search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடசேரி காய்கறி சந்தையில் மேயர் மகேஷ் இன்று மீண்டும் திடீர் ஆய்வு
    X

    வடசேரி காய்கறி சந்தையில் மேயர் மகேஷ் இன்று மீண்டும் திடீர் ஆய்வு

    • உழவர் சந்தையை பார்வையிட்டார்
    • ரூ.55 கோடியில் புதிய பஸ் நிலையம்

    நாகர்கோவில் :

    வடசேரி பகுதியில் ரூ.55 கோடி செலவில் நவீன பஸ் நிலையம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து பஸ் நிலையம் அமைப்பதற்கான நடவ டிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையத்தின் மையப்பகுதி யில் புதிய பஸ் நிலையத்தை அமைக்க திட்டமிட்டு அதற் கான பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. புதிய பஸ் நிலையம் அமைக்கப் படும்போது வடசேரி கனக மூலம் சந்தையை மாற்றவும் முடிவு செய்துள்ளனர்.

    சந்தையை புதிதாக எந்த இடத்தில் அமைக்கலாம் என்பது குறித்தும் அதிகாரி கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஏற்கனவே வடசேரி மார்க்கெட்டை மேயர் மகேஷ் ஆய்வு செய்திருந்த நிலையில் இன்று காலை வடசேரி சந்தையில் மேயர் மகேஷ் மீண்டும் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் பேசினார். வியாபாரிகள் பாதிக்காத வகையில் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகேஷ் உறுதி அளித்தார்.

    இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் உழவர் சந்தை பகுதி, வடசேரி பஸ் நிலையத்தை யொட்டி உள்ள பூ மாலை மார்க்கெட்டின் பின்புற பகுதிகளை ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் வடசேரி பகுதியில் 4¼ ஏக்கரில் ரூ.55 கோடி செலவில் நவீன பஸ் நிலையம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பஸ் நிலையத்தில் வணிக வளாகமும் கட்டப்படுகிறது. இதற்கு விரைவில் டெண்டர் பிறப்பிக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் பஸ் நிலையத்தில் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தோம். பஸ் நிலையம் அமைக்கப் படும்போது அங்குள்ள சந்தையை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வியாபாரிகளின் வாழ்வாதா ரம் பாதிக்காத வகையில் சந்தையை மாற்ற ஆய்வு செய்து வருகிறோம். ஏற்கனவே அண்ணா பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் பூ மாலை மார்க்கெட்டின் பின்புற பகுதி மற்றும் உழவர் சந்தை பகுதி ஆய்வு செய்துள்ளோம். உழவர் சந்தை வேளாண் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அதிகாரிகளுடன் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது ஆணையாளர் ஆனந்த மோகன், என்ஜினீயர் பாலசுப்ரமணியன், மாநகர நல அதிகாரி ராம்குமார், மண்டல தலைவர் ஜவகர், சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை, கவுன்சிலர் கலாராணி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×