என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • சொந்தமாக செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார்

    கன்னியாகுமரி :

    திருவட்டார், அருகே உள்ள குமரன்குடி, மேக்கா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் அஜிஸ் (வயது 55).

    இவர் அழகியமண்டபம் பகுதியில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும் அப்சல்,அன்சில் என்ற 2 மகன்களும் உள்ளனர். அன்சில் அந்த பகுதியில் சொந்தமாக செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த 5 ஆண்டுகளாக அஜிஸ் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனைக்கு சென்று சிகிச்சையும் பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இவரின் படுக்கை அறை வெகு நேரமாக திறக்கப்படவில்லை. உடனே மகன் அன்சில் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை திறந்து பார்க்கும் போது அஜிஸ் மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார்.

    உடனே அவரை கீழே இறக்கி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது அஜிஸ் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

    இது சம்பந்தமாக அன்சில், திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலிசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திரளான பெண் பக்தர்கள் தரிசனம்
    • ஆடி மாத பவுர்ணமி விழாவையொட்டி நடைபெறுகிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பவுர்ணமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த மாதத்துக் கான ஆடி பவுர்ணமி விழா இன்று நடக்கிறது.

    இதையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடந்தது.

    அதைத்தொடர்ந்து 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், 6 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையையும், நிவேத்திய பூஜையும் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்து டன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்த நிகழ்ச்சி நடந்தது.

    மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாராதனை நடக்கிறது. அதைத்தொ டர்ந்து இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேள தாளம் முழங்க 3 முறை வலம் வரச்செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அம்மனை வெள்ளி சிம்மா சனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அத்தாள பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பி னர்கள், குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்க ளின் கண்காணிப்பாளரும், பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தி னர் செய்து வருகிறார்கள்.

    • நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    • அம்மா உணவகம் கண்காணிக்கப்படும் என தலைவர் கூறினார்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் நகர்மன்ற சாதாரண கூட்டம் தலைவர் நசீர் தலைமையில் நடந்தது. துணை தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், நகராட்சி பொறியாளர் மணி, மேலாளர் சக்திகுமார், சுகாதார ஆய்வாளர் தங்கபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஆறுமுகராஜா பேசுகையில், குளச்சல் அரசு மருத்துமனையில் தேவையான மருத்துவர்கள் இல்லை. மருந்து தட்டுப்பா டும் உள்ளது. மருத்து வமனையை சீரமைக்க அனைத்து கவுன்சிலர்களும் மருத்துவமனையில் உள்ளிருப்பு செய்வோம் என்றார். தி.மு.க. கவுன்சிலர் ஷீலா ஜெயந்தியும், குளச்சல் மருத்துவமனையை சீரமைக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த தலைவர் நசீர், தேவையான மருத்துவ உபகரணங்கள் கேட்டு எழுதி கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    தி.மு.க. கவுன்சிலர் ரகீம் பேசுகையில், நகராட்சி நகரமைப்பு ஆய்வாளருக்கு தன் பணி குறித்து அடிப்படை தெரியவில்லை. நகராட்சி ஆக்கிரமிப்புக்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்றார். உடனே தலைவர், உரிய நடவடிக்கை எடுக்கும்போது கவுன்சி லர்கள் சிபாரிசுக்கு வரக்கூ டாது என்றார்.

    சுயேச்சை கவுன்சிலர் அன்வர் சதாத் பேசுகையில், சிலர் தெருக்களையே ஆக்கிரமித்து வைத்துள்ளனர் என குற்றம் சாட்டினர். அம்மா உணவகத்திலிருந்து பார்சல் வாங்கி சிலர் வெளியே விற்பனை செய்வ தாக காங்கிரஸ் உறுப்பினர் ரமேஷ் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அம்மா உணவகம் கண்காணிக்கப்படும் என தலைவர் கூறினார்.

    கூட்டத்தில் கவுன்சி லர்கள் பணிக்குருசு, ஜான் சன், ஜான் பிரிட்டோ, நசீர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    • 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
    • 100-க்கும் மேற்பட்ட புதிய படகுகள் தீ விபத்தில் இருந்து தப்பின.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. துறைமுகத்தின் அருகே படகு கட்டும் தளமும் உள்ளது.

    கேரள பதிவு எண் கொண்ட 2 கடத்தல் படகுகள், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு படகு கட்டும் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் இந்த படகுகளில் திடீரென தீ பிடித்தது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி மற்றும் நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்த னர். நாகர்கோவில் தீய ணைப்பு நிலைய அலுவலர் ஜான் தாமஸ் தலைமையிலும் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    நள்ளிரவு 1 மணி வரை போராடி தீ அணைக்கப்பட் டது. இருப்பினும் 2 கடத்தல் படகுகளும் தீயில் எரிந்து நாசமாயின. தீயணைக்கும் படை வீரர்களின் துரித நடவடிக்கையால் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட புதிய படகுகள் தீ விபத்தில் இருந்து தப்பின.

    கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    படகு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்பது மர்மமாக உள்ளது. யாராவது சிகரெட் துண்டை அணைக்காமல் போட்டதால் விபத்து ஏற்பட்டிருக்கலாமா? அல்லது மர்மநபர்கள் விஷம செயலில் ஈடுபட்டி ருக்கலாமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாகர்கோவிலில் நாளை நடக்கிறது
    • கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.தளவாய்சுந்தரம் அறிக்கை

    நாகர்கோவில்

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க சார்பில் தொண்டர்களின் எழுச்சியுடன் மாபெரும் வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநாடு சிறக்க ஆலோசனைகள் வழங்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலைமை கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டத் திற்கு நியமிக்கப்பட்ட தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நாளை (2-ந்தேதி) நாகர்கோவிலில் நடக்கிறது.

    காலை 10 மணிக்கு நாகர்கோவில் வாட்டர் டேங் ரோட்டில் உள்ள ஒய்.ஆர். மகாலில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்குகிறார். குமரி கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் டாக்டர் ராஜாராம் வரவேற்கிறார்.

    எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கிருஷ்ணதாஸ், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் சிவ செல்வராஜன், குமரி மேற்கு மாவட்ட அவைத்தலைவர் சிவகுற்றாலம், வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியண்ட்தாஸ், மாவட்ட இணை செயலா ளர்கள் மேரிகமலபாய், சாந்தினி பகவதியப்பன், மாவட்ட துணை செயலாளர்கள் சலாம், பார்வதி, அல்போன்சாள், மாவட்ட பொருளாளர்கள் திலக், சில்வெஸ்டர், நாகர்கோவில் பகுதி செயலாளர்கள் வழக்கறிஞர் ஜெயகோபால், வழக்கறிஞர் முருகேஷ்வரன், ஜெபின்விசு, நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர்கள் அக்சயா கண்ணன், கோபால சுப்பிரமணியம், சேகர், அனிலாசுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    கூட்டத்தில் அவைத் தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவருமான தமிழ் மகன் உசேன், நான் (தளவாய்சுந்தரம்) மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், ராஜன் செல்லப்பா, பச்சைமால், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவம், குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம் ஆகியோர் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

    முடிவில் மாமன்ற உறுப்பினர் எம்.ஸ்ரீலிஜா நன்றி கூறுகிறார்.

    கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி நிர்வாகிகள், மாநகர வார்டு நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி செயல் வீரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • தியேட்டர் வசதியுடன் வணிக வளாகம் கட்டப்படுகிறது
    • 28 பஸ்கள் நிற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகரில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம், அண்ணா பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம் உள்ளது. தற்பொழுது இந்த 3 பஸ் நிலையங்களையும் சீரமைக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் நாகர்கோவில் வடசேரி பகுதியில் நவீன பஸ்நிலையம் அமைக்க ரூ.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து புதிதாக பஸ் நிலையம் அமைப்ப தற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி மேயர் மகேஷ் பஸ் நிலையம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நவீன பஸ் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். பஸ் நிலையத்தை பொறுத்தமட்டில் 4 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. 28 பஸ்கள் நிற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பஸ்நிலையத்தின் மையப்பகுதியில் நான்கு மாடியில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. வணிக வளாகத்தில் தியேட்டர் அமைக்கலாமா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். மாநகராட்சி சார்பில் தியேட்டர் அமைக் கப்படும்போது பொதுமக்க ளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது அனை வரின் கருத்தாக உள்ளது. எனவே வெளியூர்களுக்கு இணையாக நாகர்கோவில் மாநகர பகுதியில் அமையும் வணிக வளாகத்திலும் தியேட்டர் அமைக்க வேண்டும் என்பதே அனை வரின் கோரிக்கையாக உள்ளது.

    இது மட்டும் இன்றி வணிக வளாகத்தில் அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் வாங்கும் வகையில் கடைகள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் டெண்டர் பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகத்தை குறிப்பிட்ட காலத்தில் கட்டி முடிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். புதிய பஸ் நிலையம் அமையும் போது பொதுமக்களுக்கு மிகவும் பய னுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

    • தமிழ்நாடு புத்தொழில்-புத்தாக்க இயக்கத்தை பயன்படுத்திங்கள்
    • மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (ஸ்டார்ட்அப் தமிழ்நாடு) மகளிர் திட்டம் இணைந்து கன்னியாகுமரி மாவட்டத் திற்குட்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் கை வண்ணத்தில் தயாரிக்கப் பட்ட உற்பத்தி பொருட்களை உலக சந்தைக்கு விற்பனை செய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடை பெற்றது. சுயஉதவிக்குழு வினர் தயாரித்து வைத்தி ருந்த பொருட்களையும் அவர் பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர், சுயஉதவி குழுவினரிடையே பேசியதாவது:-–சுய உதவி குழுவினர் பல்வேறு தொழில்கள் புரிந்து அவர்கள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்ற நோக்கில் வங்கிகள் மூலமாக கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படை யில் சுயஉதவி குழுக்கள் மாநிலத்தின் பொருளா தாரத்தில் சிறப்பான பங்கினை ஆற்றி வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து உலக சந்தைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை ஸ்டார்ட் அப் தமிழ்நாடு மேற்கொண்டு வருகிறது. அத்திட்டங்களை அனைத்து சுய உதவி குழுவினரும் பயன்படுத்தி உங்களுடைய உற்பத்தி பொருட்களை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும்.

    மேலும் குமரி மாவட் டத்திற்குட்ட பகுதி களில் செயல்பட்டு வரும் அனைத்து சுய உதவி குழுக்க ளும், குறுகிய வட்டத்திற்குள் நின்று விடாமல் பெரும் தொழில் நிறுவனங்களாக மாற்ற முன்வரவேண்டும். அதற்கான பயிற்சிகள் அளிப்பதற்கு ஸ்டார்ட்அப் பெரும் உதவியாக இருக்கும்.

    எனவே இந்த கருத்தரங்க முகாமில் கலந்து கொண்டுள்ள சுய உதவிக்குழுக்கள் அனைவரும் உங்களுடைய விற்பனையை விரிவாக்கி வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் பேபி ஜாண், திருநெல்வேலி மண்டல ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அலுவலர் ராகுல், இணை அலுவலர் ஜிஜின் துரை, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் லெட்சுமி காந்தன் மற்றும் 80-க்கும் அதிகமான சுயஉதவி குழுவினர், மகளிர் திட்டஅலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண் டார்கள்.

    • சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
    • தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    கன்னியாகுமரி :

    தெங்கம்புதூரில் நடந்த கிறிஸ்தவ ஆலய திருவிழா பாதுகாப்பு பணியில் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சரவணந்தேரியை சேர்ந்த ரமேஷ் ஈடுபட்டிருந்தார்.

    ஆலயத்தில் சப்பர பவனி நடந்தபோது டாஸ்மாக் கடையின் எதிரே இருந்த பெட்டிக்கடையில் இருந்து சிலர் மது அருந்தி கொண்டி ருந்தனர். அப்போது ஏட்டு ரமேஷ் அவர்களை கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த ஒரு கும்பல் போலீஸ் ஏட்டு ரமேஷை சரமாரியாக தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் தெங்கம்புதூரை சேர்ந்த விஷ்ணுகுமார் (40), பணிக்கன்குடியிருப்பை சேர்ந்த சிவனேசன், கொழுத்திராஜன் சக்திவேல், ராஜகோபால், சங்கர், விஷ்ணுகுமாரின் மனைவி நந்தினி, வடக்கு அஞ்சு குடியிருப்பை சேர்ந்த ராஜன் மற்றும் மர்ம நபர்கள் மீது கொலை முயற்சி உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கொழுத்திராஜன், ராஜன் இருவரை போலீசார் கைது செய்தனர்.

    விஷ்ணுகுமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்ததுடன் அவர் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மற்றவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று சிவனேசன் (50), ராஜகோபால் (54), லிங்கம் என்ற சுயம்புலிங்கம் (40) ஆகிய மேலும் 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் காட்சிகளை கைப்பற்றி, இந்த வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்தி லும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • உழவர் சந்தையை பார்வையிட்டார்
    • ரூ.55 கோடியில் புதிய பஸ் நிலையம்

    நாகர்கோவில் :

    வடசேரி பகுதியில் ரூ.55 கோடி செலவில் நவீன பஸ் நிலையம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து பஸ் நிலையம் அமைப்பதற்கான நடவ டிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையத்தின் மையப்பகுதி யில் புதிய பஸ் நிலையத்தை அமைக்க திட்டமிட்டு அதற் கான பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. புதிய பஸ் நிலையம் அமைக்கப் படும்போது வடசேரி கனக மூலம் சந்தையை மாற்றவும் முடிவு செய்துள்ளனர்.

    சந்தையை புதிதாக எந்த இடத்தில் அமைக்கலாம் என்பது குறித்தும் அதிகாரி கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஏற்கனவே வடசேரி மார்க்கெட்டை மேயர் மகேஷ் ஆய்வு செய்திருந்த நிலையில் இன்று காலை வடசேரி சந்தையில் மேயர் மகேஷ் மீண்டும் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் பேசினார். வியாபாரிகள் பாதிக்காத வகையில் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகேஷ் உறுதி அளித்தார்.

    இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் உழவர் சந்தை பகுதி, வடசேரி பஸ் நிலையத்தை யொட்டி உள்ள பூ மாலை மார்க்கெட்டின் பின்புற பகுதிகளை ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் வடசேரி பகுதியில் 4¼ ஏக்கரில் ரூ.55 கோடி செலவில் நவீன பஸ் நிலையம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பஸ் நிலையத்தில் வணிக வளாகமும் கட்டப்படுகிறது. இதற்கு விரைவில் டெண்டர் பிறப்பிக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் பஸ் நிலையத்தில் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தோம். பஸ் நிலையம் அமைக்கப் படும்போது அங்குள்ள சந்தையை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வியாபாரிகளின் வாழ்வாதா ரம் பாதிக்காத வகையில் சந்தையை மாற்ற ஆய்வு செய்து வருகிறோம். ஏற்கனவே அண்ணா பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் பூ மாலை மார்க்கெட்டின் பின்புற பகுதி மற்றும் உழவர் சந்தை பகுதி ஆய்வு செய்துள்ளோம். உழவர் சந்தை வேளாண் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அதிகாரிகளுடன் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது ஆணையாளர் ஆனந்த மோகன், என்ஜினீயர் பாலசுப்ரமணியன், மாநகர நல அதிகாரி ராம்குமார், மண்டல தலைவர் ஜவகர், சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை, கவுன்சிலர் கலாராணி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
    • கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் சீற்றம், நீர் உள்வாங்குவது போன்ற இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    பவுர்ணமி நாளான இன்றும் கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் திடீரென தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்து பாதிக்கப்பட் டது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த நிலையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. தொடர்ந்து 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியது. சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்தனர். கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின.

    • கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வாழ்த்தி பேசினார்.
    • சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டார்.

    நாகர்கோவில் புன்னைநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா வாழ்த்தரங்கம் நடைபெற்றது. திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் டேவிட்சன் தலைமை வகித்தார். திமுக மாநில மாநில மகளீரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் வரவேற்புரையாற்றினார். முன்னாள் வட்ட செயலாளர் ஜெரின் சிங், கவுன்சிலர் சோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மண்டபம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வாழ்த்தி பேசினார்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, கலைஞர் கருணாநிதியுடனான நினைவுகளை கூறி புகழாரம் சூட்டி பேசினார். நிறைவாக மூத்த கழக நிர்வாகிகளுக்கு சால்வை மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ், முன்னாள் எம்.பி. எம்.சி.பாலன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜன், லீமாரோஸ், நூர்முகமது, புஷ்பலீலா ஆல்பன், ரெஜினால்டு, காங்கிரஸ் நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீஸ் துணை சூப்பிரண்டு தொடங்கிவைத்தார்
    • கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடக்கிறது

    கன்னியாகுமரி :

    தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பழனியாபிள்ளை, பாடகர் கண்டன்விளை ராஜேந்தி ரன் ஆகியோர் புற்றுநோய் விழிப்புணர்வு, நீர் மேலாண்மை, பிளாஸ்டிக் தவிர்த்தல் குறித்தும் தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்கள் குறித்தும் மாநில அளவிலான மக்கள் நலத் திட்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் நடத்த முடிவு செய்தனர்.

    இதன் தொடக்க விழா கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இன்று காலை நடந்தது. போலீஸ் துணை சூப்பி ரண்டு மகேஷ்குமார் கொடி அசைத்து விழிப்புணர்வு பயணத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி சதீஷ்குமார், உதவி அலுவலர் கீதா ராணி, மற்றும் கிருஷ்ண மூர்த்தி, சிலுவை வஸ்தியான், சரண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, தேனி, மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், உள்பட பல்வேறு கடலோர மாவட்டங்கள் வழியாக வருகிற 14-ந்தேதி சென்னை சென்றடைகிறது. 15-ந் தேதி சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெறுகின்றனர். பின்னர் இவர்கள் அங்கு இருந்து புறப்பட்டு பல்வேறு மாவட்டங்கள் வழியாக 22-ந் தேதி மீண்டும் கன்னியாகுமரியில்வந்து இந்த பயணத்தை நிறைவு செய்கின்றனர்.

    மொத்தம் 23 நாட்கள் 3ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இந்த விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்படுகிறது. வழி நடுகிலும் பள்ளி கல்லூரி களில் மாணவர்களிடம் இவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறார்கள்.

    ×