search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடசேரியில் 4 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை
    X

    வடசேரியில் 4 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை

    • தியேட்டர் வசதியுடன் வணிக வளாகம் கட்டப்படுகிறது
    • 28 பஸ்கள் நிற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகரில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம், அண்ணா பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம் உள்ளது. தற்பொழுது இந்த 3 பஸ் நிலையங்களையும் சீரமைக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் நாகர்கோவில் வடசேரி பகுதியில் நவீன பஸ்நிலையம் அமைக்க ரூ.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து புதிதாக பஸ் நிலையம் அமைப்ப தற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி மேயர் மகேஷ் பஸ் நிலையம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நவீன பஸ் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். பஸ் நிலையத்தை பொறுத்தமட்டில் 4 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. 28 பஸ்கள் நிற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பஸ்நிலையத்தின் மையப்பகுதியில் நான்கு மாடியில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. வணிக வளாகத்தில் தியேட்டர் அமைக்கலாமா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். மாநகராட்சி சார்பில் தியேட்டர் அமைக் கப்படும்போது பொதுமக்க ளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது அனை வரின் கருத்தாக உள்ளது. எனவே வெளியூர்களுக்கு இணையாக நாகர்கோவில் மாநகர பகுதியில் அமையும் வணிக வளாகத்திலும் தியேட்டர் அமைக்க வேண்டும் என்பதே அனை வரின் கோரிக்கையாக உள்ளது.

    இது மட்டும் இன்றி வணிக வளாகத்தில் அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் வாங்கும் வகையில் கடைகள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் டெண்டர் பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகத்தை குறிப்பிட்ட காலத்தில் கட்டி முடிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். புதிய பஸ் நிலையம் அமையும் போது பொதுமக்களுக்கு மிகவும் பய னுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

    Next Story
    ×