸ்டு 20-ந்தேதி மதுரை யில் நடக்கும் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு குளச்சலில் இருந்து 5 வேன்களில் 100-க்கும் மேற்பட்டோர் செல்வது, மீனவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ராஜ்ய சபாவில் வலியுறுத்தி பேசிய தம்பித்துரை எம்.பி.க்கு நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டது. நகர அவைத்தலைவர் சிட்டி சாகுல் அமீது நன்றி கூறினார்.






