search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெங்கம்புதூர் ஆலய திருவிழாவில் போலீசை தாக்கிய மேலும் 3 பேர் கைது
    X

    தெங்கம்புதூர் ஆலய திருவிழாவில் போலீசை தாக்கிய மேலும் 3 பேர் கைது

    • சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
    • தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    கன்னியாகுமரி :

    தெங்கம்புதூரில் நடந்த கிறிஸ்தவ ஆலய திருவிழா பாதுகாப்பு பணியில் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சரவணந்தேரியை சேர்ந்த ரமேஷ் ஈடுபட்டிருந்தார்.

    ஆலயத்தில் சப்பர பவனி நடந்தபோது டாஸ்மாக் கடையின் எதிரே இருந்த பெட்டிக்கடையில் இருந்து சிலர் மது அருந்தி கொண்டி ருந்தனர். அப்போது ஏட்டு ரமேஷ் அவர்களை கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த ஒரு கும்பல் போலீஸ் ஏட்டு ரமேஷை சரமாரியாக தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் தெங்கம்புதூரை சேர்ந்த விஷ்ணுகுமார் (40), பணிக்கன்குடியிருப்பை சேர்ந்த சிவனேசன், கொழுத்திராஜன் சக்திவேல், ராஜகோபால், சங்கர், விஷ்ணுகுமாரின் மனைவி நந்தினி, வடக்கு அஞ்சு குடியிருப்பை சேர்ந்த ராஜன் மற்றும் மர்ம நபர்கள் மீது கொலை முயற்சி உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கொழுத்திராஜன், ராஜன் இருவரை போலீசார் கைது செய்தனர்.

    விஷ்ணுகுமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்ததுடன் அவர் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மற்றவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று சிவனேசன் (50), ராஜகோபால் (54), லிங்கம் என்ற சுயம்புலிங்கம் (40) ஆகிய மேலும் 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் காட்சிகளை கைப்பற்றி, இந்த வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்தி லும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×